தாம்பத்தியம் என்பது இல்லற வாழ்வில் ஓர் அங்கம். பொதுவாகவே ஆண்கள் மத்தியில் சராசரியாக 55 வயது வரையிலும். பெண்கள் மத்தியில் சராசரியாக 45 வயது வரையிலும் தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டும் என்ற வேட்கை இருக்கும் என ஆய்வுகளின் மூலம் அறியப்படுகிறது. இது உலகளாவிய பொதுவான கருத்து.
ஆனால், சில சமயங்களில் உடல்நலம், சூழ்நிலை, மன அழுத்தம், ஆன்மிகம் போன்ற ஏதேனும் காரணத்தால் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபாடு குறைவது அல்லது நாட்டமின்றி போவது ஏற்படலாம். தம்பதிகள் யாரேனும் ஒருவருக்கு இது போன்ற எண்ணம் எழலாம். ஆனால், மற்றொருவரும் இதை ஏற்றுக் கொள்வாரா என்பது தான் கேள்வி.
பல ஆண்களாலும், சில பெண்களாலும் கண்டிப்பாக இதை ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படிப்பட்ட தருணத்தில் தங்கள் உணர்வு எப்படிப்பட்டதாக இருக்கும் என தம்பதிகள் கூறும் பதில்கள் குறித்து இனிக் காணலாம்…
பதில் #1
நானும் என் மனைவியும் கடந்த சில மாதங்களாக தாம்பத்திய உறவில் ஈடுபடுவதில்லை. அவள் மன அழுத்தம் கொண்டுள்ளதால், உறவில் ஈடுபட நாட்டம் இல்லை என்கிறார். தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் இருப்பதாலேயே எனக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறது. இது ஓர் தொடர் கதையாக நீண்டு செல்கிறது.
பதில் #2
நான் தாம்பத்தியம் அற்ற ஓர் திருமண வாழ்வில் வாழ்ந்து வருகிறேன். இதை நான் வெறுக்கிறேன் என என் கணவரும் அறிவார். ஆயினும் அவர் கண்டுக்கொள்வதில்லை.
பதில் #3
தாம்பத்தியம் அற்ற வாழ்க்கையை விட்டு நான் பிரிந்துவிடலாம் என்று தான் எண்ணுகிறேன். ஆனால், என் குழந்தைகள் மற்றும் அவர்களது வளர்ச்சி , எதிர்காலம் கருத்தில் கொண்டு பிரிந்து செல்லாமல் இருக்கிறேன்.
பதில் #4
தாம்பத்தியம் அற்ற வாழ்க்கை எனில் அதில் மகிழ்ச்சி இல்லை என்ற கருத்தில் நான் உடன்படுவதாக இல்லை. வெறும் உடலுறவிற்காக மட்டும் நான் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. அவளுடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன்.
பதில் #5
என் கணவர் என்னுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட முனைவதில்லை. மேலும், தவிர்க்கிறார். இது என்னை வெறுப்படைய வைக்கிறது.
பதில் #6
என் மனைவிக்கு தாம்பத்தியத்தில் ஈடுபட விருப்பம் இல்லை. இதனால் நான் வருந்துவதாக அவள் முன் காட்டிக் கொள்வதில்லை. ஆனால், மனதுக்குள் கத்த வேண்டும் என்பது போன்ற உணர்வு அடிக்கடி எழும்.
பதில் #7
என் கணவர் நான் விரும்பி அழைத்தும் என்னுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட விரும்பவில்லை எனும் போது, அது மிகுந்த வலியை ஏற்படுத்தும்.
பதில் #8
என் மனைவிக்கு தாம்பத்தியத்தில் ஈடுபட விருப்பமில்லை. அதனால், நான் அதை பற்றி பெரிதாக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. ஆயினும் இது கடினமான ஒன்று தான்.
பதில் #9
தாம்பத்தியம் அற்ற இந்த திருமண வாழ்க்கை எத்தனை தூரம் பயணிக்கும் என்று என்னால் யூகிக்க முடியவில்லை.
பதில் #10
கால சூழ்நிலையால் நான் தாம்பத்தியம் அற்ற திருமண வாழ்வில் வாழ்ந்து வருகிறேன். என் மனைவியை நான் அதிகமாக நேசிக்கிறேன். ஆயினும், உணர்சிகளை கட்டுப்படுத்துதல் சற்றே கடினமானது தான்.
பதில் #11
33 வயதிலேயே என் தாம்பத்திய வாழ்க்கை முற்று பெறும் என நான் நினைக்கவில்லை. என் கணவருக்கு இப்போதெல்லாம் இதில் நாட்டம் இல்லை. ஒருவகையில் இதுவும் ஓர் ஏமாற்றம் தான். தாம்பத்தியம் என்பது திருமண வாழ்வில் அனைவரும் வேண்டுவது தானே.