Home இரகசியகேள்வி-பதில் டெஸ்டோஸ்டிரோன்(செக்ஸ் ஹார்மோன்) அளவு குறைவு

டெஸ்டோஸ்டிரோன்(செக்ஸ் ஹார்மோன்) அளவு குறைவு

49

டெஸ்டோஸ்டிரோன் என்பது என்ன?

டெஸ்டோஸ்டிரோன் என்பது ஆண்களின் உடலில் சுரக்கும், ஆண்களுக்கான ஒரு முக்கியமான பாலியல் ஹார்மோன் ஆகும். இது விந்தகத்தில் சுரக்கிறது.ஆண்களின் தசைப் பருமன், வலிமை, உடல் மற்றும் முகத்தில் முளைக்கும் முடி, எலும்புகளின் அடர்த்தி, பாலியல் நாட்டம், விந்தணுக்களின் உற்பத்தி ஆகியவற்றுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனே பொறுப்பாக உள்ளது, மேலும் பாலியல் உந்துதலையும் மேம்படுத்துகிறது.

டெஸ்டோஸ்டிரோன் அளவு எப்படிக் குறைகிறது?

விடலைப் பருவத்திலும் வளச்சியடைந்த பருவத்தின் தொடக்க கட்டத்திலும் டெஸ்டோஸ்டிரோன் அளவு உச்சமாக இருக்கும். வயதாக ஆக, டெஸ்டோஸ்டிரோன் அளவு படிப்படியாயகாக் குறைகிறது, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1% குறையும். டெஸ்டோஸ்டிரோன் குறைவாக இருந்தால், அது வயதானதால் ஏற்பட்டதா அல்லது இனப்பெருக்க இயக்கக் குறை (ஹைப்போகொனாடிசம், அதாவது விந்தகங்கள் அல்லது அண்டகங்களின் செயல்பாடு குன்றுதல்) போன்ற மருத்துவநிலையால் ஏற்பட்டதா என்பதைக் கண்டறிய வேண்டியது மிக முக்கியம். பிட்யூட்டரி அல்லது விந்தகங்கள் சம்பந்தப்பட்ட பிராஸ் அணைகளால் உடலானது டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை சரியான அளவில் சுரக்கவில்லை எனில் அது ஹைப்போகொனாடிசம் எனப்படும்.

ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் இருக்க வெண்டிய அளவின் வரம்பு: 300 முதல் 1,000 ng/dL ஆகும். டெஸ்டோஸ்டிரோன் குறையும் வீதமானது ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.நாட்பட்ட சுகவீனம், மன அழுத்தம், மருந்துகள் போன்றவை டெஸ்டோஸ்டிரோன் அளவைப் பாதிக்கலாம். வாழ்க்கை முறையில் மாற்றங்கள் மற்றும் உடல்நலம் சார்ந்த பிரச்சினைகளின் காரணமாக டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியின் வேகம் குறையலாம். ஆண்களின் உடலில், இரத்தில் உள்ள டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைந்து, எளிதில் உணரக்கூடிய பிரச்சனைகளை ஏற்படுத்தும்போது, டெஸ்டோஸ்டிரோன் குறைவு எனும் நிலை வருகிறது.

காரணங்கள் மற்றும் ஆபத்துக் காரணிகள்

வயதாகும்போது டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவதற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி குறைக்கப்படும் நிலையை சிலசமயம் ஆண்ட்ரோப்பாஸ் அல்லது “ஆண்களின் மாதவிடாய் நிறுத்தம்” என்றும் குறிப்பிடுகின்றனர்.

