Home பாலியல் ஆர்க்கைட்டிஸ் – விரைகளில் ஏற்படும் வீக்கம்

ஆர்க்கைட்டிஸ் – விரைகளில் ஏற்படும் வீக்கம்

141

ஆர்கிட்டிஸ் என்பது ஒன்று அல்லது இரண்டு விரைகளிலும் வீக்கம் ஏற்படுவதைக் குறிக்கும் மருத்துவச் சொல்லாகும்.

காரணங்கள்

ஆர்கிட்டிஸ் பொதுவாக வெவ்வேறு விதமான பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று ஏற்படுவதன் காரணமாக ஏற்படுகிறது. மிகவும் பொதுவாக பருவமடைந்த சிறுவர்களுக்கு பொன்னுக்கு வீங்கி வைரஸ் தொற்றுவதன் காரணமாகவே ஆர்கிட்டிஸ் ஏற்படுகிறது. பொன்னுக்கு வீங்கி என்பது உமிழ்நீர் சுரப்பிகளில் வைரஸ் தொற்றினால் வீக்கம் ஏற்படும் ஒரு நிலை ஆகும். விரை வீக்கம் (ஆர்கிட்டிஸ்) சில சிறுவர்களுக்கு உமிழ் நீர் சுரப்பிகளில் வீக்கம் ஏற்படத்துவங்கிய 4 முதல் 6 நாட்களுக்குப் பிறகு உருவாகிறது. பொன்னுக்கு வீங்கி தற்போது இந்தியாவில் மிகவும் அரிதான ஒரு பாதிப்பாகும். அதற்குக் காரணம் குழந்தைப்பருவத்திலேயே பரவலாக தடுப்பூசி (MMR தடுப்பூசி – தட்டம்மை (மெசல்ஸ்), பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்) மற்றும் ருபெல்லா) போட்டு விடுவதே ஆகும்.

ஆர்கிட்டிஸ், புரோஸ்டேட் (சிறுநீர்ப்பை அடியில் இருக்கும் ஒரு சுரப்பி) அல்லது விரைமுனைப்பை (எபிடிடைமஸ் – இது விரைகளுக்குப் பின்னுள்ள சுருண்ட குழாய் ஆகும், இதில் விந்தணுக்கள் சேமிக்கப்படும் மற்றும் பரிமாற்றப்படும்) ஆகியவற்றிலும் தொற்று ஏற்பட்டு பாதிப்பை உண்டாக்கும், இது எபிடிடைமோ-ஆர்கிட்டிஸ் என அழைக்கப்படுகிறது.

ஆர்கிட்டிஸ் குறிப்பாக பாலியல் ரீதியாக துரிதமாக இயங்கக்கூடிய வயதுகளில் (19 முதல் 35 வயது வரை) உள்ள நபர்களுக்கு ஏற்படும் மேக வெட்டை அல்லது கிளமீடியா போன்ற பால்வினை நோய்களின் (STI) காரணமாகவும் ஏற்படக் கூடும்.

ஆபத்துக் காரணிகள்

பால்வினை நோயின் காரணமாக ஏற்படாத ஆர்கிட்டிஸின் ஆபத்துகாரணிகள் பின்வருமாறு:

45 வயதுக்கும் மேற்பட்ட வயதுக்குப் பிறகு ஏற்படுவது.
மீண்டும் மீண்டும் சிறுநீர்ப்பாதையில் தொற்று ஏற்படுதல்.
நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கிக் கொண்டிருத்தல்.
பிறக்கும் போதே (பிறவிக்குறைபாடுகள்) சிறுநீர்க் குழாயில் ஏற்படும் பாதிப்புகள்.
சிறுநீர்க் குழாயில் செய்யப்படும் அறுவை சிகிச்சை (சிறுநீரக அறுவை சிகிச்சை)
பால்வினை நோயினால் ஏற்படும் ஆர்கிட்டிஸின் ஆபத்துக்காரணிகள், பின்வருமாறு:

பலருடன் உடலுறவு கொள்தல்.
மிக ஆபத்தான பாலியல் நடத்தைகளில் ஈடுபடல்.
ஏற்கனவே மேகவெட்டை அல்லது வேறு பால்வினை நோய்களால் பாதிக்கப்பட்டிருத்தல்.
பால்வினை நோயினால் பாதிக்கப்பட்ட நபருடன் உடலுறவு வைத்துக் கொள்ளுதல்.
அறிகுறிகள்

ஆர்கிட்டிஸின் அறிகுறிகள் பின்வருமாறு:

ஒன்று அல்லது இரண்டு விரைகளுமே வலி ஏற்படுதல்.
ஒன்று அல்லது இரண்டு விரைகளிலும் வீக்கம் ஏற்படுதல்.
காய்ச்சல்
பாதிக்கப்பட்ட பக்கத்தில் இடுப்பு பகுதியில் வலி.
விரைகள் மென்மையாகிவிடுதல், வீங்கிவிடுதல் மற்றும் கடுமையாகிவிடுதல் போன்ற உணர்வு ஏற்படுதல்.
ஆண்குறியில் திரவக்கசிவு
விந்தில் இரத்தம் கலந்திருத்தல்.
உடலுறவில் ஈடுபடும் போது அல்லது விந்து வெளியேறும் போது வலி ஏற்படுதல்.
சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படுதல் (டைசூரியா)
நோய் கண்டறிதல்

