Home உறவு-காதல் பெண்களின் மாறி வரும் ரசனைகள்

பெண்களின் மாறி வரும் ரசனைகள்

23

Captureபெண்களின் விருப்பங்களும் எதிர்பார்ப்புகளும், ரசனைகளும் காலத்துக்குத்தக்கபடி மாறிக்கொண்டே இருக்கின்றன. நேற்று போன்று அவர்கள் இன்று இல்லை. இன்று போல் அவர்கள் நாளை இருக்க போவதும் இல்லை. அதனால் ஆண்கள் ரொம்ப குழம்பிபோகக்கூடாது என்பதற்காக பெண்களின் ரசனைகள் விருப்பங்கள் பற்றி அவ்வப்போது ஆய்வுகள் நடந்த வண்ணம் இருக்கின்றன.

பெண்களின் எதிர்பார்ப்புகள் பற்றி இதோ இப்போது வெளியாகியிருக்கும் ஆய்வு தகவல்…

பெண்களின் முதன்மையான எதிர்பார்ப்பு அருகில் இருக்கும் அன்பானவர்(ஆண்) தன்னை கவனிக்க வேண்டும். தன்னைப்பற்றி பேச வேண்டும் என்பது தான். ஆண் அருகில் இருக்கும் பெண்ணை கவனிக்காமல் அவளைப்ற்றி பேசாமல் வேறு ஏதோ பரபரப்பில் மூழ்கியிருப்பதை பெண் விரும்புவதில்லை. தன்னை பக்கத்தில் வைத்து கொண்டு போனில் விளையாடிக்கொண்டிருக்கும் ஆண்களை பிடிப்பதில்லை என்று 61 சதவீதம் பெண்கள் தெரிவித்துள்ளனர். (பாருங்க செல்போனால் பெண்களின் மனசு ரொம்பவும் பாதிக்கப்பட்டிருக்கிறது போல தெரியுதே)

பொது இடத்தில் வைத்து தங்களை மட்டம் தட்டி பேசும் ஆண்களை பெண்களுக்கு பிடிப்பதில்லை. அப்படி மட்டம் தட்டுபவர்கள் மீது தங்களது வெறுப்பு அதிகரித்து கொண்டே போகிறது. (மட்டம் தட்டாதீங்க எப்படி புகழ்ந்து பேசுறது எப்படின்னு கத்துக்கோங்க)

ஆண்கள் எப்போதும் தங்களும் ஒட்டிக்கொண்டிருப்பதை பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை என்பது தெரியவந்துள்ளது. தனியாகவோ அல்லது மனதுக்கு பிடித்த தோழிகளுடனோ வெளியே செல்ல விரும்புகிறார்கள். அப்போது மகிழ்ச்சியாக இருக்கவும், சாகசங்கள் செய்யவும் விரும்புவார்கள். தாங்கள் உடலால் வளர்ந்திருந்தாலும் தங்களுக்குள்ளே ஒரு குழந்தை மனம் எப்போதும் இருந்து கொண்டிக்கும்.

மனதுக்கு பிடித்தவர்களுடன் ஆடிப்பாடவும், விளையாடவும் அந்த குழந்தை மனம் விரும்பும் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று பெண்களில் பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். எனவே நான் இல்லாமல் எங்கும் போகாதே…ஆடுறது…பாடுறது… குழந்தைத்தனமாக விளையாடுவதை எல்லாம் நிறுத்திக்கொள்.. என்று சொல்லும் ஆண்களை தங்களுக்கு பிடிப்பதில்லை என்று பெண்கள் சொல்லுகிறார்கள். (அவங்க குழந்தைமாதிரி விளையாட விரும்பும் போது நீங்களும் குழந்தையாக மாறி கூட சேர்ந்து விளையாட வேண்டியதுதான்.)

