Home பாலியல் செக்ஸுக்கு பிறகு இதெல்லாம் செய்ய மறந்துடாதீங்க.

செக்ஸுக்கு பிறகு இதெல்லாம் செய்ய மறந்துடாதீங்க.

37

செக்ஸ் உறவுக்கு முன்னர் பல்வேறு விதங்களில் தங்களை தயார்படுத்திக் கொள்வது பெண்களின் வழக்கம்.ஆனால் செக்ஸ் உறவு முடிந்த பின்னர்,படுக்கையில் அப்படியே தூங்கிப் போவதை பல பெண்கள் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.ஆனால் செக்ஸ் உறவுக்கு பின்னர் பெண்கள் செய்ய வேண்டிய சில விஷயங்களை ஆய்வுகள் பட்டியலிட்டுள்ளன.அவை என்ன என்பதை இங்கு பார்க்கலாம்..!

செக்ஸ் உறவின் முடிந்தாலும்,செக்ஸ் உறவின் போது வெளியாகும் திரவங்கள் உங்கள் விரல்கள்,உதடுகள் மற்றும் இனப்பெருக்க உறுப்பு ஆகிய பகுதிகளில் தங்கியிருக்கும்.இவை உங்கள் உடலில் பூஞ்சைத் தொற்றை ஏற்படுத்தக் கூடும்.எனவே இந்த உடல் பாகங்களை அதிக வாசனை இல்லாத சோப்பைக் கொண்டு கழுவுங்கள்.

செக்ஸ் உறவுக்கு பிறகு,சிறிதளவு தேங்காய் எண்ணெயைக் உடலில் தேய்த்துக் கொண்டு குளித்தால்,அந்தரங்க உறுப்பில் ஏற்படும் எரிச்சல்,வீக்கம் குறையும்.

செக்ஸ் உறவின் போது உங்கள் உடலில் அதிக அளவு நீர்ச்சத்து குறைந்திருக்கும்.எனவே உடலுறவு முடிந்ததும் இரண்டு கிளாஸ் தண்ணீர் அருந்துவது நல்லது.

ப்ரோ-பயாடிக் கொண்ட உணவுகளை,செக்ஸ் உறவுக்கு பின்னர் சாப்பிட்டால்,செக்ஸ் உறவின் போது இனப்பெருக்க உறுப்பு வழியாக வெளியேறிய நல்ல பாக்டீரியாக்கள்,மீண்டும் உடலில் சமன்படுத்தப்படும்.

செக்ஸ் உறவுக்கு பின்னர் பருத்தியினால் செய்யப்பட்ட,தளர்வான உள்ளாடைகளை அணிந்து தூங்கச் செல்லுங்கள்.நைலான் மற்றும் இறுகலான உள்ளாடைகளை அணிவது அந்தரங்க உறுப்பில் கெட்ட பாக்டீரியாக்களை உருவாக்கும்.இதனால் பூஞ்சைத் தொற்று கூட ஏற்படும்.