Home சமையல் குறிப்புகள் முட்டை ப்ரைடு ரைஸ் ரெசிபி

முட்டை ப்ரைடு ரைஸ் ரெசிபி

32

வீட்டில் எளிதாக செய்யக்கூடிய முட்டை ப்ரைடு ரைஸ் எப்படி செய்வது எனக் காணலாம்.

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி – 1 கப்
வெங்காயம் – 2
கேரட் – 1
பீன்ஸ் – 50 கிராம்
பச்சை பட்டாணி – 1/2 கப்
வெங்காயத்தாள் – 1
குடை மிளகாய் – 2
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
முட்டை – 3
சில்லி சாஸ் – 1 டீஸ்பூன்
சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 4 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை

முதலில் பாசுமதி அரிசியை தண்ணீரிச் கழுவி உப்பு சேர்த்து வேகவைத்து உதிரி உதிரியாக வடித்துக் கொள்ளவும்.

அடுப்பில் ஒரு பெரிய கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய குடைமிளகாய், வெங்காயத்தாள், இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

பின்னர், கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி சேர்த்து நன்கு கிளறி விட்டு வதக்கவும்.

காய்கறிகள் வெந்ததும் அதில் முட்டைய உடைத்து ஊற்றி சிறு சிறு துண்டுகளாககும் வரை நன்கு கிளறவும்.

பிறகு, அதில் தேவையான அளவு உப்பு, சோயா சாஸ், சில்லி சாஸ், மிளகுத் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.

காய்கறி வெந்தபின் ஆற வைத்த சாதத்தை இட்டு நன்றாக கிளறி விட வேண்டும்.

அப்போது அடுப்பின் தீயை கூட்டி ப்ரைடு ரைஸ் சாதத்தின் வாசனை வந்தவுடன் கொத்தமல்லி இலையைத் போட்டு அடுப்பை அணைக்கவும்.

முட்டை ப்ரைடு ரைஸ் ரெடி!