செக்ஸ் குறித்த சிந்தனை எல்லோருக்கும் தினமும் வரும், இதற்கு வயது வித்தியாசமே கிடையாது என்று சொல்லலாம். பலருக்கும் செக்ஸ் குறித்த சிந்தனை மகிழ்ச்சியானதாகவும் புத்துணர்வு தருவதாகவும் இருக்கும்.
பெண்களை விட ஆண்களே செக்ஸ் குறித்து அதிகம் சிந்திக்கிறார்கள், அமெரிக்காவில் இது குறித்து ஒரு ஆய்வு நடத்தினர், அந்த ஆய்வில் சராசரியாக ஆண்கள் ஒரு நாளைக்கு 19 முறை செக்ஸ் குறித்த சிந்தனையில் மூழ்குகின்றனர், பெண்களோ ஒரு நாளைக்கு சராசரியாக 10 முறை செக்ஸ் குறித்து சிந்திக்கின்றனர் என்று தெரியவந்தது.
அந்த ஆய்வில் தூக்கம், உணவு, செக்ஸ் ஆகிய மூன்றில் எது குறித்து அதிகம் தினமும் சிந்திக்கின்றீர்கள் என்ற கேள்விக்கு பெரும்பாலான ஆண்களின் சிந்தனை செக்ஸ் குறித்தே இருந்துள்ளதாம். ஒரு நாளைக்கு குறைந்தது 1 முறை முதல் 388 முறை வரை செக்ஸ் குறித்த சிந்தித்திக்கின்றார்கள். சராசரியாக ஒவ்வொரு ஆணும் குறைந்தது 19 முறையாவது செக்ஸ் குறித்து நினைக்கிறார்களாம்.
பெண்கள் ஒரு நாளைக்கு 1 முறையிலிருந்து 140 தடவை செக்ஸ் குறித்து நினைக்கிறார்களாம். சராசரியாக ஒவ்வொரு பெண்ணும் 10 முறை செக்ஸ் குறித்த சிந்திக்கின்றார்கள்.
செக்ஸ் குறித்த சிந்தனையினால் தாங்கள் மிகவு மகிழ்வதாகவும் தங்களது மனம் உற்சாகமடைவதாகவும் இந்த சர்வேயில் கலந்து கொண்ட ஆண்களும், பெண்களும் கூறினார்கள். மேலும், செக்ஸ் சிந்தனையுடன் மட்டுமில்லாமல், செக்ஸ் உறவில் ஈடுபடும் ஆசையும் பெரும்பாலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இருந்ததாம்.