உடலுறவு கொள்வதற்கு முன்பாக சில விஷயங்களின் மேல் கவனம் கொள்ள வேண்டும். அப்போது தான் அன்றைய தினம் கொண்டாட்டம் நிறைந்ததாக இருக்கும். வேர்வை, மாசுக்கள் ஆகியவற்றால் நம்முடைய துணை நம் அருகில் வர தயக்கம் காட்டலாம். அதனால் சில கீழ்வரும் சில விஷயங்களை உடலுறவுக்கு முன்பாக செய்வது மிக அவசியமானதாகும்.
உடலுறவுக்கு முன்பாக, நிச்சயம் பல துலக்க வேண்டும். உங்கள் துணை அருகில் வரும்போது, உங்கள் வாயிலிருந்து வரும் துர்நாற்றம் உங்கள் துணையை சங்கடத்தில் ஆழ்த்தும். அதனால் நிச்சயம் பல துலக்கிய பின்பு உங்கள் லீலையைத் தொடங்குவது நல்லது.
அதேபோல் உடலுறவுக்கு முன்பாக நன்கு குளிப்பது நல்லது. அது உங்களையும் உங்கள் துணையையும் புத்துணர்ச்சியுடன் இருக்கச் செய்யும். அதுவே உங்கள் துணைக்கு மூடை கிளப்பும். வேர்வையுடன் கட்டிலில் இருந்தால் அது இருவரின் மூடையுமே கெடுத்துவிடும். குறிப்பாக, உங்கள் துணை உங்களைத் தூண்டும் இடங்களை நன்கு தேய்த்துக் குளிப்பது நல்லது. அது இருவருக்குமே அதிக ஆர்வத்தைத் தூண்டிவிடும்.
வயிறை முடிந்தவரையிலும் கொஞ்சம் காலியாக வைத்திருக்கலாம். கட்டிலுக்குப் போவதற்கு முன்பாக சிறுநீர் கழித்தல், மலம் கழித்தல் போன்றவற்றை முடித்துவிட்டு வருவது நல்லது.
முதல் முறை உறவு கொள்பவரோ அல்லது அனுபவம் மிக்கவரோ எவராக இருந்தாலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது நல்லது. உங்கள் துணை மற்நதாலும் நீங்கள் அதுகுறித்து ஞாபகப்படுத்துங்கள். உங்கள் வசம் எப்போதும் வைத்திருப்பது நல்லது.
நகங்களை ட்ரிம் பண்ணிக் கொள்வது நல்லது. நகங்கள் மிக நீளமாகவும் கூர்மையாகவும் இருந்தால், உடலுறவின் போது உண்டாகும் கிளர்ச்சியால் நீங்கள் உங்கள் துணையின் முதுகு மற்றும் அந்தரங்கப் பகுதிகளை அழுத்திப் பிடிக்கும்போதும் கீறும்போதும் காயங்கள் உண்டாகிவிடும். அதனால் உடலுறவுக்கு முன்பு பெண்கள் நெயில் பாலிஷ் போட்டுக் கொள்வது நல்லது. ஆண், பெண் இருவருமே நகங்களை ட்ரிம் செய்து வைத்திருப்பது இதுபோன்ற சங்கடங்களைத் தவிர்க்கும்.
பெண்கள் கால்களை நன்கு ஷேவ் செய்து கொள்வது நல்லது. உங்கள் கை, கால்களி