ஆசை வார்த்தை கூறி பிளஸ்-2 மாணவியை கற்பழித்து ஆபாச படம் எடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த செல்போனையும் பறிமுதல் செய்தனர். திருவனந்தபுரம் அருகே பிளஸ்-2 மாணவியை கற்பழித்து ஆபாச படம் எடுத்த வாலிபர் கைது திருவனந்தபுரம்: கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள சிப்பன்பாறா பகுதியைச் சேர்ந்தவர் விபின்தாஸ்,
(வயது 26). இவர் திருவனந்தபுரம் அருகே போத்தன்கோடு பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து கூலி தொழில் செய்து வந்தார்.இவருடன் மேலும் சில தொழிலாளர்களும் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தனர். அதே பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதி கூலி வேலைக்கு சென்ற இடத்தில் விபின்தாசுக்கு பழக்கம் ஆனார்கள். இதனால் அவர்கள் வீட்டிற்கு விபின்தாஸ் அடிக்கடி சென்று வந்தார்.
அப்போது அந்த தம்பதியின் பிளஸ்-2 படிக்கும் மகளுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த மாணவியின் பெற்றோர் கூலி வேலைக்கு சென்ற பிறகு விபின்தாஸ் அந்த வீட்டிற்கு சென்று மாணவியுடன் நெருக்கமாக பழக தொடங்கினார். அவரை காதலிப்பதாகவும்,
திருமணம் செய்வதாகவும் ஆசைவார்த்தை கூறினார். இதை நம்பிய அந்த மாணவியை விபின்தாஸ் கற்பழித்துள்ளார். மேலும் அந்த காட்சியை தனது செல்போனில் படம் பிடித்து வைத்துக்கொண்டு மாணவியை தனது ஆசைக்கு இணங்கும்படி தொடர்ந்து மிரட்டி வந்தார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த மாணவி, தனது பெற்றோரிடம் அதை கூறி அழுதார். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விபின்தாசை கைது செய்தனர். அவரிடமிருந்த செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இவர், இதுபோல வேறு பெண்கள் யாரையும் ஏமாற்றி கற்பழித்துள்ளாரா? என்பது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது.