இல்லறம் சிதைவதற்கும், சிறப்பதற்கும் இருவர் தான் காரணம், கணவன், மனைவி. இல்லறம் எனும் இருசக்கர வாகனத்தில் ஏதேனும் ஒரு சக்கரம் பழுதடைந்து போனாலும், பயணம் தடைப்பட்டுவிடும் / கடினமாகிவிடும்.
அனைவரின் இல்லறமும் ஆரம்பக் கட்டத்தில் சுமூகமாக, மகிழ்ச்சியாக தான் பயணிக்கிறது. ஆனால், நாட்கள் செல்ல, செல்ல விட்டுக் கொடுத்து போகிறோம் என்ற பெயரில் அளவிற்கு அதிகமாக தங்கள் சுயத்தை இழப்பது தான் உறவில் தொய்வு ஏற்படுவதற்கான முக்கிய காரணம்.
தொய்வு / உறவில் அலுப்பு ஏற்பட்டது போல தோன்றுகிறது எனில், மீண்டும் உறவை சிறக்க வைக்க இந்த ஐந்து வழிகளை முயற்சித்து பாருங்கள்…
இளமை, புதுமை
முதிர்ச்சி அடைதுவிட்டோம் என்ற போர்வையை போர்த்திக் கொண்டு, உங்கள் உண்மை முகத்தை மறைத்துக் கொள்ள வேண்டாம். புதுமையை இழக்காதீர்கள். நாற்பதில் என்ன, ஐம்பதிலும் நீங்கள் இருவர் தான் கணவன், மனைவியாக வாழப் போகிறீர்கள். பிறகு ஏன் தயக்கம். எப்போதும் இளமையாக, இருங்கள், இல்லறம் மகிழ்ச்சியாகவே இருக்கும்.
சுயமரியாதை
உறவின் ஆரம்ப நாட்களில் அவரவர் போக்கில் இருப்பதால் தான் மிகவும் சந்தோசமாக இருக்கிறார்கள். போக, போக விட்டுக் கொடுப்பது, பிடிப்பதை இழப்பது போன்றவை தான் உறவில் தொய்வைக் கொண்டுவந்துவிடுகிறது. எனவே, இது உண்டாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
தனித்துவம்
உங்கள் தனித்துவம் தான், உங்கள் துணைக்கு பிடித்து விரும்பியிருப்பார். இதைக் எக்காரணம் கொண்டும் விட்டுவிட வேண்டாம். பல தம்பதிகள், வேலை, குடும்பப் பொறுப்பு அதிகம் என்றுக் கூறிக் கொண்டு தங்களது தனித்துவத்தை தொலைத்துவிடுகிறார்கள்.
இரண்டாம் வாய்ப்பு
உறவில் சின்ன தொய்வு அல்லது அலுப்பு ஏற்பட்டால் உடனே வேலைக்கு விடுப்புப் போட்டுவிட்டு கணவன், மனைவி வெளியே சென்று வாருங்கள். அதைவிட்டுவிட்டு, மற்றவரிடம் ஆலோசனைக் கேட்பது, புலம்பி தீர்ப்பது. பிறகு வேறு நபர் மீது மனதை அலைபாயவிடுவது எல்லாம் வேண்டாம். சின்ன காயம் அதுவாக ஆறிவிடும். குத்தி, குத்தி சீழ்பிடிக்க வைத்துவிடாதீர்கள்.
தாம்பத்தியம்
உண்மையில் அனைதையும் விட தாம்பத்தியம் தான் உறவின் விரிசிலை அடைக்கும் சிறந்த கருவி. மனம் இணைந்த பிறகு பிறக்கும் தாம்பத்தியம் உறவை சிறக்க வைக்கும் சிறந்த வைத்தியம்.