முருங்கைக்கீரை – 1 கப்
தோசை மாவு – தேவையான அளவு
எண்ணெய் – 4 ஸ்பூன்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து கழுவி வைக்கவும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் அதில் வெங்காயம், ப.மிளகாயை போட்டு நன்றாக வதக்கிய பின்னர் முருங்கைக்கீரையை போட்டு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்கு வதக்கி இறக்கி, தோசை மாவில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் தோசை மாவை கொண்டு தோசைகளாக ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்தால், முருங்கைக்கீரை தோசை ரெடி!!!