Home பெண்கள் தாய்மை நலம் மகளுக்கு தந்தை சொல்லிக் கொடுக்க வேண்டியவை

மகளுக்கு தந்தை சொல்லிக் கொடுக்க வேண்டியவை

26

Captureமகன்கள் அம்மாவுக்கும், மகள்கள் அப்பாவுக்கும் தான் அதிகமாக வக்காளத்து வாங்குவார்கள். ஓர் தகப்பனாக உங்கள் மகளிடம் தினமும் பல்வேறு விஷயங்கள் பற்றி நீங்கள் கூற வேண்டும். அவை என்னவென்று பார்க்கலாம்.

எல்லா அப்பாக்களின் குட்டி தேவதை அவர்களது மகள் தான். ஆனால், இதை நீங்கள் வெளியேவும் வாயை திறந்து சொல்ல வேண்டும். இயல்பாகவே பெண் குழந்தைகள் அப்பா செல்லமாக தான் இருப்பார்கள். மேலும், ஆண் குழந்தைகளை விட தங்கள் தந்தையை பற்றி பெருமிதமாய் பேசுவதும் பெண் குழந்தைகள் தான்.

உங்களிடம் இருந்து சில ஆசை வார்த்தைகள், உத்வேகப்படுத்தும் பொன் மொழிகளை பெண் குழந்தைகள் எப்போதும் எதிர்பார்பார்கள். மேலும், அம்மாவை விட, அப்பாவின் சொல்லுக்கு தான் பெண் குழந்தைகள் அதிகமாக கட்டுப்படுவார்கள். இதற்காகவாவது நீங்கள், அவர்களை செல்லம் கொஞ்சுவதற்கு மேலாக ஓரிரு உத்வேக வார்த்தைகள் சொல்லி ஊக்கமளிக்க வேண்டும்.

முகநூலில் முகப்பு படம் வைப்பதில் இருந்து, பேருந்தின் நடுவில் கம்பியை பிடித்து நிற்கும் வரை பல இடங்களில் பெண்கள் இன்றளவும் அஞ்சி தான் நடந்து வருகிறார்கள். எனவே, ஓர் தகப்பனாக உங்கள் மகளுக்கு நீங்கள் தினமும் தைரியத்தை ஊட்ட வேண்டும். இந்த தைரியம் தான் பின்னாளில் உங்கள் பெண் எங்கு சென்றாலும் வெற்றியுடன் திரும்ப முக்கிய காரணியாக இருக்கும். எத்தனையோ பெண்கள் தைரியம் குறைவாக இருப்பதால் தான் தங்கள் திறமையை வெளிப்படுத்தாமலேயே இருக்கிறார்கள்.

செயல் முறை அறிவும், கலாச்சாரமும் கற்றுக் கொண்டாலே, இவ்வுலகின் எந்த மூலை, இடுக்கிலும் சென்று சாதித்து வரலாம். பட்டறிவு மட்டுமின்று செயல் முறை அறிவையும், மனிதர்களை படிக்கவும் உங்கள் மகளுக்கு நீங்கள் கற்றுக் கொடுக்க வேண்டும்.

எல்லா மகள்களும் தங்கள் அப்பா ஓர் ஹீரோவாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். தங்களுடைய அப்பா நேர்மையான, உன்னதமான, மற்றவர்களுடைய உணர்வை புரிந்துக் கொள்ள தெரிந்த நல்ல ஹீரோவாக இருக்க வேண்டும் என்று தான் அனைத்து மகள்களும் விருப்புவார்கள்.