தோள்பட்டைத் தசையை வலுவாக்கும் இந்த பயிற்சிக்கு ஒன் ஆர்ம் டம்பெல் ரோ (One arm dumbbell row) என்று பெயர். இப்போது இந்த பயிற்சியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
சற்று உயரமான சமதளப் படுக்கையின் இரண்டு பக்கங்களிலும் டம்பெல்களை வைத்துக்கொள்ள வேண்டும். இடது கையைச் சமதளப் படுக்கையில் நேராக வைக்க வேண்டும். இடது காலை மடித்த நிலையில் படுக்கையில் வைக்க வேண்டும்.
இப்போது வலது கையால் டம்பெல்லைத் தூக்க வேண்டும். முதுகெலும்பு நேராக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். மூச்சை உள்ளிழுத்தபடி வலது கைமுட்டியை மடித்து டம்பெல்லை மேலே உயர்த்த வேண்டும்.
சில விநாடிகளுக்குப் பிறகு, மூச்சை வெளியேவிட்டபடி பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோன்று இடது பக்கத்தில் செய்ய வேண்டும். இந்தப் பயிற்சியின் மூலம் நடுமுதுகுத் தசை, பைசெப்ஸ், தோள்பட்டைத் தசைகள் வலுப்பெறும்.
முதுகு வலி உள்ளவர்கள், முதுகில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் இந்த பயிற்சியை செய்யக்கூடாது.