Home பாலியல் பாலியல் ரீதியாக பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்..!.

பாலியல் ரீதியாக பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்..!.

24

பெண்கள் ஹார்மோன் சுற்று மாற்றங்கள் மற்றும் பல்வேறு வகையான உடற்கூறு மற்றும் உளவியல் மாற்றங்களுடன், பாலியல் ரீதியான பிரச்சனைகள் என் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம்.

சில நேரங்களில் இவை மிகவும் தனிப்பட்ட பிரச்சனைகளாகவும் மற்றும் பிறரிடம் பகிர்ந்து கொள்ள முடியாதவாறும் இருக்கின்றன. பெண்கள் வெளியில் சொல்ல கூச்சப்படும் சில ஆரோக்கிய பிரச்சனைகளை பார்க்கலாம்..

• மார்பக காம்புகளைச் சுற்றி முடிகள் இருப்பதை எண்ணி பெண்கள் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பார்கள். உடல் ரீதியான உறவின் போது இது மிகவும் சங்கடப்பட வைக்கும் விஷயமாக பெண்களுக்கு இருக்கும். எனினும், இது பெண்கள் பருவமடையும் காலத்திலும், மாதவிடாய் நிற்கும் காலத்திலும் அல்லது கர்ப்ப காலத்திலும் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் நடக்கக் கூடிய சாதாரண செயல்பாடு தான்.

சில நேரங்களில், இது பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்ட்ரோம் (Polycystic Ovarian Syndrome-PCOS) என்ற நோயின் நிலையை வெளிப்படுத்துவதாகவோ அல்லது கர்ப்பப் பையில் உள்ள கட்டிகளை வெளிப்படுத்துவதாகவோ கூட இருக்கலாம். எனவே, இந்நேரங்களில் மருத்துப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இதுப்போன்ற சீரியஸான விஷயங்கள் எதுவும் பரிசோதனையில் வெளிவராமல் இருந்தால், முடிகளை வெட்டவோ அல்லது பிடுங்கவோ செய்யலாம்.

மார்பக காம்புகள் இருக்கும் இடம் மிகவும் உணர்வு மிகுந்த இடமாக இருப்பதால், அங்கு வாக்ஸிங், ப்ளீச் அல்லது ஷேவ் செய்வதைத் தவிர்க்கவும். மாறாக, உங்களுடைய மருத்துவரைக் கலந்தாலோசித்து இந்த பிரச்சனையை சரி செய்யுங்கள்.

• அதிகமாக வெள்ளைப்படுவதை பொறுத்த வரையில், மிகவும் சாதாரணமாக வரக்கூடிய பிரச்சனையா அல்லது உண்மையிலேயே கவனிக்க வேண்டிய பிரச்சனையா என்பதைப் பெரும்பாலான பெண்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஒருவிதமான துர்நாற்றத்துடன் அதிகப்படியான வெள்ளைப்படுதல் பெண்ணுறுப்பிலிருந்து வெளியேறுவதற்கு பூஞ்சைகளால் உருவாக்கப்பட்ட வஜினைட்டிஸ் அல்லது பெண்ணுறுப்பில் தொற்று ஏற்பட்டிருத்தல் ஆகியவை காரணமாக இருக்கலாம்.

இதன் காரணமாக அரிப்பும், கெட்டியான வெள்ளைப்படுதலும் ஏற்படும். பாக்டீரியா தொற்று காரணமாக இருந்தால் வெள்ளைப்படும் திரவம் மெலிதானதாகவும், பச்சை நிறத்திலும் இருப்பதுடன், துர்நாற்றமடிக்கவும் செய்யும். முறையான கவனிப்பு இல்லாமல் போனால் இந்த பிரச்சனை உங்களை UTI என்ற பிரச்சனைக்குள் தள்ளிவிடும். ஜாக்கிரதை!

• பெண்கள் பலரும் இந்த சிறுநீர்பை கட்டுப்பாட்டுப் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார்கள். இருமல், தும்மல் அல்லது கடுமையான வேலையின் போதும் தான் 73% பெண்களுக்கு இந்தத் தொந்தரவு வருகிறது.

இடுப்பை வளைத்து செய்யும் உடற்பயிற்சி (Pelvic Floor Exercises) போன்ற சிலவற்றால் இந்த சிறுநீர்ப்பை கட்டுப்பாட்டை சரிசெய்ய முடியும்.

சிற்சில மாற்றங்களை நம்முடைய தினசரி வாழ்க்கையில் மாற்றிக் கொள்வதன் மூலம் இந்த தொந்தரவிலிருந்து எளிதில் விடுபட முடியும். ஆனால், இது உங்களுக்கு மிகவும் பிரச்சனையைத் தருவதாக நினைத்தால், தயங்காமல் மருத்துவரின் உதவியை நாடிச் செல்லவும்.