Home சூடான செய்திகள் இவையெல்லாம் ராத்திரியில் மூடை அதிகமாக்கும் பொருட்களாம்… கொஞ்சம் பார்த்து சாப்பிடுங்க பாஸ்..

இவையெல்லாம் ராத்திரியில் மூடை அதிகமாக்கும் பொருட்களாம்… கொஞ்சம் பார்த்து சாப்பிடுங்க பாஸ்..

74

நம் வீட்டின் சமையலறையில் இருக்கும் வயாக்ரா என்றாலே நாம் கண்ணை மூடிக்கொண்டு சொல்வது முருங்கைக் காய் தான். ஆனால் நாம் தினந்தோறும் சமையலில் பயன்படுத்தும் சில பொருட்களிலும் இந்த சமாச்சாரங்கள் அதிகமாக இருக்கின்றன.

கை நிறைய சம்பளம், கார், சொகுசு வாழ்க்கை இப்படி என்ன இருந்தாலும் இல்லற சுகம் என்பதை அனுபவிக்க இயலாதவர்கள் அல்லது அதைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பாதவர்கள் எத்தனை ஆடம்பரமாக வாழ்ந்தும் வீண். உடல் உறவுக்கும் நாம் தினமும் உண்ணும் உணவுக்கும் ஏராளமான சம்பந்தம் உண்டு என்பதை நாம் பெரிதாக அறிந்து கொள்வதே இல்லை. கருவேப்பிலையின் மகத்துவம் தெரிந்தாலும் நாம் தூக்கி எறிந்துவிட்டு தான் சாப்பிடுகிறோம். அதேபோல் நாம் மகத்துவம் தெரியாமல் தூக்கியெறிவது வாசனைப் பொருட்கள்.

அவை வெறுமனே வாசனைக்காக மட்டும் பயன்படுத்தப்படுவது என்று எண்ணுகிறோம். ஆனால் நம் முன்னோர்கள் அதை வெறும் வாசனைக்காக மட்டுமே பயன்படுத்துவதில்லை. அப்படி என்னென்ன பொருட்கள் வயாக்ராவாக செயல்படுகின்றன?

பெருங்காயம்

வாசனைக்காக சமையலில் சிறிதளவு சேர்க்கப்படும் பெருங்காயத்தில் விறுவிறுப்பாக, உணர்ச்சிப் பெருக்கேற்றும் ஆற்றல் உள்ளது. சிலருக்கு இந்த வாசனை பிடிக்காது என்பதால் சமையலில் அதிகம் சேர்க்க மாட்டார்கள். ஆனால் தொடர்ந்து சமையலில் பெருங்காயத்தைச் சேர்த்துப்பாருங்கள். ஆண்மைக்குறைவு என்ற சொல்லே உங்கள் அகராதியில் இருக்காது.

ஏலக்காய்

ஏலக்காய் விதைகளைத் தூள் செய்து அதனைப் பாலுடன் சேர்த்துக் கொதிக்க வைத்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிட வேண்டும். இதில் இன்னொரு சிக்கலும் உண்டு. இதை அதிக அளவில் பயன்படுத்தினால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி, ஆண்மைக்குறைவு பிரச்னைகளையும் உண்டாக்கிவிடும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

மிளகு

பெரும்பாலான சமையலில் பயன்படுத்தக்கூடிய மிளகு உணர்ச்சியை மிக அதிக அளவில் தூண்டக்கூடியது. கிரேக்கர்களும் ரோமானியர்களும் அரேபியர்களும் அதனாலேயே மிக அதிக அளவில் மிளகை தங்களது உணவில் சேர்த்துக் கொண்டனர். நான்கு மிளகைப் பொடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் நரம்புகள் உறுதி பெறும். இரவு படுக்கைக்குச் செல்லும்முன் சில மிளகு விதைகளை வாயில் போட்டு மென்று தின்று வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

லவங்கம்

இனிப்பு பதார்த்தங்கள் சிலவற்றில் கூட லவங்கம் சேர்க்கப்படுவதுண்டு. பண்டைய சீனர்களும் ஐரோப்பியர்களும் லவங்கத்தின் பலனைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருந்தனர். இது உணர்ச்சியைத் தூண்டக்கூடியது என்பதை 16- ஆம் நூற்றாண்டிலேயே தங்களுடைய மூலிகை விஞ்ஞான நூலில் எழுதி வைத்திருக்கின்றனர்.

