Home உறவு-காதல் பெண்களை கண்டால் சபலப்படும் ஆண்கள்

பெண்களை கண்டால் சபலப்படும் ஆண்கள்

31

images3-615x356பெண்களை ஆண்கள் ரசிப்பதற்கு காரணம் பெண்கள் தான். பெண்கள் என்னதான் அழகாக இருந்தாலும் அவர்களின் நடை, உடை, பாவனை தான் ஆண்களின் ரசனைக்கு முக்கிய காரணம். அதாவது, கழுத்துக்கு மட்டும் பாதுகாப்புக்காக போடும் துப்பட்டா, சாயம் பூசிய உதடுகள், ஆண்களை பார்த்ததும் செவிகளை மறைக்கும் மொபைல் போன்கள், பொது இடங்களில் சிரித்து பேசும் பெண்கள் இவர்களின் மீது தான் ஆண்களின் மோசமான பார்வை முதலில் விழுகிறது.

ஆண்களால் பாதிக்கப்படும் பெண்களில் முதலிடம் இத்தகைய பெண்களுக்கு தான். நேர்த்தியான உடையும், இயல்பான முகத்தோற்றமும், முறையான நடைமுறை வாழ்க்கையை மேற்கொள்ளும் பெண்கள் தான், ஆண்கள் மத்தியிலும், பொது வாழ்க்கையிலும் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வெற்றி பெறுகின்றனர்.

அழகான பெண்கள் என்றல்ல, சுமாரான பெண்களைக் கண்டால் கூட சற்று சபலப்பட்டு ஈர்க்கப்படுவது ஆண்களின் குணம் என்பது ஒருபுறம் ஏற்றுக்கொள்ள வேண்டியதாக உள்ளது. நாகரிகம் என்ற பெயரில் பெண்கள் அணியும் அரைகுறை ஆடைகளைக் கண்டு ஈர்க்கப்படும் ஆண்களது கண்களை ஆயிரம் கைகள் மறைத்தாலும் தடுத்துவிட முடியாது.

அழகாக இருக்கும் பெண்கள் ஆண்களைக் கவர்வது என்பது இயல்பான உண்மை தான். ஜொள் விடும் ஆண்கள் பொதுவாகவே நிறம், அழகு, வயது வித்தியாசமின்றி, பெண்களிடம் நடந்து கொள்வர். இவ்வகை ஆண்களிடம் தான் பெண்களுக்கு அச்சம் இருக்க வேண்டுமே தவிர, அழகை ரசிக்கும் மனப்பான்மையை உடைய ஆண்களை புறக்கணிக்காதீர்கள் பெண்களே! இவர்கள் இல்லையென்றால், பெண்களுக்கு அழகு என்பதே தெரியாமல் போய்விடும்.

உலகில் பெண்கள் படைக்கப்பட்டது ஆண்களுக்காகதான். ஆண்கள் படைக்கப்பட்டது பெண்களுக்காகதான். பெண்களிடம், ஆண்களுக்கான ஈர்ப்பே அவர்களது அழகுதான்.