Home பாலியல் முதலிரவுக்கு முன் பெண்களுக்கு எழும் அபத்தமான எண்ணங்கள்..

முதலிரவுக்கு முன் பெண்களுக்கு எழும் அபத்தமான எண்ணங்கள்..

46

ஆண், பெண் என இரு பாலினத்தவருக்கும் முதலிரவு குறித்த பதட்டம் நிச்சயம் இருக்கத் தான் செய்யும். அளவுக்கு அதிகமான ஆர்வமே இதற்குக் காரணம் எனலாம். காதல் திருமணத்தில் இது போன்ற பதட்டம் குறைவாக இருக்கும், ஆனால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் பதட்டம் அதிகமாகவே இருக்கும்.

அதிகளவு பதட்டத்தில் பெண்கள் மனதில் எழும் சில குழப்பங்களும், அச்சங்களும் எப்படியிருக்கும் என்பனவற்றை இங்குப் பார்ப்போமா..

முதலிரவின் போது மேக்கப்பை முழுமையாகக் களைத்துவிடலாமா? வேண்டாமா என்ற எண்ணம் பெண்கள் மத்தியில் அதிகம் இருக்கிறதாம். இரவில் மேக்கப் களைப்பதிலும், பகலில் அவன் எழுந்திருக்கும் முன்னரே மேக்கப் போட்டுவிட வேண்டும் என்றும் கூடச் சில பெண்கள் எண்ணுகிறார்கள்.

வெளியிடங்களுக்குச் சென்று வேறு ஒருவரது குளியலறையை ஒருமுறை பயன்படுத்தவே பெண்கள் அதிகம் தயங்குவார்கள். இதில், நாளையிலிருந்து வேறு ஒரு நபரின் குளியலறையைத் தான் பயன்படுத்த வேண்டுமா? என்ற எண்ணமும் அவர்களிடம் அதிகம் எழுகிறது.

தப்பித் தவறியும் குறட்டை வந்துவிடக் கூடாது, மானமே போய்விடும் என்று எண்ணுகிறார்கள். இதுவே, கணவன் குறட்டை விட்டால் என்ன செய்வது என்றும் குழம்புவார்கள்.

வாய் துர்நாற்றம் என்பது அனைவருக்கும் பொதுவானது. காலையில் அனைவருக்கும் இது இருக்கும். ஆனால், புதிய நபர் அவரிடம் காலை வணக்கம் சொல்லும் போதே வாய் துர்நாற்றம் வந்துவிட்டால் என்ன செய்வது?

தூங்கி எழுந்த பிறகு அவன் (கணவன்) எப்படி இருப்பான்? எவ்வாறு நடந்து கொள்வான், என்ன பேசுவான் என்பது பற்றி யோசித்துக் கொண்டே இருப்பார்களாம்.

எத்தனை நாட்களுக்குப் புடவைக் கட்டிக்கொண்டு உறங்க வேண்டும், இரவு உடை அணிந்து உறங்கலாமா, எப்போதிருந்து.. என்பது பற்றியெல்லாம் கூடப் பெண்கள் யோசிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.

ஒருவேளை நேரதாமதமாக எழுந்துவிட்டால் தவறாக எடுத்துக் கொள்வார்களோ… புதிய சூழல் எப்படி இருக்கும் என்பது பற்றி எல்லாம் கூடப் பெண்கள் யோசிக்கிறார்கள்.