இளம் ஆண்கள் மற்றும் சில வயதான ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவதற்கான காரணங்கள்:

விந்தகத்தில் காயம்
விந்தகப் புற்றுநோய் மற்றும் அதற்காக செய்யப்படும் சிகிச்சை
வயதாகுதல்
எச்.ஐ.வி/எய்ட்ஸ்
நாள்பட்ட சிறுநீரக அல்லது கல்லீரல் நோய்
உடல் பருமன்
2வது வகை நீரிழிவு நோய்
குறிப்பிட்ட சில மருந்துகள்
அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள்

டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாக இருப்பதற்கான அறிகுறிகள் மற்றும் அடையாளங்களாவன:

சோர்வு
மன அழுத்தம்
ஹாட் ஃப்ளஷ் (உடல் திடீரென்று வெப்பமடைதல், வியர்த்தல், இதயத் துடிப்பு அதிகமாதல்)
அதிகமாக வியர்த்தல்
ஆஸ்டியோபோரோசிஸ்
விறைப்பின்மை
பாலியல் உந்துதல் குறைதல்
தசை வலிமை குறைதல்
நினைவாற்றல் மற்றும் மன ஒருமுகப்படுத்துதல் திறன் மோசமடைதல்
அதிகம் எரிச்சலடைதல்
தூக்க வழக்கங்கள் மாறுதல்
நோய் கண்டறிதல்

ஒருவருக்கு டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைந்துள்ளதன் எண்ணற்ற அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் இருந்தும், அவற்றை அவர் அறிந்துகொள்ளாமல் இருக்க வாய்ப்புள்ளது.

மருத்துவ வரலாறு மற்றும் உடல் பரிசோதனை

மருத்துவர் உங்கள் கடந்தகால உடல்நலம் மற்றும் மருத்துவ விவரங்களைப் பற்றிக் கேட்டு அதனை வைத்து நோயைக் கண்டறியலாம். மருத்துவர் உங்கள் உடல்நலம் மற்றும் பாலியல் செயல்பாட்டில் உங்களுக்குள்ள ஆர்வம் ஆகியவை பற்றிக் கேட்கலாம். குடும்பத்தில் யாருக்கேனும் இதுபோன்ற பிரச்சனைகள் இருந்ததா, அதற்கான மருத்துவம் எதுவும் செய்யப்பட்டதா என்பது பற்றிக் கேட்டறிவார், உடல் பரிசோதனையும் செய்யப்படும். உடலில் முடி வளர்ச்சி எந்த அளவுக்கு உள்ளது, எவ்வளவு எல்லாப் பகுதிகளிலும் சீராக உள்ளதா என்றும் ஆய்வு செய்வார். மார்பகங்கள் விரிவடைந்துள்ளதா என ஆய்வு செய்வார், விதைப்பை மற்றும் ஆண்குறியின் அளவையும் ஆய்வு செய்வார்.

இரத்த பரிசோதனைகள்

உடலில் மொத்தம் உள்ள டெஸ்டோஸ்டிரோன், கட்டற்ற நிலையில் உள்ள டெஸ்டோஸ்டிரோன், பாலியல் ஹார்மோனுடன் பிணைக்கும் குளோபுளின் (SHBG) மற்றும் PSA ஆகியவற்றை அளவிடுவதற்காக இரத்தப் பரிசோதனைகள் செய்யப்படலாம்.

சிகிச்சை மற்றும் தடுத்தல்

சிகிச்சை

வழக்கமாக, இரத்தத்தில் உள்ள டெஸ்டோஸ்டிரோன் அளவு உறுதியாகத் தெரிந்த பிறகே, டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவுப் பிரச்சனைக்கான சிகிச்சை தொடங்கப்படும்.  டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவுப் பிரச்சனைக்கு டெஸ்டோஸ்டிரோன் சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

டெஸ்டோஸ்டிரோனை இந்த வடிவங்களில் கொடுக்கலாம்:

