Home சூடான செய்திகள் ஜெயம் ராஜா இயக்கத்தில் கார்த்தி

ஜெயம் ராஜா இயக்கத்தில் கார்த்தி

27

 

சகுனி, அலெக்ஸ் பாண்டியன் படங்களுக்கு பிறகு கார்த்தி, இயக்குனர் ராஜா இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளைய தளபதி விஜய் நடிப்பில் வேலாயுதம் படத்தை இயக்கிய ஜெயம் ராஜா, தற்போது கார்த்திக்காக திரைக்கதையை உருவாக்கி வருவதாக தகவல் பரவியுள்ளது.

வேலாயுதம் படத்துக்கு பிறகு, இளம் நாயகனின் நடிப்பில் படம் இயக்க திட்டமிட்டிருந்தேன்.

முற்றிலும் வித்தியாசமான வகையில் சண்டைக் காட்சிகள் நிறைந்த திரைக்கதையை உருவாக்கி வருகிறேன்.

இரு மொழிகளில் இப்படம் எடுக்கப்படுகிறது. முழு திரைக்கதையை எழுதி முடித்தபின்பு, சில மாதங்கள் கழித்து பட வேலைகள் தொடங்கும் என்று இயக்குனர் ஜெயம் ராஜா தெரிவித்துள்ளார்.

திரையுலகில் ராஜாவுக்கு ரீமேக் ராஜா என்ற பெயர் இருக்கிறது. இவர் இயக்கிய எம் குமரன் சன் ஆப் மஹாலட்சுமி, சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற திரைப்படங்கள் திரையுலகில் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.