ஒவ்வொரு பொன்னுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் என்பது போல, ஒவ்வொரு உடல் அமைப்பு கொண்டிருக்கும் நபர்களுக்கும் ஒவ்வொரு உடல்நல நன்மைகள் மற்றும் அபாயங்கள் இருக்கின்றன.
இந்த உடல் அமைப்பு வகைகளை பொதுவாக நான்கு பிரிவாக காண்கின்றனர்,
ஹவர் கிளாஸ் (Hour Glass),
முக்கோணம் (Triangle),
தலைகீழ் முக்கோணம் (Inverted triangle),
சதுரம் (Square)
இந்த நான்கில் நீங்க எந்த வகை? உங்கள் ஆரோக்கியம் பற்றி அறியலாம் வாங்க…
ஹவர் கிளாஸ் (Hour Glass) பெரும்பாலும் இடிப்பு பகுதியில் வளைவுகள் இருக்கும் இந்த ஹவர்கிலாஸ் அமைப்பு பெண்களிடம் தான் காணப்படும். இந்த வகை உடல் அமைப்பு இருப்பவர்கள் மத்தியில் ஈஸ்ட்ரோஜென் அதிகம் சுரக்கும். கருவளம் அதிகம் இருக்கும். இது உடல் ஆரோக்கியத்தை சமநிலையில் வைத்துக் கொள்ள உதவும்.
அபாயம்! இவர்கள் உடலில் கொழுப்பு மார்பி, புட்டம், அக்குள் கீழ் பகுதியில் அதிகம் சேமிப்பாகும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, நீங்க ஆரோக்கிய உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும் மற்றும் சீரான உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.
முக்கோணம் (Triangle) சிலருக்கு தோள்பட்டை குறுகலாகவும், இடுப்பு அகலமாகவும் இருக்கும். இதை தான் முக்கோண உடல் அமைப்பு என கூறுகிறார்கள். இவர்களது கால்களில் அதிக கொழுப்பு சேராது. ஆனால், இதய நலனில் இவர்கள் அதிக அக்கறை எடுதுக்கொள்ள வேண்டும்.
அபாயம்! இடுப்பு பகுதியில் அதிக கொழுப்பு சேர்வதால் இதய பலவீனம், இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே, ஆரோக்கிய உணவுகளை மட்டும் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள் எண்ணெய் உணவுகளை குறைத்துக் கொள்ளுங்கள்.
தலைகீழ் முக்கோணம் (Inverted triangle) இந்த தலைகீழ் முக்கோண உடல் அமைப்பு கொண்டவர்களை தான் ஆரோக்கியமான நபர்கள் என கூறுகிறார்கள். தோள்கள் அகலமாகவும், வயிறு மற்றும் இடுப்பு பகுதி கம்மியாகவும் இருக்கும். பெரும்பாலான தடகள வீரர்கள் உடல் அமைப்பு இப்படி தான் இருக்கும். இவர்களுக்கு இடுப்பு பகுதியில் கொழுப்பு அதிகம் சேராது. இதனால் இவர்களுக்கு இதய பாதிப்புகள் அதிகம் வராது.
அபாயம்! இவர்களுக்கு கொழுப்பு அதிகம் மார்பு மற்றும் முகத்தில் தான் சேரும். எனவே, ஆரோக்கியமான டயட்டை மற்றும் சீராக பின்பற்றி வந்தால் போதுமானது.
சதுரம் (Square) இவர்களது உடல் கழுத்து கீழ் ஒரே மாதிரி தான இருக்கும். இடுப்பு பகுதியில் வளைவுகள் இருக்காது. இவர்களது வளர்சிதை மாற்றம் சீராக இருக்கும். இதனால் பெரும்பாலும் இவர்கள் உடல் எடை குறைவாக தான் இருப்பார்கள்.
அபாயம்! இவர்களது உடலில் கொழுப்பு வயிறு, புட்டம், மார்பு, முகம் என எல்லா இடங்களிலும் சேமிப்பாகும் வாய்ப்புகள் இருப்பதால் உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.