இன்று உலக அளவில் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
வெளியில் போகும் போது போன்களை ஆண்கள் தங்கள் சட்டை பாக்கெட்டிலும் பெண்கள் தங்களின் உள்ளாடையிலும் அதிகம் வைத்து கொள்கிறார்கள்.
இப்படி அவர்கள் போன்களை வைப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?
பெண்கள் தங்கள் உள்ளாடையில் ஸ்மார்ட் போன்களை வைப்பதால் அவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
பேண்டின் பின்பிற பாக்கெட்டில் தங்கள் போன்களை வைப்பவர்களுக்கு அவர்கள் கால்களை சுற்றியும், முதுக்குக்கு கீழான பின்புற பகுதியிலும் வலிகள் ஏற்படுவதாக நரம்பியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதே போல ஸ்மார்ட் போன்களை பாக்கெட்டில் வைப்பதால், முக்கியமாக கழிவறைகளுக்கு செல்லும் போது கீழே தண்ணீரில் விழ அதிக வாய்ப்புள்ளது. மேலும், போன் சூடானால் அது எரிந்து நம் உடலுக்கு பங்கம் விளைவிக்கவும் வாய்ப்புள்ளது.
இதே போல ஆண்கள் தங்கள் பேண்ட் பாக்கெட்டுகளில் வைத்தால் போனிலிருந்து வரும் கதிர்வீச்சு காரணமாக அவர்களின் விந்தணுக்கள் குறையக்கூடும்.