உடலுறவில் பெண்ணுறுப்புக்குள் நுழைந்த உடனே ஆணுறுப்பு தன் கட்டுப்பாட்டை இழந்து போவதால் உடன் விந்து வெளியேறல் ஏற்படும்.
சிலருக்கு ஆணுறுப்பை நுழைப்பதற்கு முன்பு கூட விந்து வெளியேறிவிடுவதுண்டு. அந்நேரத்தில் முழுமையான விறைப்புத்தன்மை இருக்க வேண்டுமென்பதில்லை
மேலும் சிலருக்கு பெண்ணை முத்தமிடும் போதோ, அவளுடன் நெருக்கமாக இருக்கும் போதோ, தொலைபேசியிலோ, நேரிலோ பேசிக்கொண்டிருக்கும்போதே கூட விந்து கசிவு ஏற்படுவதுண்டு.
ஆணுறுப்பு நுழைந்த இரண்டு நிமிடங்களுக்குள் விந்து வெளியேறல் உண்டாகிறது என்று ஒரு ஆய்வு கூறுகிறது. ஆண்களில் மூன்றில் ஒரு சிலருக்கு இரண்டு நிமிடத்திலும், நிறைய நபர்களுக்கு ஒரு நிமிடத்துக்குள் ஸ்கலிதம் உண்டாகிறது. வேறு சிலருக்கோ இருபது வினாடிகள் கூட இயங்க முடிவதில்லை.
இது உடலில் காரணங்களால் அல்லது உளவியல் காரணங்களால் மட்டும் ஏற்படுவதில்லை என்பதும், மனரீதியாக பெண்களோடுள்ள அன்பும், வெறுப்பும் கலந்த மனோபாவமே உடன் விந்து வெளியேறலுக்கு காரணமென்றும், உறவு கொள்ளும் ஆண், பெண்களின் உளவியல் எண்ணவோட்டத்தையே இது சார்ந்துள்ளது எனவும் கூறப்படுகிறது. மேலும் மனைவியிடம் அதிகமாக வெருப்பில்லாத அன்பு செலுத்தியவர்கள் பாலியலில் அதிக நேரத்தை எடுத்துள்ளதும் தெரியவருகிறது.
மனைவியிடம் அன்பு இல்லாவிட்டால் கூட உடன் விந்து வெளியேறல் ஏற்படும்.
எனவே மனைவியை நேசியுங்கள். விந்து முந்துதலை கட்டுப்படுத்த மருத்துவரை ஆலோசியுங்கள்.