பெண்கள் தங்கள் அடிப்படை தேவையை பூர்த்தி செய்ய போதிய வசதிஇன்றி தவிக்கிறார்களாம். பணத்தின் மீது அவர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். சம்பாதிக்க புதிய வழிமுறைகள் இருக்கிறதா? என்றும் அவர்கள் பல விதங்களில் யோசிக்கிறார்கள். அதனால் தங்களது பணத்தேவையை பூர்த்தி செய்து நல்லபடியாக தங்களை பேணும் ஆண்கள் மீது அவர்கள் பார்வை ஆழமாக பதிகிறது.

(புரிஞ்சுதா… நீங்க நிறைய சம்பாதிக்க ஆளா இருக்கணும். ஓடுங்க பணத்தை சாம்பாதிக்கிற வழியை பாருங்க….அப்பதான் பொண்ணுங்க பார்வை உங்க மேல விழும்.)

திருமண இணையதளம் ஒன்று வெளியிட்ட புள்ளி விவரத்தில் 200 ஆண்கள் இரண்டாம் திருமணம் செய்ய விரும்பி பதிவு செய்கிறார்களாம். இணையதளம் வழியே பதிவு செய்பவர்களில் இரண்டாம் திருமண பதிவுகளே அதிகம் என்கிறது அந்த புள்ளி விவரம். ஆனால் பெண்கள் இரண்டாம் திருமண பந்தத்தில் இணைவதை விரும்பவில்லை என்றும் அந்த புள்ளி விவரம் கூறுகிறது.

தன்னை ஒருவர் காதலித்தால் அவருக்கு தான் முதல் காதலியாக இருக்க வேண்டும். தன்னை ஒருவர் திருமணம் செய்தால் அவருக்கும் தான் முதல் மனைவியாகதான் இருக்க வேண்டும் என்று பெரும்பாலான பெண்கள் எதிர்பார்க்கிறார்கள்.

(பாருங்க..தன் வாழ்க்கையில் நுழைபவர் முதல் ஆளாக இருக்க வேண்டும் என்று பெண்கள் நினைக்கிறாங்க… இரண்டாவதுன்னா அவங்க ரொம்ப யோசிக்கிறாங்க)

தான் எதை வாங்கினாலும் அது மற்றவர்களில் இருந்து பெரிதாக இருக்க வேண்டும் என்ற ஆசை பெண்களிடம் அதிகரித்திருக்கிறது. வீடு என்றாலும் பெரிது. டிவி என்றாலும் பெரிது. கார் என்றாலும் பெரிது வேண்டும் என்கிறார்கள். (பெரிசா சம்பாதிக்க ஆண்கள் தயாராகவேண்டியதுதான்)

பெருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்கவும், விரும்பியதை தேர்ந்தெடுக்கும் உரிமையுடன் திகழவும் பெண்கள் விரும்புகிறார்கள். அவர்கள் அதிகமாக வலைத்தளங்களில் உலவுவதிலும் விருப்பம் கொண்டுள்ளனர். வேலைக்கு செல்லும் 20 முதல் 30 வயதுடைய பெண்கள் இணையதளத்திலேயே தங்களை மயக்கும் இளவரசர்களை சந்திக்கிறார்களாம்.

விடுமுறை நாளில் உலவித் திரிய வேண்டும் என்பதிலும் மற்றவரின மத்தியில் நின்று பிரியமானவருடன் செல்பி எடுத்து கொள்வதையும் விரும்புகிறார்கள். 20 சதவீதம் பெண்கள் புதியவர்களுடன் அறிமுகமாகிக்கொள்ளவும் தயாராக இருக்கிறார்கள். (பொருளாதார சுதந்திரத்தை மட்டுமில்லேங்க… இன்னும் சில விஷயங்களிலும் அவங்க சுதந்திரத்தை எதிர்பாக்கிறாங்க)

இரவு உணவை அன்பான கிளுகிளுப்பான உரையாடலுடன் உண்பதை பெண்கள் ரசிக்கிறார்களாம். எந்த ஆண்தோழமையுடன், அன்பாக உபசரிக்கிறாரோ அவர்தான் பெண்ணுக்கு பிடித்தவராம்…