ஜெல்: அடிவயிறு, தோள்பட்டைகள் மற்றும் கைகளின் மேற்பகுதிகள் போன்ற பகுதிகளில் தினமும் மேற்பூச்சாகப் பூச வேண்டும்.டெஸ்டோஸ்டிரோனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, இந்தப் பகுதிகளை அவர்கள் தொடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்,
சொல்யூஷன்: இவை தீர்வுகள்: இந்த அக்குள்களில் பயன்படுத்தப்படும் டெஸ்டோஸ்டிரோனை மூலப்பொருளாகக் கொண்ட இந்த சொல்யூஷன்களை அக்குள் பகுதிகளில் பூசிக் கொள்ள வேண்டும்
ஊசி: ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, தொடையில் அல்லது பிட்டத்தில் டெஸ்டோஸ்டிரோன் ஊசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
செயற்கைப் பொருத்துதல் (இம்ப்ளான்ட்): இவை தோலுக்கு அடியில் பொருத்தப்படும், 6 மாதங்கள் வரை அப்படியே வைத்திருக்க வேண்டும்.
தோலில் ஒட்டும் பட்டைகள்: டெஸ்டோஸ்டிரோனைக் கொண்ட பட்டைகளை தோலில் ஒட்டிக்கொள்வதால் அதிலிருந்து டெஸ்டோஸ்டிரோன் சிறிது சிறிதாக தோலுக்குள் செலுத்தப்படுகிறது.  வயிறு, முதுகு, கைகளின் மேல்பகுதி அல்லது தொடையில் 24 மணி நேரத்திற்கு ஒரு முறை இந்தப் படைகள் பயன்படுத்தப்படுகின்றன. குழந்தைகள் மற்றும் பெண்கள் இந்தப் பட்டைகளைத் தொடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இனிப்பு மாத்திரைகள்: டெஸ்டோஸ்டிரோனைக் கொண்டுள்ள சிறு இனிப்பு மாத்திரைகளை உதடுகளுக்கும் பல் ஈறுக்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்துக்கொள்ள வேண்டும்.இவற்றிலிருந்து டெஸ்டோஸ்டிரோன் மெதுவாக தோலின் வழியாக இரத்தத்தில் கலக்கிறது.
தடுத்தல்

வயதான ஆண்களில் உடல் பருமன், புகைபிடித்தல், நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவை டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவதற்கான வாய்ப்பை அதிகரிக்கலாம். எனவே, உடற்பயிற்சியும் ஆரோக்கியமான உணவுப் பழக்கமும் இதுபோன்ற பிரச்சனைகளின் காரணமாக டெஸ்டோஸ்டிரோன் அளவு குறையும் வாய்ப்பைக் குறைக்கலாம்.

ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படாமல் விடுவதாலும் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறையலாம். சில மருந்துகளாலும் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறையலாம். இந்த அடிப்படைக் காரணங்களுக்கு சிகிச்சையளிப்பதால், இந்த பிற உடல்நலப் பிரச்சனைகளும் தீரக்கூடும்.

இயற்கை முறையிலும் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க முடியும். எடையைக் குறைப்பதன் மூலமும், தாங்குத்திறன் சார்ந்த உடற்பயிற்சிகளைச் (ரெசிஸ்டன்ஸ் எக்சர்சைஸ்) செய்து தசைப் பருமனை அதிகரித்தும் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கலாம்.

மேலும் படிக்க

சிக்கல்கள்

டெஸ்டோஸ்டிரோன் சிகிச்சை முறையில் சில பக்க விளைவுகளும் ஆபத்துகளும் உள்ளன.  டெஸ்டோஸ்டிரோன் சிகிச்சையில் உள்ள ஆபத்துகளில் அடங்குவன:

