Home பாலியல் உடலுறவின் போது பெண்களின் மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்கள்!

உடலுறவின் போது பெண்களின் மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்கள்!

31

இங்கு உடலுறவு கொள்ளும் போது பெண்களின் மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

நாம் வளரும் போது, நம் உடலின் வெளித்தோற்றத்திலும் மாற்றங்கள் ஏற்படும். அதேப் போல் உடலுறவில் ஈடுபடும் போதும், உடலில் சில மாற்றங்கள் நிகழும். இக்கட்டுரையில் பெண்கள் உடலுறவில் ஈடுபடும் போது, அவர்களின் மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் உறவில் ஈடுபடும் பெண்களின் மார்பக அளவில் மட்டுமின்றி, சரும நிறத்திலும் மாற்றங்கள் ஏற்படும். அதுமட்டுமின்றி, காதல் வயப்பட்டு பெண்கள் உடலுறவில் ஈடுபடும் போது இன்னும் ஏராளமான மாற்றங்கள் ஏற்படும். சரி, இப்போது அதுக்குறித்து காண்போம்.

மார்பகங்கள் பெரிதாகும் பெண்கள் உடலுறவில் ஈடுபடும் போது, அவர்களின் மார்பகங்கள் 20-25% வரை பெரிதாகும் என்பது தெரியுமா? மேலும் மாதவிலக்கு காலங்களிலும் பெண்களின் மார்பகங்கள் சற்று வீங்கி பெரிதாகும்.

மார்பக நிறங்கள் மாறும் உடலுறவு காலத்தில், பெண்களின் மார்பகங்கள் பிங்க் நிறத்தில் மாற ஆரம்பிக்கும். இதற்கு ஈஸ்ட்ரோஜென் என்னும் ஹார்மோன்கள் மற்றும் இரத்த நாளங்களில் இரத்த ஓட்டம் வேகமாக இருப்பது தான் காரணம்.

உச்சக்கட்ட இன்பம் உடலுறவில் ஈடுபடும் போது, பெண்களின் மார்பகங்களைத் தூண்டும் போது, எளிதில் உச்சக்கட்ட இன்பத்தை பெண்கள் அடைய உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பிணைப்பை அதிகரிக்கும் உடலுறவின் போது, ஆண்கள் பெண்களின் மார்பகங்களைத் தொடுவதன் மூலம், தம்பதியருக்குள் இருக்கும் பிணைப்பு இன்னும் வலுவாகும் என்பது தெரியுமா?

மார்பகங்களில் உள்ள அரியோலா (Areola) பெரிதாகும் பெண்களின் பாலுணர்ச்சி தூண்டப்பட்டு, உடலுறவில் ஈடுபடும் போது, மார்பகங்களின் அளவு மட்டும் பெரிதாவதோடு, மார்பங்களில் உள்ள அரியோலாவின் அளவும் பெரிதாகும்.

வியர்வை அதிகரிக்கும் உடலுறவில் பெண்கள் ஈடுபடும் போது, மார்பக பகுதியிலும் வியர்ப்பதால், ஆண்களாலும் முழுமையாக இன்பத்தை அனுபவிக்க முடியுமாம்.

நரம்புகள் தெரியும் பெண்களின் பாலுணர்ச்சி அதிகரிக்கும் போது, மார்பகங்களில் உள்ள சிறிய நரம்புகளும் தெரிய ஆரம்பிக்கும்.