ஒருமுறை உடல் உறவு கொள் ளும்போது 380 முதல் 480 மில்லியன் உயிரணு பெண்ணுறுப்புக்குள் செல்லும். இந்த உயிரணுக்கள் பெண்குறி பாதை, கர் ப்பப்பை வாசல் என பலவற்றில் பயணித்து ஃபெலோப்பியன் டியூப்புக்குள் செல்ல கிட்டத்தட்ட மூன்றிலிருந்து ஐந்து மணி நேரம் ஆகும்.
இதனால்,480 மில்லி யன் உயிரணுவில் சுமார் 3000 உயிரணுக்கள் மட்டுமே டியூப்புக்குள்செல்லும். இவற்றிலும் பல, அசைந்து கொண் டேயிருக்கும் சீலியாக்களை எதிர்கொள்ள முடியாமல், இறந்து போய் சில நூறு உயிரணுக்களே எஞ்சி நின்று கருமுட்டைக்கு அருகில் போய்நிற்கும். இந்த சில நூறு உயிரணுக்களில், ஒரே ஒரு உயிரணு மட்டுமே கடைசியில் கருமுட்டையைத் துளைத்துக் கொண்டு உள்ளே சென்றுவிடும். ஒரு உயிரணு வந்தவுடன் கருமுட்டை மூடிக்கொள்ளும். இன்னொரு உயிரணு உள்ளே வராமலிருக் கத்தான் இந்த ஏற்பாடு!
கருமுட்டையிலிருக்கும் 23 குரோமோசோம்களும், உயிரணுவில் இருக்கும் 23 குரோமோசோம்களும் சேர்ந்து (23 ஜோடி) 46 குரோ மோசோம்களாகி உயிர் உருவாகும்.
இயற்கைக்கு ஈடு இணை ஏதுமே இல்லை என்று திரும்பத் திரும்ப… பலரும் சொல்வதற்கு என்ன காரணம் என்பது புரிகிறதா மனிதர்களே..!
இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். ஒரே ஒரு உயிரணு மட்டும் கருமுட்டையை அடைந்து உயிர் உருவாகிறது எனும்போது… ஏன் இயற்கை லட்சக் கணக்கான உயிரணுக்களை விந்தில் உரு வாக்குகிறது? நியாயமான கேள்விதான்.
மராத்தான் ஓட்டம் பார்த்திருக்கிறீர்களா?
அதில் ஓட்டப்பந்தயம் ஆரம்பிக்கும்போது சில நூறு பேர்கள் இருப்பார்கள். கடைசியில் பல மைல்களை கடந்து, இறுதியில் ஜெயிப்பது ஒரே ஒருவர் மட்டுமே. மராத்தான் ஓட்டத்தில் பல மைல்களைத் தொய்வின்றி, எந்தவி தமான தங்குதடையின்றி ஓடிச்சென்று கடக்க பலம் வேண்டும்
அப்படிப்பட்ட சக்தியு டையவர்களை வெகு சிலரிலிருந்து கண்டுபிடிக்க முடியாது… இருக்க மாட்டார்கள். அதனால்தான் மராத்தானில் பலர் ஓடுகிறார்கள். அதுபோல உயிரணுவும் உள்ளே நீந்தி செல்ல மிகுந்த பலம் தேவை. இது வெகு சில உயிரணுவால் மட்டுமே சாத்தியம். அதனால்தான் பல லட்ச உயிரணுக்களை இயற்கை படைத்திருக்கிறது. அது மட்டுமல்ல, கருமுட்டையைத் துளைத்துக் கொண்டு உயிரணு உள்ளே செல்கிறது என்றோமல்லவா… அப்போது, உயிரணுவின் உடல் பகுதி, வால் பகுதி ஆகியவை உள்ளே போகாது. கருமுட்டையை உயிரணு துளைக்கும்போது, உயிரணுவின் தலைப்பகுதியில் இருக்கும் 23 குரோமோசோம்களை மட்டும் (நியூக்ளியஸ்) கரு முட்டைக்குள் செலுத்திவிட்டு, உயிரணுவில் வாலும் உடலும் இறந்து போய் திரும்பிவிடும்
.
