Home ஆரோக்கியம் முன் நீரழிவு என்றால் என்ன? வந்தால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது!!

முன் நீரழிவு என்றால் என்ன? வந்தால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது!!

123

முன் நீரழிவு என்பது சர்க்கரை வியாதி வருவதற்கு முன் உண்டாகும் நிலை. அவ்வாறு ஏற்பட்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

ப்ரீ டயாபடிஸ் என்பது சர்க்கரை வியாதி வருவதற்கு முன்கூட்டி வரும் உடல் பாதிப்பு. இதனை முன் நீரழிவு என்று கூறுவார்கள். அதாவது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். ஆனால் சர்க்கரை வியாதியின் அறிகுறி பரிசோதனையிலோ இருக்காது. இதனைதான் முன் நீரழிவு என்று கூறுவர். அடனை அப்படியே விட்டுவிடால் சர்க்கரை வியாதி உறுதி.

இந்த சமயத்தில் முன்னெச்செரிக்கையாக இருந்து கொண்டால் சர்க்கரை வியாதி வராமல் தடுக்கலாம். நீங்கள் உங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும். உணவு, பழக்க வழக்கங்களில் மாற்றம் கொண்டு வந்தால் சர்க்கரை வியாதி வராமல் தடுக்கலாம்.

உடல் எடை குறைவு :

உடல் எடையை கட்டாயம் இந்த சமயத்தில் குறைக்க வேண்டும். சோடா கலந்த பானங்கள், சர்க்கரை ஆகியவ்ற்றை குறைத்தாலே உடல் எடை குறைந்துவிடும்.

விட்டமின் டி பரிசோதனை :

விட்டமின் டி யின் அளவை பரிசோதித்து விடுங்கள். ஏனென்றால் விடமின் டி குறைந்தால் சர்க்கரை வியாதி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். உடனடியாக விட்டமின் சப்ளிமென்ட்ரி எடுத்துக் கொள்ள வேண்டும்.

விட்டமின் டி பரிசோதனை :

விட்டமின் டி யின் அளவை பரிசோதித்து விடுங்கள். ஏனென்றால் விடமின் டி குறைந்தால் சர்க்கரை வியாதி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். உடனடியாக விட்டமின் சப்ளிமென்ட்ரி எடுத்துக் கொள்ள வேண்டும்.

xதைராய்டு பரிசோதனை :

தைராய்டு அளவு குறைவாக இருந்தால், உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம். தைராய்டு அளவு இயல்பிற்கும் குறைவான அளவு இருந்தால் சர்க்கரை வியாதி வரும் வாய்ப்புகள் அதிகம். எனவே தைராய்டு பரிசோதனையும் செய்துவிடுவது நல்லது.

எப்போதும் பிஸியாக இருங்கள் :

வேலையே இல்லாமல் உட்கார்ந்து இருப்பது உங்களுக்கு சர்க்கரை வியாதியை வரவழைத்துவிடும். ஆகவே உடலிற்கு உழைப்பு தரும் வகையில் எப்போதும் ஏதாவது வேலை செய்தால் குளுகோஸ் வளர்சிதை மாற்றம் நன்றாக நடைபெறும். இதனால் சர்க்கரை வியாதியை தடுக்க முடியும்.

சரியான கொழுப்பை தேர்ந்தெடுங்கள் :

நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள சூரிய காந்தி எண்ணெய், நட்ஸ், மீன் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதால் சர்க்கரை வியாதியை நீங்கள் தள்ளிப் போகச் செய்ய முடியும்.

தூங்கும்போது மூச்சுத் திணறல் உள்ளதா?

நன்றாக தூங்கும்போது திடீரென மூச்சுத் திணறல் உருவாகி விழிப்பு வந்துவிடும். இவ்வாறு நிலை தொடர்ந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இந்த பிரச்சனையும், முன் நீரழிவும் சேர்ந்து ம் சர்க்கரை வியாதியை வரவழைக்கக் கூடியது.