Home சமையல் குறிப்புகள் சில்லி பனீர்

சில்லி பனீர்

21

Captureஎன்னென்ன தேவை?

குடைமிளகாய் – 2
உருளைக்கிழங்கு – ஒன்று
பட்டாணி – அரை கப்
வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
பனீர் துண்டுகள் – ஒரு கப்
இஞ்சி விழுது – கால் தேக்கரண்டி
பூண்டு – கால் தேக்கரண்டி
எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
நெய் – கால் தேக்கரண்டி
கரம் மசாலா – அரை தேக்கரண்டி
தண்ணீர் – ஒரு கப்
கொத்தமல்லி இலை – சிறிது
அரைக்க:
வெங்காயம்
தக்காளி
இஞ்சி
பூண்டு
மசாலா:
மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
தனியா தூள் – அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
சீரகத்தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப

எப்படிச் செய்வது?

தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். பனீரை வறுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். குடைமிளகாய் மற்றும் உருளைக்கிழங்கை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி அரைத்த விழுதை ஊற்றி பச்சை வாசனை போகும் வரை தீயை மிதமாக வைத்து வதக்கவும். அதில் மசாலா தூள் வகைகளை சேர்த்து வதக்கவும்.

அதன் பிறகு அதில் நறுக்கி வைத்திருக்கும் குடைமிளகாய் மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி விடவும்.

பின்னர் அதில் உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி விட்டு வேக விடவும். விருப்பப்பட்டால் பட்டாணியும் சேர்த்து செய்யலாம்.

இறுதியில் வறுத்த பனீர் துண்டுகளை போட்டு நன்றாக ஒரு முறை கிளறி மேலும் ஐந்து நிமிடம் வேக விடவும்.

கலவை நன்கு கெட்டியாக வந்தவுடன் இறக்கி மற்றொரு பாத்திரத்தில் மாற்றி மேலே கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கவும். சுவையான சில்லி பனீர் ரெடி. இதை நெய் சாதம், பூரி, பரோட்டா, ரொட்டி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.