Home ஆண்கள் சக்திவாய்ந்த வயாக்ராவைத் தயாரிப்பது எப்படி?

சக்திவாய்ந்த வயாக்ராவைத் தயாரிப்பது எப்படி?

29

தற்காலத்தில், பாலியல் செயல்பாடின்மை, இனப்பெருக்கத் திறனின்மை போன்ற பிரச்சனைகள் பலருக்கு உள்ளன. இது இப்போது ஒரு முக்கியமான பிரச்சனையாக உள்ளது. ஆண்களில் 10-52% பேரும் பெண்களில் 25-63% பேரும் இந்தப் பிரச்சனைகளின் அறிகுறிகளைக் கொண்டுள்ளனர். எனினும், ஆராய்ச்சியின்படி விறைப்பின்மைப் பிரச்சனை அதிக சதவீத ஆண்களைப் பாதிக்கிறது.நடுத்தர வயது மற்றும் வயதான ஆண்களுக்கு இந்த அறிகுறி அதிகம் உள்ளது. உலகளவில் 2-3 கோடி ஆண்களுக்கு ஆண்மையின்மைப் பிரச்சனை உள்ளது.மேலும், நீரிழிவுநோய் இருப்பவர்களிடையே விறைப்பின்மைப் பிரச்சனை ஏற்படுவது சுமார் 50% அதிகமாக உள்ளது.

வயாக்ரா என்பது என்ன?

வயாக்ரா என்பது ஆண்களின் விறைப்பின்மைப் பிரச்சனைக்கு அளிக்கும் சிகிச்சையில், இனப்பெருக்கத் திறனின்மையைச் சரி செய்ய மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்தாகும்.ஆண் பாலியல் கிளர்ச்சி அடைந்திருக்கும்போது ஆண்குறிக்கு அதிக இரத்த ஓட்டம் பாயும்படி செய்வதன் மூலம் வயாக்ரா செயல்படுகிறது. இதனால் அவரது ஆண்குறி தொடர்ந்து விறைப்புத் தன்மையுடன் நீண்ட நேரம் இருக்கும்.

வயக்ராவை எடுத்துக்கொள்வதால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என்ன?

இந்த மருந்தைச் செலுத்திக் கொண்டதால் பலர் இறந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே மக்கள் இயற்கை முறையில் இதே பலனைத் தரும் மருந்துகள் உள்ளதா என்று எதிர்பார்க்கின்றனர். அவை பாதுகாப்பாகவும் இருக்கும், பாலியல் சக்தியையும் அளிக்கும்.தர்பூசணி, மாதுளை, எலுமிச்சை ஆகிய பழங்களை சரியான முறையில் எடுத்துக்கொண்டால் பாலியல்ரீதியாக அதிக பலம் பெற அவை சிறப்பாக உதவும். இவை இயற்கையில் எளிதாகக் கிடைக்கின்ற பழங்கள்.

விறைப்பின்மைப் பிரச்சனையைச் சரிசெய்வதில் இயற்கை வயாக்ராவின் பங்களிப்பு

வயாக்ரா மருந்து பண்டைய காலத்திலிருந்தே பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. வரலாற்றில், பல்வேறு இயற்கை மூலப்பொருள்கள் வயாக்ராவாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இயற்கையில் கிடைக்கும் சில பொருள்கள் வயாக்ராவைப் போன்றே செயல்படக்கூடியவை, இவற்றால் பக்கவிளைவுகள் இல்லை அல்லது மிகச் சிறிதளவே பக்கவிளைவுகள் இருக்கும் என்பதால், சந்தையில் கிடைக்கும் வயாக்ரா மருந்துகளைவிட இவற்றைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது.இயற்கையான வயாக்ராவில் முக்கியமான உட்பொருள்கள் தர்பூசணியும் மாதுளையும் ஆகும்.

தர்பூசணி

புத்துணர்வளிக்கும் தர்பூசணியில் பாலியல் செயல்திறனை அதிகரித்த உதவும் எல்லாச் சத்துகளும் உள்ளன. சிறிதளவு விறைப்பின்மைப் பிரச்சனை கொண்ட ஆண்களுக்கு, விறைப்புத் தன்மையை மேம்படுத்த தர்பூசணி பெரிதும் உதவுகிறது, இதனால் இத்தாலிய விஞ்ஞானிகள் இதனை “இயற்கை வயாக்ரா” என்று அழைக்கின்றனர். தர்பூசணியில் ஆண்குறிக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்ற சிட்ருல்லின் எனும் அமினோ அமிலம் அதிகம் உள்ளது.

இயற்கையில் கிடைக்கும் இந்தப் பழத்தை அதிகமாகச் சாப்பிட்டாலும் பக்கவிளைவுகள் எதுவும் கிடையாது என்பது நல்ல செய்தி!