தூக்கக் கோளாறு: தூக்கத்தில் சுவாசத் தடை (தூக்கத்தின்போது மூச்சுத்திணறல் அல்லது சுவாசம் தடைபடுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுதல்)
தோல் எரிச்சல், தோல் தடித்தல் (ராஷ்) மற்றும் பருக்கள்: சில ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் சிகிச்சை காரணமாக பருக்கள் தோன்றலாம். தோல் பட்டைகள் மற்றும் ஜெல்லைப் பயன்படுத்துவதால் சிலருக்கு தோலில் எரிச்சலும் தடிப்புகளும் (ராஷ்) ஏற்படலாம்.
மார்பகங்கள் விரிவடைதல்
டெஸ்டோஸ்டிரோன் குறைவாக உள்ள ஆண்களுக்கு, இதய நோய்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளன.டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் இரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்தியைத் தூண்டுகிறது. இரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், இரத்தம் கெட்டியாகி, இரத்தக் கட்டிகள் உண்டாகி அதனால் பக்கவாதம் அல்லது மாரடைப்பு ஏற்படலாம்.
மன அழுத்தம் – டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு, அடிக்கடி மனநிலை மாறும், பாலியல் நாட்டம் குறைவாக இருக்கும், அதிகம் எரிச்சலடைவார்கள், தெம்பு குறைந்து காணப்படுவார்கள், தூக்கமின்மை பிரச்சனை இருக்கும் (மன அழுத்தத்தின் அறிகுறிகளை ஒத்த அறிகுறிகள் காணப்படும்)
நீரிழிவு நோய் – டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாக இருப்பது நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
ஆஸ்டியோபோரோசிஸ் – ஆண்களில் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாக இருப்பதால், ஆஸ்டியோபீனியா (எலும்பில் புரதம் மற்றும் தாது உட்பொருள்கள் குறைதல்) ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது என்று சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது, இது பிறகு ஆஸ்டியோபோரோசிஸ் உருவாக வழிவகுக்கும்.
ப்ராஸ்டேட் சுரப்பி பெருத்தல் (BPH) மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோய் – டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாக இருக்கும் ஆண்களுக்கு, ப்ராஸ்டேட் சுரப்பி பெரிதாகும் (இது புற்று நோயல்ல) வாய்ப்பும் ப்ராஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
அறிவாற்றல் கோளாறுகள் – வயது அதிகரிக்க அதிகரிக்க, டெஸ்டோஸ்டிரோன் அளவும் அதோடு அறிவாற்றல் திறனும் குறைந்துகொண்டே வரும். டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாக இருப்பது, அல்சீமர் நோய் உருவாவதற்கான காரணமாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
மலட்டுத்தன்மை: விந்தணு உருவாக்கத்திற்கு டெஸ்டோஸ்டிரோன் அவசியம் என்றாலும், டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிப்பதால் விந்தகச் சுருக்கமும் விந்தணு உற்பத்தியும் குறையலாம். உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு உயர்வது, விந்தணுக்களை உற்பத்தி செய்யும் மற்றொரு ஹார்மோனின் உற்பத்தியை நிறுத்துவதற்கான சமிக்ஞை ஆகும்.
நீர் தங்குதல்: சில ஆண்களுக்கு, டெஸ்டோஸ்டிரோன் சிகிச்சை காரணமாக, திரவம் உடலில் இருந்து வெளியேறாமல் தங்கிவிடலாம், இவர்களின் கால்கள் வீக்கமாக இருப்பதை வைத்து இதனைத் தெரிந்து கொள்ளலாம். இதய செயலிழப்பு, சிறுநீரக செயலிழப்பு அல்லது அரிய கல்லீரல் நோய் கொண்டுள்ள ஆண்களுக்கு இது முக்கியமான பிரச்சனையாகலாம்.
அடுத்த நடவடிக்கைகள்

உங்கள் பாலியல் நாட்டம் குறைவதாக உணர்ந்தால், பாலியல் உந்துதல் குறைந்தால், விறைப்பு குறைந்தால், அல்லது அரிதாகவே விறைப்பு ஏற்பட்டால், தசைப் பருமன் குறைந்தால், முடி உதிர்ந்தால், சோர்வு இருந்தால், உங்கள் மருத்துவரைச் சந்தித்து ஆலோசிக்கவும்.

சிகிச்சையின்போது PSA அளவீடு, ப்ராஸ்டேட் பரிசோதனை, டெஸ்டோஸ்டிரோன் அளவுகள், RBC அளவு, இரத்தச் சிவப்பணு வீதம் (ஹிமேட்டோக்கிரிட்) ஆகியவற்றைக் கண்காணிப்பதற்காக இரத்தப் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். சிகிச்சைக்கு முன்பும் சிகிச்சையின்போதும் எலும்பு அடர்த்திப் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

எச்சரிக்கை

பின்வரும் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும்:
சமீபத்தில் திடீரென்று பாலியல் நாட்டம் குறைந்திருந்தால்
இரவில் விறைப்பு ஏற்படாவிட்டால்
மார்பகம் திடீரென்று பெரிதானால்
ஆணுறுப்புப் பகுதியில் முடி வளர்ச்சி குறைந்திருந்தால்