Home குழந்தை நலம் குழந்தைகளுக்கு தனி பெட்ரூம் தேவையா?

குழந்தைகளுக்கு தனி பெட்ரூம் தேவையா?

30

Captureஒரு குழந்தை 5 வயதை எட்டி விட்டாலே-அதாவது ஓரளவுக்கு விவரம் தெரியத் தொடங்கியதும், அது ஆணாக இருந்தாலும் சரி; பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு தாய்-தந்தை, உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டார் என்ற கட்டமைப்புடன் கூடிய பாதுகாப்பு இருக்கிறது என்ற உத்தரவாதத்தை அளிக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை.

தவிர, குழந்தைகளை தைரியசாலிகளாகவும், எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளக் கூடியவர்களாகவும் வளர்க்க வேண்டியதும் அவசியம். அதற்கு அவர்களை குழந்தைப் பருவத்திலேயே தயார்படுத்த வேண்டும். அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் குழந்தைகள் 4 அல்லது 5 வயதாகி விட்டாலே, அவர்களுக்கென்று தனி அறை, தூங்குவதற்கு தனி பெட், படிப்பதற்கு, டி.வி பார்ப்பதற்கு சுதந்திரம் என சுயமாக அவர்கள் வேலைகளை அவர்களே பார்த்துக் கொள்ள வழிவகை செய்கிறார்கள்.

குழந்தைகளுக்கென்று தனி பெட்ரூம் கொடுப்பதால், தன்னிச்சையாக அவர்களால் செயல்படக்கூடிய மனோநிலை ஏற்படுகிறது. அச்சமின்றி அவர்கள் தூங்கக்கூடிய சூழல் காரணமாக, வெளியில் எங்கு சென்றாலும் அவர்களுக்கு எதையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் ஏற்படுவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. அதேநேரத்தில் அதிக சுதந்திரம் காரணமாக பெற்றோரின் கண்காணிப்பில்லாத நிலையும் ஏற்படுகிறது.

அதுவே ஒரு குறிப்பிட்ட வயதில், அறியாப் பருவத்தில் தவறிழைக்கவும் தூண்டுவதாக அந்த தகவல் கூறுகிறது. குழந்தைகளை தனி அறையில் விடுவதன் மூலம் சாதகங்கள் இருப்பது போல் பாதகங்களும் இருப்பதை மறுக்க முடியாது. அமெரிக்காவைப் பொருத்தவரை 13 வயதை எட்டிய பதினெண் பருவத்தினர் (இருபாலரும்) தங்களுக்கென்று துணையைத் தேடிக் கொள்ளும் நிலை உள்ளது. டேட்டிங் போன்ற நண்பர்களுடன் ஊர் சுற்றுவதற்கும் அந்த சுதந்திரம் வித்திடுகிறது.

அங்குள்ள வசதி, வாய்ப்புகளும், சட்ட- திட்டங்களும் அப்படி இருப்பதால் மிகச்சிறிய வயதிலேயே அதாவது 20 வயதை எட்டுவதற்குள்ளாகவே பாலுறவு வைத்துக் கொள்ள நேரிடுவதாகத் தெரியவந்துள்ளது. சரியான நபரைத் துணையாகத் தேர்வு செய்தல், ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ்நாட்டு கலாச்சாரம் எல்லாம் அமெரிக்காவில் காற்றில் பறக்கவிட்ட கதைதான் என்பது பலருக்கும் தெரியும்.

இப்படியிருக்க, நம்மூரில் குழந்தைகளுக்கு தனி அறை என்பது பற்றி எப்படி யோசிக்க முடியும்? சென்னை போன்ற பெருநகரங்களில், புறநகர்ப் பகுதிகளை நோக்கி மக்கள் குடிபெயர்ந்து விட்ட நிலையில், தங்களின் மகன்-மகள்களை கல்லூரிக்கு அனுப்பி விட்டு பெற்றோர் கவலைப்பட வேண்டிய சூழ்நிலைதான் உள்ளது.