மாதுளை

மாதுளை விதையில், மனிதர்களின் உடலில் இருப்பதைப் போன்ற பாலியல் ஸ்டிராய்டு ஹார்மோன்களைக் கொண்ட ஃபைட்டோஈஸ்ட்ரோஜென் எனும் பொருள் உள்ளது. மாதுளம் பழச்சாற்றை அருந்துவதால், விந்துநாளத் திரளில் விந்தணுக்களின் செறிவு அதிகரிக்கலாம், விந்தணுக்களின் நகர் திறன் அதிகரிக்கலாம், விந்தணுக்கள் உற்பத்தியாக ஆதாரமாக இருக்கும் பகுப்பு செல்களின் (ஸ்பெர்மாட்டோஜெனிக் செல்கள்) அடர்த்தி அதிகரிக்கலாம், விந்தணுக் குழாய்களின் விட்டம் மற்றும் விந்தணு செல் அடுக்கின் (ஜெர்மினல் செல் லேயர்) தடிமன் போன்றவையும் அதிகரிக்கலாம் என்று ஓர் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

இயற்கை வயாக்ராவைத் தயாரிக்கும் முறை

பலன் தரக்கூடியது என்றும் பாதுகாப்பானது என்றும் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட சில இயற்கை வயாக்ரா மருந்துகளை வீட்டிலேயே தயாரிக்கலாம், அவை ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் எடுத்துக்கொள்ளக்கூடியவை. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

இதைத் தயாரிக்கத் தேவையானவை:

ஒரு முழு தர்பூசணி (சுமார் ஒரு லிட்டர் பழச்சாறு கிடைக்கத் தேவையான அளவு பெரியது)
ஒரு மாதுளம்பழம்
அரை முடி எலுமிச்சை
நீர்
படி 1:

தர்பூசணியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும், ஒரு சராசரி அளவு மாதுளம்பழத்தின் விதைகளை உதிர்த்து வைத்துக்கொள்ளவும். அரை முடி எழுமிச்சையைச் சாறு பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.

படி 2:

இவை அனைத்தையும் மிக்சியில் அரைத்துக்கொள்ளவும். விதைகளை அகற்றிவிட வேண்டாம், இவற்றில் அதிக நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுகள் மற்றும் உயிரியல் ரீதியாக அதைக் செயல்திறன் மிக்க தாவரச் சேர்மங்களும் உள்ளன, இவை விறைப்புத் தன்மையை மிகச் சிறப்பாக மேம்படுத்தக்கூடியவை.

படி 3:

இந்தக் கலவையை ஒரு பாத்திரத்தில் இட்டு, அவை அளவில் பாதியாகும் வரை சில நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

படி 4:

குளிர்ந்தபிறகு, ஒரு மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

தினமும் காலையில் அல்லது மாலையில் இந்த வயாக்ராவை வெறும் வயிற்றில் அருந்தவும். மூன்று டேபிள்ஸ்பூன் முதல் அரை டம்ளர் வரை அருந்தலாம்.

தர்பூசணியை சாதாரணமாகச் சாப்பிட்டாலும் பலன் கிடைக்கும். தர்பூசணி சாப்பிடும் ஆண்களின் விறைப்புத்தன்மை 50% அதிகரித்துள்ளதாக ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

குறிப்பு: வயாக்ரா இனப்பெருக்கத் திறனின்மையை குணப்படுத்தாது, விறைப்புத் தன்மையை அடைய மட்டுமே உதவும்.

வயாக்ராவில் இருக்கும் எல்லாத் தனிப்பட்டச் சிறப்புகளும் தர்பூசணியில் இருக்காது, ஆனால் வயாக்ராவைப் போன்ற அதே விளைவுகளை தர்பூசணி அளிக்கும். சந்தையில் வயாக்ரா சூத்திரத்தில் தயாரிக்கப்பட்ட பல்வேறு மூலிகை மருந்துகள் கிடைக்கின்றன. உடலுறவுக்கு சற்று முன்பு சாப்பிடக்கூடிய சில இயற்கையான உணவு வகைகள் உள்ளன, அவையும் உங்கள் பாலியல் உணர்வையும் ஆர்வத்தையும் தூண்டக்கூடும். எடுத்துக்காட்டுகள்: குளிர்ந்த நீரில் வாழும் சால்மன் போன்ற மீன்கள், ஆளி விதை, ஓட்ஸ், வெண்ணெய்ப்பழம், பூண்டு, பீட்ரூட், வேர்க்கடலை வெண்ணெய், பாதாம், வாழை, அஸ்பாரகஸ், சிவரிக்கீரை (செலரி) மற்றும் டார்க் சாக்லேட் வகைகள் போன்றவை.

வயாக்ரா போன்ற மருந்துகள் எவற்றையும் எடுத்துக்கொள்ளும்போது மிகுந்த கவனம் தேவை, ஏனெனில் அவற்றால் கிடைக்கும் பலன்களைவிட பக்கவிளைவுகள் அதிகமாக இருக்கலாம். பாலியல் ஊக்கிகளாகச் செயல்படும் இயற்கை உணவுப்பொருள்கள் மற்றும் இயற்கை முறையில் தயாரிக்கும் வயாக்ரா போன்றவற்றை எடுத்துக்கொள்வது மொத்த உடல்நலத்திற்கும் நல்லது, அவை பாதுகாப்பானதும் கூட.