Home சூடான செய்திகள் தாம்பத்தியத்தால் பெண்களுக்கு கிடைக்கும் உடல் ரீதியான நன்மைகள்

தாம்பத்தியத்தால் பெண்களுக்கு கிடைக்கும் உடல் ரீதியான நன்மைகள்

92

yIUn2CrRQMCzIN6twlLc_Chronic-Pain-5-Ways-Cannabis-Help-Sex-Life-Subhead-Partnered-Foreplayபல பெண்கள் தங்கள் உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான நலனின் மீது அக்கறை கொள்வதே இல்லை. ஆண்களைப் போலவே பெண்களுக்கும் பாலியல் ரீதியான ஆரோக்கியம் மிகவும் முக்கியமாகும். உடலுறவில் ஈடுபடுவது நல்ல ஐடியா தான் என்றாலும் கூட மாதவிடாய் காலத்தின் போது வலியை குறைக்க உதவும்.

பெண்கள் பரவச நிலையை அடையும் போது, அவர்களின் கர்ப்பப்பை சுருக்கமடையும். இதனால் உடலில் வலியை ஏற்படுத்தும் பொருட்கள் நீங்கும். இந்த செயல்முறையால் உங்கள் உடலில் இருந்து இரத்தமும் திசுக்களும் வேகமாக நீங்கும். இதனால் மாதவிடாய் நீடிக்கும் நாட்களின் எண்ணிக்கையும் குறையும். தலைவலி என காரணம் காட்டி உடலுறவை தவிர்ப்பது எல்லாம் அந்தக்காலம். ஆனால் உடலுறவு கொள்வதால் ஒற்றைத் தலைவலி பிரச்சனைகள் தடுக்கப்படும் என தற்போதைய ஆய்வுகள் கூறுகிறது.

உடலுறவில் ஈடுபடும் போது உற்பத்தியாகும் என்டார்பின்கள் நல்ல உணர்வை உண்டாக்கும். இது வலியை குறைக்க உதவும். எண்டார்பின்கள் என்பது சந்தேகமே இல்லாமல் நமக்கு தேவையான ஒரு மிக முக்கியமான ஹார்மோனே. அது வெளிப்படும் போது நாம் சந்தோஷமாகிறோம். இதனால் உடல் ரீதியான தடைகளை தகர்த்து எரிந்து நல்ல தூக்கத்தைப் பெறலாம். மேலும் ப்ரோலாக்டின் என்ற ஹார்மோன் (தூங்கும் போது இயற்கையாகவே இதன் அளவு அதிகமாக இருக்கும்) வெளிப்படும் போது, நல்ல தூக்கத்தை அளிக்கும்.

சீரான முறையில் உடலுறவில் ஈடுபட்டால், நோய்வாய் படும் வாய்ப்புகள் குறையும். அதிகமாக உடலுறவு கொள்ளாதவர்களை விட, அதிகமாக உடலுறவு கொள்பவர்களுக்கு ஆன்டிஜென் இம்யூனோக்ளோபின் ஏ 30% அதிகமாக இருக்கும் ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது. உடலுறவில் ஈடுபடும் ஒவ்வொரு நிமிடத்திலும், ஆண்கள் 4.2 கலோரிகளையும், பெண்கள் 3.1 கலோரிகளையும் எரிக்கின்றனர் என ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது.