Home சமையல் குறிப்புகள் மொறு மொறுப்பான ராவ்( கெண்டை) மீன் வறுவல்!

மொறு மொறுப்பான ராவ்( கெண்டை) மீன் வறுவல்!

29

வறுவலில் விதவிதமான வெரைட்டியை சுவைத்திருப்போம். அதில் நாவில் உமிழ் நீரை சுரக்க வைக்கும் மொறு மொறுப்பான ராவ் மீன் வறுவல் செய்து சாப்பிடலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

கண்ணாடி கெண்டை மீன் – 1/2 கிலோ
கடலை மாவு – 2 1/2 கிலோ
முட்டை – 2
இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி விழுது, கஸ்தூரி மேத்தி விழுது, சீரகம் – 1 கப்
மல்லித்தூள் – 1/2 டீஸ்பூன்
சீரகப்பொடி – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சை சாறு
எண்ணெய்
பெரிய வெங்காயம் – 2
கொத்தமல்லி தழை
தண்ணீர்

செய்முறை

முதலில் கண்ணாடி கெண்டை மீனை நன்கு கழுவ வேண்டும்.
கடலை மாவில் தண்ணீர் ஊற்றி நன்கு கலக்க வேண்டும்.

பெரிய வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவேண்டும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி விழுது, வெந்தய தழை விழுது, சீரகம் சேர்த்து கலவையாக செய்து வைக்க வேண்டும்.

இவற்றுடன், மல்லித்தூள், சீரகப்பொடி, கரம் மசாலா, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, எலுமிச்சை சாறு, கொத்தமல்லி தழை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு கலக்க வேண்டும். கலக்கி வைத்த கடலை மாவுடன் மேற்கண்டவற்றை சேர்க்க வேண்டும்.

இதையடுத்து, கெண்டை மீனை கலவையுடன் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

பின்னர் ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைக்க வேண்டும். அதில் தேவையான அளவு எண்ணெய் விட்டு, நன்கு சூடேற்ற வேண்டும்.

எண்ணெய் நன்கு சூடேறியவுடன், மீன் துண்டுகளை ஒவ்வொன்றாக கடாயில் போட்டு வறுத்து எடுக்கவும்.

வறுத்த மீன் துண்டுகளை ஒரு தட்டில் வைத்து ஆற வைத்து சாப்பிட்டால் மொறு மொறுப்பான கெண்டை மீன் வறுவல் தயார்!