Home பெண்கள் அழகு குறிப்பு நரைமுடி வராமல் தடுக்கும் சிமிபிள் ஹேர்ஆயில்

நரைமுடி வராமல் தடுக்கும் சிமிபிள் ஹேர்ஆயில்

41

நமது பாட்டிகளுக்கு கூந்தல் கருப்பாகவும், நீளமாகவும் இருக்கும். இதற்கு காரணம் அவர்கள் எண்ணெய் உபயோகப்படுத்தியதே. ஆனால் நாம் தோற்றத்திற்கு நன்றாக இல்லை என்று எண்ணெய் வைக்கும் பழக்கத்தை மறந்துவிட்டோம்.

கூந்தல் வளர எண்ணெய் மிகவும் முக்கிய இடம் பெற்றுள்ளது. இவை சருமத்தால் ஊடுருவி கூந்தலின் செல்களுக்கு ஊட்டம் அளித்து நன்றாக வளர்ச் செய்யும். அப்படி உங்கல் கூந்தலை கருகருவென வளர்க்கவும் நரை முடி விரவில் தோன்றாமலும் இருக்க ஒரு பாட்டி சொன்ன வைத்தியம் இது.

தேவையான பொருள்கள்

சுத்தமான தேங்காய் எண்ணெய் – 2 கப் அளவு

நெல்லிக்காய் பெரியது – 4

மருதாணி இலை – கைப்பிடி அளவு

கருவேப்பிலை- 1 கப் அளவு

செம்பருத்தி இதழ்கள் – 2 பூக்கள்

சீரகம் – 4 ஸ்பூன்

கிராம்பு – 3

செய்முறை

முதலில் நெல்லிக்காயை கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். மருதாணி மற்றும் கருவேப்பிலையையும் நறுக்கிக் கொள்ள வேண்டும்.

செம்பருத்தி இதழை பிரித்து நன்றாக தண்ணீரில் அதன் மேலுள்ள மருந்துகள் போகும் வரை அலசிக்க் கொள்ளுங்கள்.

சீரகம் கிராம்பையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

முதலில் எண்ணெயை சூடாக வேண்டும். அதில் நெல்லிக்காய், மருதாணி கருவேப்பிலை ஒன்றன்பினொன்றாக போடவும். அதன் நிறம் மாறி அடியில் தங்கும் வரை குறைந்த தீயில் கொதிக்க வையுங்கள்.

அதன்பின்னர் செம்பருத்தி இதழ்களை போடவும். அதன் நிறம் பழுப்பாக மாறும். உடனே சீரகம், கிராம்பையும் போட்டு ஒரு நிமிடம் குறைந்த தீயில் வையுங்கள். பின்னர் இறக்கி ஆறவிடவும்.

பின் ஒரு சுத்தமான துணியினால் வடிக்கட்டி அந்த எண்ணெயை ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த எண்ணெயை குறைந்தது வாரத்துக்கு 3 நாட்கள் தலையில் தேய்த்து ஊறவிட்டு குளித்துவர, நரைமுடி வராமலும், முடி உதிர்வதைத் தடுக்கவும் முடியும்.