Home பாலியல் செக்ஸ் சிந்தனைகள் மெம்மரி பவரை அதிகரிக்கிறதாம், ஆய்வு முடிவுகள்

செக்ஸ் சிந்தனைகள் மெம்மரி பவரை அதிகரிக்கிறதாம், ஆய்வு முடிவுகள்

22

sssஇது வரை செக்ஸ் குறித்து ஆராய்ந்த ஆய்வு முடிவுகள் எல்லாம் செக்ஸ் உடலுக்கு நல்லது, உடற்பயிற்சி செய்வதற்கு சமமானது, ரத்த அழுத்தத்தை குறைக்கும், தலைவலியை நீக்கும், மன அழுத்தத்தை குறைக்கும் என்றெல்லாம் தான் கூறினார்கள்.

சமீபத்தில் செக்ஸ் குறித்து எலிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வில் சில மகிழ்ச்சியான முடிவுகள் வெளியாகியுள்ளன, இந்த ஆய்வில் செக்ஸ் சிந்தனைகளினால் ரத்தம் மற்றும் மூளையின் சிலபகுதிகளில் நியூரான் அதிக அளவு உருவாகிறது என்றும் அது நீண்ட கால நினைவாற்றலை அதிகரித்து உள்ளது என்றும் கண்டறிந்து உள்ளனர்.

இவ்வாறு உற்பத்தியாகும் நியூரான்கள் நரம்பு மண்டலத்தின் அடிப்படை கட்டுமான தொகுதிகள் உருவாக்கும் ஒரு சிறப்பு வகையாக செல்லாக இருக்கின்றன. செக்ஸ் நடவடிக்கைகள் அதிகமாகும் போது மூளையின் செல்கள் அதிக அளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கிறது.

மேலும் சோதனைக்குள்ளாக்கப்பட்ட இந்த எலிகள் செக்ஸ் உறவில் ஈடுபடுவதை நிறுத்திய பிறகு அவைகளுடைய மூளைத்திறன் பெருமளவில் குறைந்து விடுகிறது. நெதர்லாந்து மட்டுமின்றி தென் கொரியாவின் பல்கழைக்கழகமும் இந்த ஆய்வு குறித்து முடிவுகளை உறுதி செய்து உள்ளது.

தென் கொரிய பல்கலைக்கழக ஆய்வின்படி, செக்ஸ் அறிவார்ந்த செயல்பாடுகளை அதிகரிக்கிறது.என கூறுகிறது.செக்ஸ் செயல்பாடுகள் மூளையின் பின்மேட்டு ஹிப்பாகோம்பல் (hippocampal) மண்டல பகுதியில் மன அழுத்தம் ஏற்படுத்துவதற்கு எதிராக செயல்படுகிறது என்றும் கூறி உள்ளது. மேலும் வயதானவர்களின் செக்ஸ் செயல்பாடுகள் குறையும் போது அது பல மன அழுத்தங்களை ஏற்படுத்துகிறது என்று கிளாமர் இதழில் வெளிவந்துள்ள செய்தி தெரிவிக்கின்றது.