Home சூடான செய்திகள் பத்தாயிரம் பேருடன் நான்…”- சுய சரிதை புத்தகத்தில் சொன்ன பெண்மணி

பத்தாயிரம் பேருடன் நான்…”- சுய சரிதை புத்தகத்தில் சொன்ன பெண்மணி

25

wpid-01-1404191952-i-slept-with-10-000-men-former-escort-tells-all-in-new-book6-600கான்பெரா: “நான் பத்தாயிரம் பேருடன் படுக்கையை பகிர்ந்தவள்” என்று விபச்சார தொழிலில் கொடிகட்ட பறந்த 36 வயது பெண்மணி தனது சுயசரிதை புத்தகத்தில் பெருமையோடு தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரை சேர்ந்தவர் ஜிவைனத் மோன்டேனேக்ரோ. தற்போது 36 வயதாகும் இப்பெண்மணி தனது 21 வயதில் பாலியல் தொழிலுக்குள் புகுந்தார். தற்போது ஓய்வு எடுத்துவிட்டு வேறு தொழில் செய்து வரும், ஜிவைனத் தனது அனுபவங்களை சுயசரிதை புத்தகமாக்கி வெளியிட்டுள்ளார். அந்த புத்தகத்தில் கூறியுள்ளதாவது:

பலாத்காரம்:

நான் 18வது வயதில் கிளப் ஒன்றுக்கு சென்றபோது, சிலரால் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டேன். அதன்பிறகு எனக்கு இயல்பான கூச்சம் குறைந்துவிட்டது. பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியது.

பார்களில் குத்தாட்டம்:

அப்போதுதான், பார்களில் நடனமாட இளம் பெண் தேவை என்ற பத்திரிகை விளம்பரம் எனது கண்ணில் பட்டது. இதையடுத்து 19வயது வயதில் பாரில் நடனமாட சென்றேன். முதல் நாள் இரவு ஆட்டத்திற்கே 1000 டாலர்கள் சம்பளமாக கிடைத்தது. பஸ்சில் ஏறி, இறங்குவதை போல இந்த வேலை எனக்கு மிகுந்த எளிதாக பட்டது.

பெற்றோரிடம் மறைப்பு:

இதன்பிறகு மேலும் பணம் சம்பாதிக்கவும், மது குடிக்கவும் ஆசை வந்தது. இதற்காக 21வது வயதில், விபச்சார தொழிலில் இறங்கினேன். அதிலும் நல்ல வருவாய் கிடைத்தது. கார், உடைகள் வாங்கி குவித்தேன். இருப்பினும் எனது பெற்றோரிடம், உண்மையை மறைத்துவிட்டேன். மாடலிங் மூலம் பணம் கிடைப்பதாக அவர்களிடம் கூறி வந்தேன்.

கடல் கடந்தும் விபச்சாரம்:

சுமார் மூன்று வருடங்கள், ஆஸ்திரேலியாவில் விபச்சாரம் செய்த பிறகு, வெளிநாடுகளிலும் தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளார் ஜிவைனத். விபச்சாரம் எங்கெல்லாம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதோ, அந்த நாடுகளில் இவர் சென்று விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதன் மூலம் சமூகத்தில் உயர்ந்த பதவிகளில் இருப்போரின் பழக்கம் இவருக்கு கிடைத்துள்ளது.

அனைத்து தரப்பும் இவர் படுக்கையில்..

அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள், இசைக்கலைஞர்கள் ஆகியோர் ஜிவைனத்துடன் உடல் உறவு கொண்டதாக தனது புத்தகத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், 24வயது வயதில் ஒரு சாலை விபத்தில் சிக்கியுள்ளார். அப்போது உயிர் பிழைத்ததே பெரிய விஷயமாகிவிட்டது. இதனால் மேலும் மறைக்க மனமில்லாமல், தனது பெற்றோரிடம் தனது விபச்சார தொழில் குறித்த உண்மையை கூறிவிட்டார்.

பறக்க ஆரம்பித்தார்..

இந்நிலையில் 29வயதில் ஜிவைனத் ஆசைப்பட்டபடி, பைலட் வேலை கிடைத்துள்ளது. இதனால் சிறிது காலம் விபச்சாரத்தைவிட்டு விலகியிருந்தார் ஜிவைனத். ஆனால், கிட்னி பிரச்சினை காரணமாக, பைலட் வேலைக்கான லைசென்ஸ் பறிக்கப்பட்டதும் மீண்டும் விபச்சாரத்தில் இறங்கியுள்ளார்

ஓய்வு காலம்..

இருப்பினும் 33வயது வயது முதல் உளவியல் தொடர்புள்ள வணிகத்தில் இறங்கியதால் விபச்சாரத்தை முற்றிலுமாக விட்டுவிட்டாராம். இதுவரை 10 ஆயிரத்து 91 ஆண்களுடன் உடலுறவு கொண்டுள்ளதாக தனது புத்தகத்தில் ஜிவைனத் தெரிவித்துள்ளார். அம்மாடியோவ்…

image