Home ஜல்சா இந்தி நடிகருடன் கள்ளக்காதல் யாரிந்த நடிகை? இவருக்கு எத்தனை கள்ளக்காதல் ?

இந்தி நடிகருடன் கள்ளக்காதல் யாரிந்த நடிகை? இவருக்கு எத்தனை கள்ளக்காதல் ?

39

பிரபல நடிகரான பர்ஹான் அக்தரும், நடிகை ஷிரத்தா கபூரும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. இந்த் நிலையில் பர்ஹான் வீட்டில் இருந்த ஷிரத்தா கபூரை அவரது தந்தையும், நடிகருமான சக்தி கபூர் பர்ஹான் வீட்டில் இருந்து தன்னுடைய வீட்டிற்கு,

தரதரவென இழுத்து வந்ததாக செய்திகள் வெளியாகியது. இதுகுறித்து சக்தி கபூர் கூறுகையில், கோவாவில் இருந்து திரும்பி வந்ததும் என் மகள் குறித்த செய்தியை படித்து அதிர்ச்சி அடைந்தேன். பர்ஹான் வீட்டில் இருந்து ஷிரத்தாவை நான் இழுத்து வரவில்லை என சக்தி கபூர் விளக்கம் அளித்துள்ளார். பர்ஹான் அக்தர் கடந்த வருடம் தான் தனது மனைவியை பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இவர்களின் விவாகரத்திற்கு ஷிரத்தா கபூர் தான் காரணம் என கூறப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஷிரத்தா கபூர் கூறியதாவது:- பர்ஹான் அக்தர் வீட்டில் இருந்து எனது தந்தை என்னை தரதரவென்று இழுத்து சென்றதாக வெளியான செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இதில் சிறிதும் உண்மை இல்லை. ஏற்கனவே நடிகர் ஆதித்யா ராய் கபூரும் நானும் காதலிப்பதாக வதந்தி பரப்பினார்கள்.

இப்போது பர்ஹான் அக்தருடன் இணைத்து பேசுகிறார்கள். என்னைபற்றி எது சொன்னாலும் தாங்கிக்கொள்வேன். ஆனால் எனது குடும்பத்தினரை இதில் இழுப்பதைத்தான் பொறுக்கமுடியவில்லை. எனது பெற்றோர்கள் வீட்டில்தான வசிக்கிறேன். எனக்கு தனியாக வீடு இருந்தாலும் அங்கு நான் இருப்பது இல்லை.” இவ்வாறு ஷிரத்தா கபூர் கூறினார்.