Home உறவு-காதல் பெண்கள் ஏன் ஆண்களை நம்புவதில்லை தெரியுமா

பெண்கள் ஏன் ஆண்களை நம்புவதில்லை தெரியுமா

33

திருமண வாழ்க்கையில் பாதுகாப்பின்மையை நீங்கள் ஒருமுறை உணர்ந்துவிட்டால், அந்த சந்தேகமே கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் வாழ்வை துன்பமாக்கிவிடும். அது உங்கள் ஆழ்மனதில் தங்கிவிட்டால் அவ்வளவுதான்.

துணையை தேர்வு செய்வதில் பயம்

திருமண வாழ்க்கையில் பாதுகாப்பின்மையை நீங்கள் ஒருமுறை உணர்ந்துவிட்டால், அந்த சந்தேகமே கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் வாழ்வை துன்பமாக்கிவிடும். அது உங்கள் ஆழ்மனதில் தங்கிவிட்டால் அவ்வளவுதான்.

ஆண்கள் தங்கள் மீது அதிகளவு ஆதிக்கம் செலுத்துவதாலேயே தாங்கள் பாதுகாப்பில்லாததுபோல் உணர்கிறோம் எனப் பல பெண்கள் ஆண்களைக் குறைகூறுகிறார்கள்.

ஆண்கள் சில சமயங்களில் மிகுந்த பாசத்துடன் இருப்பார்கள். உண்மையிலேயே பெண்கள் திருமண வாழ்க்கையில் பாதுகாப்பில்லாதது போல் உணரக் காரணம்தான் என்ன? அதை சரிசெய்துவிட்டாலே நீங்கள் பாதி சாம்ராஜ்யத்தை கைப்பற்றிவிடலாம்.

தன்னம்பிக்கையின்மை

வாழ்க்கையில் பிடிப்பே இல்லாமல் இருப்பதற்கு தன்னம்பிக்கை இல்லாததும் ஒரு காரணம். உங்கள் துணைவன் தேர்ந்தெடுக்கும் சில விஷயங்கள் எதிர்மறையான விளைவை உண்டாக்கலாம். ஆனால் நீங்கள் எதிர்மறை கண்ணோட்டத்தோடு பார்க்கிறீர்கள் என்றுகூட அவர் நினைக்கலாம். நீங்கள் சொல்லும் ஒவ்வொரு அறிவுரையையும் அவர் தவறாக எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு மிக அதிகமாக இருக்கிறது. அந்த அறிவுரைகள் தன்னுடைய சுய மரியாதைக்குத் தடையாக இருக்கிறது என்றுகூட உங்கள் கணவர் கருத இடமுண்டு.

துணையை தேர்வு செய்வதில் பயம்

பெண்கள் ஒரு விஷயத்திற்கு பல மாற்று யோசனைகளை வைத்திருப்பார்கள். ஆண்களைவிட பெண்களுக்கு பொருத்தமாக துணையைத் தேடுவதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறோம். அப்படி ஒரு மனநிலை பொதுவாக நம்முடைய சமூகத்தில் ஆழப்பதிந்து விட்டதால், ஆண்களின் தேர்வில் அவர்களுக்கு ஒருவிதமான பயம் உண்டாகிறது.

பொருளாதாரப் பாதுகாப்பின்மை

ஒரு மனிதனால் தன்னுடைய பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்ய முடியாமல் போனால் அது அவனுடைய ஈகோவைக் காயப்படுத்தும் விஷயமாக மாறிவிடும். அதனால் உள்ளப்போராட்டம் அதிகமாகிவிடும். அதையடுத்து எல்லா விஷயங்களிலும் பாதுகாப்பில்லாதது போல் உணர்வார்கள்.
அதன்மூலம் உறவுகளில் விரிசல் உண்டாகத் தொடங்கிவிடும்.

ஆண்கள் சுயநலம் மிக்கவர்களாகவும் பிடிவாதம் கொண்டவர்களாகவும் இருப்பதால் அவர்களைச் சமாளிப்பது கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் நீங்கள் விரும்புவது அந்த ஆணின் உறவைத் தான். அதனால் பாதுகாப்பில்லாதது போல் உணர்வதை உங்களிடம் இருந்து தூக்கியெறிய முயற்சி செய்யுங்கள்.