பூண்டு

பூண்டுக்கு இல்லற சுகத்தைத் தரும் ஆற்றல் நிரம்ப உண்டு. சாப்பிட்ட உணவுகளைப் பூண்டு எளிதில் ஜீரணமடையச் செய்யும். சாப்பிட்ட உணவு ஜீரணமடைந்தவுடன் உறவில் ஈடுபடுவது தான் சிறந்தது. பூண்டு ஜீரணமடையச் செய்யும் வேலையை விரைவாகச் செய்வதால், உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம்.

ஜாதிக்காய்

சாதிக்காயை அளவாகப் பயன்படுத்தினால், தம்பத்திய வாழ்க்கையில் மிகையான பலன்களை அனுபவிக்கலாம். சாதிக்காய், தேன், பாதி வேக வைத்த முட்டை ஆகிய மூன்றும் உணர்ச்சியை அதிகரிக்கவல்லவை என்று மூலிகை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உடல் உறவுக்கு முன்பு இதைச் சாப்பிடுவது நல்லது.

இஞ்சி

இஞ்சி ஆண், பெண் இருவருக்குமே உணர்ச்சியை அதிக அளவில் தூண்டக்கூடியது. இஞ்சிக்கு ஆண்மையைப் பெருக்கக்கூடிய ஆற்றல் அதிக அளவில் உண்டு. இஞ்சிச்சாறுடன் தேன், பாதி வேகவைத்த முட்டை ஆகியவற்றைக் கலந்து தொடர்ந்து ஒரு மாதத்துக்கு சாப்பிட்டு வந்தால் மன்மதனைப் போல செயல்படலாம் என்று சித்த மருது்துவக் குறிப்புகள் குறிப்பிடுகின்றன.

ஓமம்

ஓமம் உணர்சுசியை அதிக அளவில் தூண்டுகிறது, இதற்குக் காரணம் ஓம விதைகளில் உள்ள தைமால் என்னும் மூலப்பொருள். ஓமத்தைப் பொடியாக்கி வைத்துக் கொண்டு, தோல் நீக்கிய புளியங்கொட்டையைப் பொடி செய்து நெய், வெண்ணெய் அல்லது ஆவில் ஆயிலுடன் சேர்த்து வதக்கி வைத்துக்கொண்டு, இரவு படுக்கைக்குச் செல்லும் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து பாலில் கலந்து குடிக்க வேண்டும்.

வெங்காயம் மற்றும் பிற

மேற்கண்டவை தவிர, தினமும் நாம் உபயோகிக்கும் சில காய்களிகளிலும் ஆண்மையைப் பெருக்கும் சக்தி உள்ளது. சின்ன வெங்காயத்துக்கும் ஆண்மையைப் பெருக்கும் சக்தி அதிக அளவில் உண்டு.

முருங்கை விதையில் ஆண்மையைப் பெருக்கும் பென் – ஆயில் அதிகமாக இருக்கிறது.

அதேபோல் வல்லாரை, முந்திரி, பிஸ்தா, பாதாம், உலர் திராட்சை ஆகியவை சிறந்த பலன்களைத் தரும்.

நாட்டு மருந்துக் கடைகளில் அமுக்கரா கிழங்கு என்று கிடைக்கும். அது அந்த விஷயத்துக்கான மன்னன் என்றே அழைக்கப்படும் அளவுக்கு வீரியம் மிக்கது. இதைப் பொடி வெய்து தினசரி இரவு பாலில் கலந்து குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.