Home பாலியல் உறவுமுறைக்கு லியூப்ரிகன்ட் எண்ணெய் பயன்படுத்தினால் தவறில்லை!

உறவுமுறைக்கு லியூப்ரிகன்ட் எண்ணெய் பயன்படுத்தினால் தவறில்லை!

46

feelings20140528094316தம்பதிகள் உடலுறவில் ஈடுபடும் போது பல சமயங்களில் உராய்வு மற்றும் பிறப்புறுப்பு வறட்சி காரணமாக வலி உண்டாகும் வாய்ப்புகள் உள்ளன. இதை தவிர்க்க லியூப்ரிகன்டாய் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் பக்க விளைவுகள் இல்லை என்று கூறப்படுகிறது.

லியூப்ரிகன்ட் என்றால் என்ன?

லியூப்ரிகன்ட் என்பது உராய்வு ஏற்படுவதை தடுக்கும் எண்ணெய் தான். ஒருசில ஆணுறைகளில் உராய்வை தடுக்க செயற்கை லியூப்ரிகன்ட்கள் சேர்த்து தயாரிக்கின்றனர். இதனால் உறவில் ஈடுபடும் போது உராய்வு தடுக்கப்படும்.

இயற்கை எண்ணெய் ஏன்?

எண்ணெய்கள் இயற்கை லியூப்ரிகன்டாய் சிலர் பயன்படுத்துவார்கள். ஆனால், எல்லா எண்ணெய்களும் இவ்வாறு பயன்படுத்த முடியாது / கூடாது. பிறப்புறுப்பு மென்மையான சென்ஸிட்டிவான பகுதி என்பதால் எண்ணெய் தேர்வு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும்.

தேங்காய் எண்ணெய்!

தேங்காய் எண்ணெய் இயற்கையானது மற்றும் மருத்துவ குணம் கொண்டுள்ளது. மேலும், இது சருமத்திற்கு உகந்த எண்ணெய். இதனால் எந்த பக்கவிளைவுகளும் உண்டாக வாய்ப்புகள் இல்லை.

செயற்கை லியூப்ரிகன்ட் :

சந்தையில் செயற்கை லியூப்ரிகன்ட்களும் விற்கப்படுகின்றன. ஆனால், இவற்றில் கிளிசரின், பாராபென், ப்ரோபைல்பாராபென், மெத்தில்பாராபென் மற்றும் பல பயன்படுத்தப்படுகின்றன. செயற்கை பொருட்களான இவை கண்டிப்பாக எதிர்மறை பக்கவிளைவுகள் உண்டாக்கும் வாய்ப்புகள் உள்ளன.

பக்கவிளைவுகள்:

செயற்கை லியூப்ரிகன்ட் பயன்பாட்டால், எரிச்சல், அரிப்பு, ஈஸ்ட் தொற்று போன்றவை உண்டாக வாய்ப்புகள் இருக்கின்றன.

ஒருசிலருக்கு பிறப்புறுப்பு பகுதியில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறது எனில், தேங்காய் எண்ணெயே ஆயினும், மருத்துவரிடம் ஆலோசித்துவிட்டு பயன்படுத்துவது சிறந்தது.