சில பெண்களுக்கு ஆண்கள் என்றாலே பிடிப்பது இல்லை. இதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும்?
அப்பா அல்லது உறவினர்கள் அல்லது ஆண் உறவுகளின் மூலம் நேர்ந்த கடந்த கால கசப்பான அனுபவத்தின் காரணமாக சில பெண்களுக்கு ஆண்கள் என்றாலே பிடிக்காமல் போகலாம்.
சில பெண்களுக்கு சின்ன வயதில் இருந்தே பால் சோறுடன் சேர்த்து, காதல் என்பது தீமை, ஆண்களை நம்பக் கூடாது என்பனவற்றை ஊட்டி வளர்த்திருப்பார்கள். இதனால் ஆண்களை கண்டாலே சற்று தள்ளி நிற்கும் பழக்கத்தை ஏற்படுத்து கொள்கின்றனர்.
காதல் என்பது நடைமுறைக்கு ஆவாத வேலை என்று எண்ணும் பெண்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு காதல் என்றால் சுத்தமாக பிடிக்காது. ஆண்களையும் சுத்தமாக பிடிப்பதில்லை.
பெண்ணியவாதம் குறித்து நிறைய ஈடுபாடுகள், செயல்பாடுகளில் இருக்கும் பெண்களுக்கு ஆண்கள் மீது அதிகமாய் ஈர்ப்பு வருவதில்லை.
ஆண்களை விரும்பினால் அவர்கள் கூறுவதை தான் கேட்க வேண்டும், இது ஆணாதிக்க உலகம். இதனால் தங்களது சுதந்திரம் பறிபோய்விடும் என்ற காரணத்தினாலும் கூட பெண்கள் சிலர் ஆண்கள் என்றாலே பாவற்காய் போல காண்பதுண்டு.
இயற்கையாகவே சில பெண்களுக்கு தனிமை தான் பிடிக்கும். தோழிகள் கூட ஓரிருவர் தான் இருப்பார்கள். அவர்களுக்கு ஆண்கள் மீது ஈர்ப்பு உண்டாவது அக்னி வெயிலில் அடைமழை பொழிவது போல மிகவும் ஆச்சரியம்.