லண்டனில் ரியூப் மற்றும் ரயிலில் செல்வோர் பலர், ஆபாசப் படங்களை பார்த்த வண்ணம் செல்வதாகவும். அருகில் உள்ள பெண்கள் மற்றும் சிறுவர்களோடு பயணிக்கும் பெற்றோருக்கு அது பெரும் சங்கடமாக இருப்பதாகவும் பல முறைப்பாடுகள் 2016ல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை அடுத்து எவராவது இது தொடர்பாக தகவல் கொடுத்தால், தாம் குறித்த நபரை கைதுசெய்வோம் என்று மெற்றோ பொலிடன் பொலிசார் தற்போது திட்டவட்டமாக அறிவித்துள்ளார்கள்.
பயணிகள் மற்றும் மக்கள் நடமாடும் இடத்தில், இதுபோல அநாகரீகமாக நடந்துகொள்ள வேண்டாம் என்று பொலிசார் இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். ரயிலில் இனி ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்களை பார்பதை தவிர்க்குமாறும். மீறினால் கைதுசெய்யப்படுவீர்கள் என்றும் பொலிசார் இறுதியான எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.