அவசர கருத்தடை மாத்திரைகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகளைப் பற்றி கூறுகிறார்.
பெயரிலேயே பொருள் உள்ளது. அவசர கருத்தடை மாத்திரைகள் என்பது வேறு எந்த வழியும் இல்லை என்ற நேரத்தில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதாகும். இந்த மாத்திரைகள் அதிகளவு ஹார்மோன்களைக் கொண்டுள்ளது, இந்த ஹார்மோன்கள் மாதவிடாய் சுழற்சியுடன் வினைபுரிந்து தேவையற்ற கர்ப்பம் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கும்.இது உங்கள் வழக்கமான கருத்தடைக்கான மாற்று அல்ல. உங்கள் வழக்கமான கருத்தடை முறை தோல்வியடைந்தால் மட்டுமே அவசர கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. கற்பழிக்கப்பட்ட பெண்களை தேவையற்ற கர்ப்பம் போன்ற எதிர்காலத்தில் உண்டாகும் பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களுக்கு அவசர கருத்தடை மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.
அவசர கருத்தடை மாத்திரை எளிதில் கிடைக்கிறது என்பதற்காக, உலகில் உள்ள பெண்கள் அவற்றை அதிகம் எடுத்துக்கொள்கின்றனர். கடைசியில் பல்வேறு பிரச்சனைகளை அடைந்து கடைசியில் மருத்துவர்களிடம் வருகின்றனர். பாலியல் செயல்பாடுகளில் ஆர்வமுள்ள அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பற்ற உடலுறவுக்குப் பின், காலை இந்த மாத்திரையை எடுத்துகொள்வது மிகவும் எளிதாக இருக்கிறது. அதிகளவு ஹார்மோன்களைக் கொண்ட இந்த மாத்திரைகளை தொடர்ந்து பயன்படுத்துவதால், தங்கள் உடல் சந்திக்கும் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள தவறிவிடுகிறார்கள். அவசர கருத்தடை மாத்திரைகளை எடுத்துகொள்ளும் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சிக் காலத்தில் சிக்கல் ஏற்படும். இந்தச் சிக்கல் கருவுறுதல் மற்றும் பிற உடலியல் கோளாறுகள் ஏற்பட வழிவகுக்கும். இந்த மாத்திரைகளைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் பற்றி அந்த மாத்திரைகளின் பேக்கேஜிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும். நம் உடலின் உயிரியல் நுட்பங்களில் நாம் தொடர்ந்து மாற்றத்தை ஏற்படுத்தினால், அது சீர்குலைந்து போகும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அந்த சேதத்திலிருந்து அது மீண்டும் இயல்பு நிலைக்கு வரமுடியாமல் போகலாம்.
அவசர கருத்தடை மாத்திரைகளை எடுத்துகொள்ளும் பெண்களிடம் நடத்தப்பட்ட சில ஆய்வுகள், அவர்கள் சந்தித்த பக்க விளைவுகளைப் பட்டியலிட்டுள்ளன. மாதவிடாய் பிரச்சனைகள் அனைவருக்கும் மிகப் பொதுவானதாக உள்ளது.வெளியிடப்பட்ட பிற ஆய்வில், அவசர கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தும் பெண்களின் ஊக்கங்கெடுத்து மற்ற கருத்தடை மாத்திரைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது. அவசர கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்திய பிறகும், மிகவும் பருமனான பெண்களுக்கு கர்ப்பம் ஏற்படும் ஆபத்து குறைவதில்லை.
பெரும்பாலான பெண்கள் மிகத் தாமதமாகவே தங்கள் மாதவிடாய் சுழற்சி சரியில்லை என்பதை உணருகின்றனர். பின்னர் உங்கள் மாதவிடாய் சுழற்சியை சரிசெய்ய நிறைய சிகிச்சைகள் தேவைப்படும், மேலும் ஏற்பட்ட சேதத்தை மாற்றமுடியாது. தாய்மையடைதலில் பிரச்சனை ஏற்படலாம், மலட்டுத்தன்மை உள்ளவர்கள் பட்டியலில் நீங்களும் சேரக்கூடலாம்.
தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்க வழக்கமான மற்றும் பாதுகாப்பான கருத்தடை முறைகளை கைனகாலஜிஸ்ட்டுகள் வலியுறுத்துகின்றனர். கருத்தடைக்கான மாத்திரைகள் மற்றும் ஆணுறைகள் ஆகியவை அனைத்து இடங்களிலும் எளிதில் கிடைக்கிறது.
பாதுகாப்பான உடலுறவு என்பதற்கு உங்கள் துணைவரைக் காட்டிலும் நீங்களே பொறுப்பு. பாதுகாப்பான உடலுறவிற்கு நீங்கள் முக்கியத்துவம் அளிக்கவில்லையெனில், உயிர்கொல்லி நோயான எச்.ஐ.வி உட்பட பல பால்வினை நோய்கள் ஏற்படும் ஆபத்துக்குள்ளாவீர்கள்.
பாதுகாப்பான மற்றும் உங்கள் ஆரோக்கியத்திற்கு இடர் விளைவிக்காத கருத்தடை முறையை தேர்ந்தெடுப்பதில் வெட்கப்படாதீர்கள்.