ஆபாசபடங்களை குழந்தைகள் பார்ப்பதன் மூலம் மனதில் தோன்றும் எதிர்மறையான எண்ணங்களால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
இளம் வயது பலாத்கார சம்பவங்கள் மற்றும் குழந்தைகள் எதிர்காலத்தில் ஓரினச்சேர்க்கை உறவை விரும்புவதற்கும் இவர்கள் சிறுவயதில் பார்க்கும் ஆபாச படங்களே காரணம் என கூறப்படுகிறது.
ஆபாச படங்களை பார்த்த குழந்தைகள் எப்படி அரக்கர்களாக மாறியுள்ளார்கள் என்பதற்கு உதாரணமான சம்பவங்கள் இதோ,
ஆபாச படங்களை பார்க்கும் பழக்கத்தை கொண்ட 14 வயது சிறுவன், தனது உடன் பிறந்த 13 வயது சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
16 வயது சிறுவன் இணையதளத்தில் அதிகமான ஆபாச படங்களை பார்த்தது கண்டுபிடிக்கப்பட்ட காரணத்தால், தனது சகோதரி மற்றும் மற்ற நபர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என நிர்பந்திக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளான்.
கனடாவை சேர்ந்த 4 வயது சிறுவன், ஆபாச படங்களை அதிகமாக பார்த்த காரணத்தால் தன்னுடன் பயிலும் சக மாணவனை பலாத்காரம் செய்துள்ளான்.
கடந்த 2013 ஆண்டு பிரித்தானியாவில் 5,000 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த குற்றங்களில் அதிகமாக ஈடுபட்டவர்கள் 18 வயதுக்கு குறைவானர்களே ஆவார், மேலும் 5 வயது சிறுவர்களும் இந்த குற்ற செயல்களை புரிந்துள்ளனர்.
2013 ஆம் ஆண்டு வெளியான புள்ளியல் தகவலின் படி 11 முதல் 18 வயதுக்குட்பட்ட 75 சதவீத குழந்தைகள் பாலியல் கல்வியை அறிந்துகொள்ளவதில் ஆர்வம் காட்டியுள்ளனர்.
சிறுவயதிலேயே, ஆபாசபடங்களை பார்ப்பதற்கு அடிமையாகிவிட்டால், அது ஒரு சாதாரணமான ஒன்று என அவர்களது மனதில் பதிய ஆரம்பித்து பல்வேறு குற்றசெயல்களில் ஈடுபடுவதற்கு வழிவகுக்கிறது.
பாலியல் குற்றசெயல்கள் மட்டுமல்லாது போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையாகிவிடுகிறார்கள். தங்கள் குழந்தைகள் ஆபாச படங்களை பார்ப்பதற்கு பெற்றோர்களும் ஒரு வகையில் காரணமாக உள்ளார்.
குழந்தைகளின் தேவைகளை அறிந்து செயல்படால் இருத்தல், குழந்தைகள் இணையதளம் பயன்படுத்தினால், அதன் மூலம் அவர்கள் என்ன அறிந்துகொள்கிறார்கள் என்பதை கண்டுகொள்ளாமல் இருத்தல், ஆபாசபடங்களை ஒளிபரப்பும் தளத்தினை தங்கள் குழந்தைகள் பயன்படுத்தும் கணணிகளில் முடக்கம் செய்யாமல் இருப்பது போன்றவையே பெற்றோர்கள் செய்யும் தவறுகள் ஆகும்.
எனவே, தங்கள் குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சி கருதி பெற்றோர்கள் தங்கள் கடமையாற்றுவது நன்று.