Home உறவு-காதல் நீங்கள் ஒருதலைக் காதலரா? இது உங்களுக்குத் தான்….

நீங்கள் ஒருதலைக் காதலரா? இது உங்களுக்குத் தான்….

40

ஆயிரம் பெண்களை நீங்கள் ஒரு நாளில் கடக்கும் போது, அதில் ஒரு பெண் மீது மட்டும் இவள் நம் மனைவியாக வந்தால் சிறப்பாக இருக்கும் என்று ஒரு ஈர்ப்பு ஏற்படும்.

அப்படி நீங்கள் பார்க்கும் பெண்களை ரசித்துவிட்டு அப்படியே கடந்து சென்றுவிட்டால் ஒரு பிரச்னையும் இல்லை.

ஒருவேளை அதே பெண்ணை நீங்கள் அடிக்கடி சந்திக்கும் நிலையோ, அல்லது உங்களுடன் ஒன்றாக பணிபுரிபவராகவோ, அல்லது உங்களுடன் ஒன்றாக படிப்பவராகவோ இருந்தால், உங்களுக்கு அந்த பெண் மீது காதல் ஏற்படும் வாய்ப்பு அதிகம். நீங்கள் ஒருவேளை அந்த பெண்ணை ஒரு தலையாகக் காதலிக்க தொடங்கிவிட்டால் உங்கள் பேச்சும், நடையும், நிச்சயம் மாறும்.

உங்களுடைய ஒரு நாள் நினைவில் 99 சதவீதம் அந்த பெண்ணை பற்றியதாகத்தான் இருக்கும். எப்படியாவது உங்கள் காதலை வெளிப்படுத்தி அந்த பெண்ணை கவர முயற்சி செய்வீர்கள். அந்த பெண்ணிடம் எப்படி உங்கள் காதலை வெளிப்படுத்துவது என்பதை இப்போது பார்க்கலாம்.

நீங்கள் காதலை தெரிவிக்கப்போகும் பெண்ணுக்கு அடிக்கடி போன்கால்கள் வருகிறதா என்பதை கண்காணியுங்கள்

அந்த பெண் அடிக்கடி பத்து நிமிடத்திற்கு மேல் யாரிடமாவது பேசிக்கொண்டிருந்தால், நிச்சயம் நீங்கள் காதலைச் சொல்லலாமா என்பதை யோசிக்க வேண்டியதிருக்கும்.

நீங்கள் விரும்பும் பெண்ணுக்கு காதலன் இல்லை என்பதை உறுதி செய்துவிட்டால், பாதி கிணறு தாண்டியதற்கு சமம்.

அந்த பெண்ணிடம் அடிக்கடி பேசும் வாய்ப்பு கிடைத்தால் நல்ல தோழனாக பழக வேண்டும்.

பல நாட்கள் அந்த பெண்ணுடன் பழகியவரைப் போல் உங்கள் பேச்சுக்கள் இருக்க வேண்டும்.

உங்கள் மீது நீங்கள் விரும்பும் பெண்ணுக்கு ஈர்ப்பு இருந்தால், உங்களை பார்த்தவுடன் புன்னகைப்பார்.

உங்களிடம் பேசும் போது, பெண்கள் தங்கள் முடிகளை கைகளால் சுருட்டிக் கொண்டிருப்பதை, நீங்கள் பார்த்தால், நிச்சயம் அவர்களுக்கு உங்கள் மீது ஒரு ஈர்ப்பு உள்ளது என்பதை அறியலாம்.

நீங்கள் வேறு ஒரு பெண்ணிடம் பேசுவதைப் பார்த்து, கோபப்பட்டால், அதுகூட, உங்கள் மீது இருக்கும் ஒரு வகையான காதல்தான். ஆனால் அவர்கள் இந்த கருத்தை ஏற்க மாட்டார்கள்.

உங்கள் கண் களை அதிகம் பார்த்து பேசினால் அவர்கள் உங்கள்மீது அதிக ஆர்வத்துடன் உள்ளனர் என்பதை அறியலாம். அதிலும் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தால், கண்டிப்பாக உங்களை பிடித்திருக்கிறது என்று அர்த்தம்.

பெண்களுக்கு உங்களை பிடித்தால், அவர்களே உங்களை அடிக்கடி தொடுவார்கள். உதாரணமாக, அடிப்பது, அடிக்கடி தொட்டுப் பேசுவது, கை குலுக்கு வது, கைகளை பிடித்து நடப்பது போன்றவற்றை செய்வார்கள்.

உங்களை பிடித்தால் தான், பெ ண்கள் அதிக நேரம் உங்களுடன்பேசுவா ர்கள். மேலும் எவ்வளவு தான் நண்பர்க ளுடன் கூடி பேசிக் கொண்டிருந்தாலும், அவர்கள் உங்களுடன் பேசுவார்கள் அல்லது மெசேஜ் செய்வார்கள். முக்கியமாக எந்த நேரத்திலும் உங்களுக்கு போன் செய்து பேசுவார்கள்.

எங்கேனும் அவர்களுடன் வெ ளியே தனியாக போக திட்டம் போட்டு, அவர்களிடம் கேட்டு, அவர்களுக்கு வேலை இருப்பது உங்களுக்கு தெரிந்தும், உங் களுடன் வருவதற்கு ஒப்புக் கொண்டால், அந்த நேரத்தில் நீங்கள் அவருடன் கண்டிப்பாக, செல்லுங்கள். ஏனெனில் அவர்கள் உங்களுடன் வெளியே வந்து, அப்போதும் உங்களிடம் காதலை சொல்லும் வாய்ப்புகளும் உண்டு. இந்த சந்தர்ப்பத்தை வீணாக்க வேண்டாம்.

மேற்சொன்ன விஷயங்கள் எல்லாம் சரிதான் என்றால், தைரியமாக உங்கள் காதலை வெளிப்படுத்துங்கள். ஒரு தலைக்காதல் இருதலைக்காதலாகும் வாய்ப்பு நிச்சயம் இருக்கும்.