Home பெண்கள் உடல் கட்டுப்பாடு உங்கள் இடுப்பு மற்றும் பிட்டத்திலிருந்து கொழுப்பை இழக்க அர்த்த ஷாலபாசனாவை முயலுங்கள்.

உங்கள் இடுப்பு மற்றும் பிட்டத்திலிருந்து கொழுப்பை இழக்க அர்த்த ஷாலபாசனாவை முயலுங்கள்.

26

yoga-perfect-butt-in-tamilஅர்த்த ஷலாபாசனம் அல்லது அரைவெட்டுக்கிளி நிலை, உங்கள் இடுப்பும் பிட்டம் மற்றும் தொடைகளுக்கு ஒரு சிறந்த ஆசனமாகும். இது உங்கள் செரிமானத்தை மேம்படுத்தவும் மலச்சிக்கலை தீர்க்கவும் ஒரு சிறந்த ஆசனமாகும். அது இரத்த ஒட்ட்த்தையும் மேம்படுத்துகிறது மற்றும் தொடர்ந்து இந்த ஆசனத்தைச் செய்வது நீரிழிவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
இந்த ஆசனத்தை செய்வதற்கான நிலைகள் :
உங்கள் வயிறு தரையைத் தொடும்படி உங்கள் கைகள் உடலில் பக்கவாட்டில் இருக்கும்படி வைத்து படுத்துக் கொள்ளுங்கள். உங்கள் கால்களை ஒன்றுக்கொன்று அருகிலிருக்கும் படி வைத்துக் கொண்டு மற்றும் உங்கள் தாடை அடிவயிறு, மார்பு ஆகியவை தரையைத் தொடும்படி இருப்பதை உறுதி செய்யுங்கள்.
மூச்சை உள்ளிழித்து உங்கள் இடது காலை பின்புறமாக உயர்த்துங்கள். உங்கள் முட்டிகளை வளைக்காமல் உங்கள் காலை நேராக வைத்துக் கொள்ளவும். மேலும் உங்கள் மேலுடம்பு உங்கள் தாடையுடன் சரிசமமாக தரையில் தொடும்படி வைத்துக் கொள்ள உறுதி செய்யுங்கள்.
உங்கள் காலைத் தூக்கிய நிலையில் 10 முதல் 15 விநாடிகள் வைத்திருங்கள். நீங்கள் ஆழமான,தொடர்ச்சியான மூச்சிழுப்பதை உறுதி செய்யுங்கள்.
மெதுவாக மூச்சை வெளியே விட்டு உங்கள் இடது காலை கீழே கொண்டு வரவும்.
உங்கள் வலது காலுடன் இந்த நிலைகளைத் திரும்பச் செய்யுங்கள்
ஒவ்வொரு காலுடன் இந்த ஆசனத்தை 3 முறை திரும்பத் திரும்பச் செய்யுங்கள்
எச்சரிக்கை வார்த்தை :
நீங்கள் ஒரு இதய நோயாளி அல்லது ஒரு குடலிறக்கம் இருப்பவராக இருந்தால்இந்த ஆசனத்தைத்தவிர்க்கவும்
மேலும் நீங்கள் கர்ப்பமாக அல்லது மாதவிடாயுடன் இருந்தால் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.