Home ஜல்சா 100 பேருடன் உறவுகொண்ட அழகி கர்ப்பம்:ஐவரில் ஒருவரே தந்தை! இந்த செய்தி தமிழ்த்தேசிய செய்திகள்...

100 பேருடன் உறவுகொண்ட அழகி கர்ப்பம்:ஐவரில் ஒருவரே தந்தை! இந்த செய்தி தமிழ்த்தேசிய செய்திகள் இணையத்திலிருந்து பிரதிசெய்யப்பட்டது

24

இங்கிலாந்து: இங்கிலாந்தைச் சேர்ந்த ஜென்னி தாம்ப்சன் இப்போது கர்ப்பமாக இருக்கிறாராம். ஒரு பெண் கர்ப்பமாவது நியூஸ் இல்லை. ஆனால் ஜென்னியின் கர்ப்பம் ரொம்ப விசேஷமானது. இவர் 100 பேருடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்ட வரலாற்றுப் பின்னணி கொண்டவர். இங்கிலாந்து கால்பந்து ஸ்டார் வேயன் ரூனியுடன் பின்னிப் பிணைந்து நட்பு பாராட்டியவர். இப்போது அவர் கர்ப்பமாகியுள்ளது கூட யாரால் என்பது தெளிவாகத் தெரியவில்லையாம். ஆனால் ஐந்து பேரை சுட்டிக் காட்டி அவர்களில் ஒருவர்தான் என் பிள்ளைக்கு அப்பா என்று கூறுகிறார் ஜென்னி.

ஜென்னி கதையைக் கேட்டால் உங்களுக்கு ஜன்னியே வந்துவிடும். அப்படி ஒரு அபாரமான பின்னணியைக் கொண்டவர் இந்த ஜென்னி. 19 வயதிலேயே எஸ்கார்ட் வேலைக்கு வந்தவர் ஜென்னி. எஸ்கார்ட் என்றால் ஆண்களுக்குத் துணையாக கூட மாட போய் வருவது. அப்படியே அவர்களை சிறப்பாக கவனித்துக் கொள்வது. இத்தனை வருட கால எஸ்கார்ட் அனுபவத்தின் மூலம் 100க்கும் மேற்பட்டோருடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டுள்ளதாக பெருமையுடன் கூறியவர் ஜென்னி. அம்மணிக்கு இத்தனைக்கும் வயது 23தான் ஆகிறது. இங்கிலாந்து கால்பந்து வீரர்கள் பலருடனும் கூட ஜென்னிக்கு நல்ல உறவு உண்டு. அவர்கள், ஒருவரை ஒருவர் எப்படி உறவில் மிஞ்சினார்கள் என்ற கதையையெல்லாம் அம்பலத்தில் விட்டு அவர்களை அலற வைத்தவர் ஜென்னி. இங்கிலாந்து வீரர் வேயன் ரூனியின் மனைவி கொலீன் 5 மாத கர்ப்பமாக இருந்தபோது, ஜென்னியுடன் உறவு வைத்துக் கொண்டாராம்.

அதேபோல ரூனியின் பரம வைரியான மரியோ பலடெல்லியுடனும் அவர் உறவு வைத்துக் கொண்டார். இருவரில் யாரை பெஸ்ட் ஆக நினைக்கிறீர்கள் என்று ஒருமுறை கேட்டபோது பலடெல்லி பல விஷயங்களில் ரூனியை விட பெரிய ஆள்தான் என்று நமுட்டுச் சிரிப்புடன் கூறி ரூனியை டென்ஷனாக்கினார். ரூனியை விட பலடெல்லிக்கு நல்ல நகைச்சுவை உணர்வும், ஜாலியான பேச்சும் நிறைய உண்டு என்றும் மேலும் ரூனியை டென்ஷனாக்கினார். பலடெல்லியும், ஜென்னியும் ஐந்து முறை சந்தித்துள்ளனர். அதில் 2 முறை பலடெல்லியின் கேர்ள் பிரண்ட் ரபேலா பிகோ இருக்கும்போதே அவருக்குப் பின்னால் போய் உறவு வைத்துக் கொண்ட கேடி ராணி கில்லாடி ராஜாவாக அசத்தியவர்கள். தனது பத்து காதலர்களில் பலடெல்லிக்கே முதலிடம் என்றும் கூறி பிரளயம் கிளப்பியவர் ஜென்னி. அதேசமயம், ரூனியைப் பற்றிப் பேசினாலே டென்ஷனாகி விடுகிறார் ஜென்னி.

ஒரு நாள் இரவு முழுக்க ஜாலியாக இருக்க தனக்கு 1200 பவுண்டு பணம் கொடுத்தார் ரூனி என்று கூறுகிறார் ஜென்னி இப்படி ஜென்னியின் அனுபவங்கள் நிறைய. அதைச் சொன்னால் தனியாக புக் போட்டு பெரும் காசு பார்த்து விடலாம். இப்போது 6 மாத கர்ப்பமாக இருக்கும் ஜென்னி அதற்கு யார் காரணம் என்பது சரியாக தெரியாமல் குழம்பியிருக்கிறாராம். இருப்பினும் ஒரு ஐந்து பேரை அவர் சந்தேகிக்கிறார். அவர்களில் ஒருவர்தான் கண்டிப்பாக எனது குழந்தைக்குத் தந்தை என்று கூறும் ஜென்னி, இதற்காக டிஎன்ஏ சோதனை செய்யப் போவதாகவும் கூறியுள்ளார். இங்கிலாந்தில் எல்லாம் எப்படித்தான் மழை பெய்யுதோ தெரியலையே..