நமது வாழ்வில், நமது எண்ணங்களை பிரதிபலிக்கும் ஒரு கருவி வண்ணம்.
நமது மனநிலையை மாற்றும் திறன் கூட வண்ணத்திற்கு உள்ளது. நீங்கள் கோபமாக இருக்கும் போது சில வண்ணங்களை கண்டால், சாந்தமாகிவிடுவீர்கள்.
சில வண்ணங்கள் உங்கள் மகிழ்ச்சியை இரட்டிப்பு ஆக்கும்.
இது உங்கள் இல்லறத்திற்கு மட்டுமல்ல, படுக்கையறைக்கும் கூட வெகுவாக பொருந்தும்.
அந்த வகையில் உங்கள் படுக்கையறையில் என்தேந்தே வண்ணங்கள் பூசினால், அது எந்தெந்த மாதிரியான தாக்கங்களை உண்டாக்கும் என்பதை இங்கு காணலாம்…
மஞ்சள்!
மஞ்சள் ஆற்றலை குறிக்கும் வண்ணமாக திகழ்கிறது. இது மிகவும் சக்தி வாய்ந்ததும் கூட. இது பொறுமை மற்றும் ஞானத்தையும் குறிக்கிறது. இந்த வண்ணத்தை நீங்கள் படிக்கும் அறை, குழந்தைகள் அறைக்கு பயன்படுத்தலாம்.
பழுப்பு!
இந்த பழுப்பு நிறம் நல்லிணக்கம் மற்றும் காதலை வெளிப்படுத்தும் நிறமாக திகழ்கிறது. இந்த நிறத்தை படுக்கை அறைக்கு பயன்படுத்தினால் தனிப்பட்ட வாழ்வில் அற்புதங்கள் நிகழ்த்தும். இது உங்கள் உறக்கத்தில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி, உறக்கத்தை மேம்படுத்தும்.
நீலம்!
நீலநிறம் அமைதி, மேன்மை மற்றும் உயர்வை அளிக்கவல்லது. இது உங்களிடம் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க உதவும்.
பச்சை!
நம்பிக்கையை வெளிப்படுத்தும் நிறம் பச்சை. இது கருவளம் மற்றும் மாற்றத்தை குறிக்கிறது. இது தம்பதிகளின் மத்தியில் ஈர்ப்பு, நெருக்கம் அதிகரிக்க செய்கிறது. மன நிம்மதியும் அளிக்கும் பச்சை நிறம்.
ஆரஞ்சு!
ஆரஞ்சு அழகு, சக்தி,சௌகரியம் மற்றும் உறுதிப்பாட்டை குறிக்கிறது. இது உங்கள் மத்தியில் மகிழ்ச்சி மற்றும் காதல் அதிகரிக்க செய்யும். படுக்கை அறைக்கு சிறந்த வண்ணம் ஆரஞ்சு.
பிங்க்!
அமைதி, சந்தோஷம் போன்றவற்றை குறிக்கும் வண்ணம் பிங்க். இது காதலின் நிறம் என்றும் கூறப்படுகிறது.
சிவப்பு!
தைரியம் மற்றும் பேரார்வத்தை குறிக்கிறது சிவப்பு. இது பல உணர்வுகளை உட்கொண்டிருக்கும் நிறமாகும். சிவப்பு நிறத்தை படுக்கை அறைக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
வெள்ளை!
பேரமைதியை வெளிக்காட்டும் நிறம் வெள்ளை. இது தெளிவு மற்றும் கவனத்தை அதிகரிக்க செய்யும் நிறமாகும். வெள்ளை நிறம் படுக்கையறைக்கு உகந்த நிறம். இது உறக்கத்தையும் மேம்படுத்தும்.