நரைமுடிகளைக் கருமையாக்க கெமிக்கல்கள் கலந்த ஹேர்டை விதவிதமாக கடைகளில் கிடைக்கின்றன. ஆனால் அதனால் உண்டாகும் பின்விளைவுகள் அதிகம்.
அவற்றில் உள்ள அமோனியாக்கள் உடலில் ஏகப்பட்ட பிரச்னைகளை உண்டாக்கும். ஆனால் நாம் வீட்டில் பயன்படுத்தும் பீட்ரூட் கொண்டு இயற்கையாக ஹேர்டை தயாரிக்க முடியும்.
தேவையான பொருட்கள்
பீட்ருட் சிறிய சைஸ்
காபி பவுடர் – 3 ஸ்பூன்
அரைத்த 10 செம்பருத்தி
எலுமிச்சை
செய்முறை
பீட்ரூட்டைத் துருவி, அதனுடன் காபி பவுடர், செம்பருத்தி பேஸ்ட் ஆகியவற்றை 200 மில்லி தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து அது 50 மில்லி அளவுக்கு சுண்ட வைக்க வேண்டும்.
அப்படி சுண்டியதும் ஆறவைத்து அதில் எலுமிச்சை ஜூஸ் சேர்த்து தலையில் தேய்த்து 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் வைத்திருந்து பின் தலையை அலச வேண்டும்.
இதன்மூலம் நிரந்தரமாக நரைமுடியைக் கருமையாக்க முடியும்.
ஆரம்பத்தில் வாரம் ஒருமுறை பயன்படுத்துங்கள். பிறகு நரைமுடி கருமையாக மாறத் தொடங்கியதும் 15 நாட்களுக்கு ஒருமுறை பயன்படுத்தினால் போதும்.