உயிரணு கருமுட்டையை மோதும்போது, உயிரணுவின் தலைப் பகுதியில் “அக்ரோசின்” எனும் ரசாயனம் வெளிப்பட்டு கருமுட்டையின் சுவரை அரித்து சிறிய துளையை ஏற்படுத்தும். ஒரு பெண்ணைக் கர்ப்பமாக்கத் தேவையான அளவில் உயிரணுக்கள், ஆரோக்கியமான உயிரணுக்கள் ஓர் ஆணிடம் இருக்க வேண்டும். இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாமல் “தனது விந்து கெட்டியாக இருக்கிறது என்றோ, நீர்த்துள்ளது என்றோ…” நினைத்து கொண்டு சிலர் போலி டாக்டர்களிடம் சிகிச்சைக்கு செல்வார்கள். அவர்களும், இதை சாக்காக வைத்துப் பணதைக் கறந்துவிடுவார்கள். விந்து கெட்டியாக இருப்பதற்கும், நீர்த்து இருப் பதற்கும் நாம் சாப்பிடும் உணவு, நம் உடலில் உள்ள நீர்சத்து, உடல் ஆரோக்கியம் போன்றவைதான் காரணம். ஆகவே விந்து கெட்டியாக அல்லது நீர்த்துப் போயிருப்பது ஒரு குறைபாடு அல்ல. ஆரோக் கியமான உயிரணு அதில் உள்ளதா என்பதே முக்கியமானது. சரி, உயிர் எப்படி வளர்கிறது? உயிர் எப்படி வளர்கிறது…
கருமுட்டையுடன் விந்தின் உயிரணு இணைந்ததும் கரு உருவாகிறது. ஆரம்பத்தில் கருவுக்குள் ஒரே ஒரு செல்தான் இருக்கும். அடுத்த 24 மணி நேரத்தில் அந்த ஒரு செல், இரண்டு செல் ஆகிவிடும். அடுத்தடுத்து, அவை பன்மடங்காகப் பெருகி நான்காவது நாளில் பல ஆயிரம் செல்கள் சேர்ந்த ஒரு பந்து மா திரி ஆகிவிடும். இந்தப் பந்துக்கு மாரு லா (Morula) என்று பெயர். இந்த மாருலா, நான்காம் நாள் ஃபெலோப்பியன் டியூப்பிலிருந்து நகர்ந்து கர்ப்பப் பைக்குள் வந்துவிடும். ஏழாம் நாள் கர்ப்பப்பையில் உப்பிக் கொ ண்டிருக்கும் உள்சுவரான “எண்டோமெட்ரிய”த்தில் இந்த மாருலா அமர்ந்துவி டும். அங்கே படிப்படியாகப் பத்தாவது மாதம் வரை வள ரும். அதன்பிறகு ஒரு புதிய ஜீவன் பூமிக்கு வந்து வெளி ச்சத்தைத் தரிசிக்கும். இது இயற்கையாக, இயல்பாக எல் லோருக்கும் நடைபெறும் கருத்தரித்தலாகும்.
ஆனால், வெகு சில பெண்களுக்கு நான்காவது நாள் ஃபெலோப் பியன் டியூப்பிலிருந்து, மாருலா நகராமல் அதற்குள் ளேயே கரு வாக வளரும். இதற்கு “எக்டோபிக் பிரகன ன்சி” (Ectopic pregnancy) என்று பெயர். இது தாயின் உயிருக்கே ஆபத்தாகி விடும் கர்ப்பம். ஏனெனில், கர்ப்பப்பைக்கு இருக்கிற விரிந்துகொடுக் கிற தன்மை, ஃபெலோப்பியன் டியூப்புக்கு இல்லை என்பதால் தான் இந்த ஆபத்து.
சரி, கரு எப்படி ஆணாகவோ பெண்ணாகவோ மாறுகிறது?
உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் 23 ஜோடி குரோமோசோம்கள் இருக்கும். இதில் 22 ஜோடி குரோமோசோம்களின் வேலை பரம்பரை குணம், நிறம், நோய்க் கூறு போன்றவற்றை நிர்ணயிப்பது. எஞ்சியுள்ள ஒரு ஜோடி, அதாவது 23வது ஜோடிதான் பாலின த்தைத் தீர்மானிக்கும் குரோ மோசோம் (Sex chromosomes). ஆணின் உயிரணுவில் உள்ள 23 குரோமோசோமில் 50 சதவிகிதம் “எக்ஸ்” குரோமோசோம்களாகவும், 50 சதவிகிதம் “ஒய்” குரோமோ சோம்களாகவும் இருக்கும். பெண் ணின் கருமுட்டையில் உள்ள 23 குரோமோசோமில் 100 சதவிகித மும் “எக்ஸ்” குரோமோசோம்கள் மட்டுமே இருக்கும். ஆணின் உயி ரணுவில் உள்ள “ஒய்” குரோமோசோம் பெண்ணின் கருமுட்டை யில் உள்ள “எக்ஸ்” குரோமோசோமுடன் சேர்ந்தால் “எக்ஸ்ஒய்” ஆகி, ஆண் குழந்தை உருவாகும். உயிர ணுவில் உள்ள “எக்ஸ் ” குரோ மோசோம் பெண்ணின் கருமுட்டையில் உள்ள “x” குரோமோ சோமுடன் சேர்ந் தால் “எக்ஸ் எக்ஸ்” ஆகி பெண் குழந்தை உருவாகும். இப்போது ஒரு உண்மை புரிகிறதா?
ஒரு பெண்ணின் வயிற்றில் பெ ண் குழந்தை உருவாகக் காரணமாக இருப்பது ஆணின் உயிரணு என்பது தெரியாத பலர், “பொட்டை புள்ளைய பெத்துருக்கியே, உன்னை மாதிரியே” என்று பெண்ணைத் திட்டுவார்கள். முழுக்க முழுக்க பெண், ஆண் என்பதைத் தீர்மானிப்பது ஆணின் உயிரணுதானே தவிர, பெண் அல்ல!