பின்வருனவனற்றைக் கண்டறிவதற்காக உங்கள் மருத்துவர் உடல் பரிசோதனை மேற்கொள்வார்:

பாதிக்கப்பட்ட பகுதியில் விரைகள் விரிவடைந்திருக்கிறதா மற்றும் மென்மையாக இருக்கிறதா எனப்பார்க்க.
பாதிக்கப்பட்ட பக்கத்தில் இடுப்பு பகுதியில் பெரிதாகிய நிணநீர் கணுக்கள் ஏற்பட்டிருக்கிறதா எனப்பார்க்க
புரோஸ்டேட் சுரப்பி விரிவடைந்திருக்கிறதா அல்லது மென்மையாகி இருக்கிறதா (மலக்குடல் பரிசோதனை மூலம்) எனப்பார்க்க
சில ஆய்வகச் சோதனைகள் மேற்கொள்ளவும் உத்தவிடப்படலாம், அவை:

முழு இரத்த எண்ணிக்கை (CBC)
விரைச்சிரை அல்ட்ராசவுண்ட்
யூரிஅனாலிசிஸ்
சிறுநீர் கல்ச்சர் பரிசோதனை (தெளிவாகக் கண்டறிய முடியும்)
கிளமீடியா மற்றும் மேக வெட்டை (சிறுநீர்க்குழாய் ஸ்மியர்) போன்ற பால்வினை நோய் போன்றவை ஏற்பட்டிருக்கிறத என்பதை சோதிப்பதற்கான சோதனைகள் மேற்கொள்ளலாம்.
சிகிச்சை

பாக்டீரியா தொற்றின் காரணமாக இது ஏற்பட்டிருந்தால் நுண்ணுயிர் எதிர் மருந்துகள் தரப்படும். (பால்வினை நோயின் காரணமாக இது ஏற்பட்டிருந்தால் உங்களுடன் உடலறவு கொள்ளும் நபரும் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்)
எதிர்ப்பு அழற்சி மருந்துகள் மற்றும் வலி நிவாரணிகள்.
படுக்கையில் ஓய்வு, அத்லெட்டிக் ஸ்ட்ரேப்புகள் பயன்படுத்தி விதைப்பைக்கு ஆதரவு கொடுத்தல் மற்றும் பனிக்கட்டி தொகுப்புகளை பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்தல்.
தடுத்தல்

பின்வரும் நடவடிக்கைள் ஆர்கிட்டிஸைத் தடுக்க உதவும்

உங்களது குழந்தைகளுக்கு பொன்னுக்கு வீங்கிக்கு எதிரான தடுப்பூசியைப் போடுங்கள், இதுவே வைரஸ் பாதிப்பினால் உருவாகும் ஆர்கிட்டிஸுக்கு பொதுவான காரணம் ஆகும்.
பாதுகாப்பான உடலுறவு கொள்வதன் மூலம் ஆர்கிட்டிஸுக்குக் காரணமாகும் பால்வினை நோய்களைத் தவிர்க்கலாம்.
சிக்கல்கள்

விரைகள் சுருங்குதல் (டெஸ்டிகுலார் ஆட்ரோபி): பொன்னுக்கு வீங்கியின் காரணமாக ஆர்கிட்டிஸ் பாதிப்பு ஏற்பட்ட சில சிறுவர்களுக்கு விரைகள் சுருங்கிவிடும்.
கருவுறாமை: ஆர்கிட்டிஸ் இரண்டு விரைகளையும் சேதப்படுத்தினால், விந்து எண்ணிக்கை குறையக்கூடும், இதன் விளைவாக கருவுறாமை ஏற்படலாம்.
நாள்பட்ட எபிடிடைமஸ்: மீண்டும் மீண்டும் தொற்று ஏற்பட்டு எபிடிடைமஸ் ஏற்படலாம்.
விதைப்பையில் கட்டி உருவாக்கம்.
விதைப்பையின் தோல்பகுதியில் ஃபிஸ்துலா (குழாய் போன்ற பாதை) உருவாகலாம் .
அடுத்து செய்ய வேண்டியவை

பலவித காரணங்களால் விதைப்பையில் வலி ஏற்படலாம். உங்களது விதைப்பையில் வீக்கம் அல்லது வலியினை நீங்கள் உணர்ந்தால், குறிப்பாக வலி திடீரெனத் தோன்றினால். உங்களது மருத்துவரை ஆலோசிக்கவும்.

எச்சரிக்கை

சில நேரங்களில் விதைப்பையில் அல்லது விரைகளில் திடீரென ஏற்படும் வலி, விதையுறுப்புக்களில் முறுக்கு ஏற்பட்டு விரைகளுக்கு இரத்த வழங்கல் தடுத்து நிறுத்தப் படுவதால் ஏற்படலாம். இந்த நிலை உடனடியாக அறுவை சிகிச்சை தேவைப்படும் ஒரு மருத்துவ அவசர நிலை ஆகும்.

விரைகளில் ஏற்படும் சிறிது வலி அல்லது வலியில்லாத வீக்கம் விரைவிதைப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கக் கூடும். நீங்கள் வலியின் காரணங்களை மேலும் மதிப்பீடு செய்ய உங்களது மருத்துவரைப் பார்க்க வேண்டும்.