Home உறவு-காதல் ஆண்களை கெஞ்ச வைக்க பெண்கள் செய்யும் சில தில்லாலங்கடி வேலைகள்…!

ஆண்களை கெஞ்ச வைக்க பெண்கள் செய்யும் சில தில்லாலங்கடி வேலைகள்…!

17

s-img-2016-03-23-1458722307-3crazythingswomendoinrelationshipஅடம்பிடிப்பது பெண்களில் பிறப்புரிமை, இதை யாருக்காகவும் வாழ்க்கையின் எந்த தருணத்திலும் பெண்கள் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அம்மா வீட்டில் அண்ணனுக்கு பிடித்த உணவை சமைப்பதற்கு கண்டனம் தெரிவிப்பதில் துவங்கி, கணவனிடம் சின்ன சின்ன விஷயத்திற்கும் முகத்தை திருப்புவது அவரை பெண்களின் அடம் பிடிக்கும் குணம் தொடர்கதையாக நீடிக்கும்.

பெரும்பாலும் பெண்களின் இந்த அடம்பிடிக்கும் குணம் அழகாக தான் இருக்கும். சின்ன கடைகளில் கை வளையல்கள் ஒன்றிரண்டு கூடுதலாக வாங்குவது, மல்லிகைப்பூ, சீரியல் பார்ப்பது என ஒருபக்கம் இருந்தாலும். சூழ்நிலை புரிந்துக் கொள்ளாமலும் சில சமயங்களில் பெண்கள் அடம்பிடிப்பது உண்டு. இதன் பிறகும் கேட்டது நடக்கும் வரை ஆண்களை கெஞ்ச வைக்க பெண்கள் சிலபல வேலைகளிலும் ஈடுபடுவர்கள்….

முகத்தை தூக்கி வைத்துக் கொள்வது

என்ன பேச வந்தாலும், முக்கியமான விஷயங்கள், அன்பாக, நகைச்சுவையாக பேசினாலும் கூட பொது தேர்வில் தோல்வியுற்றது போல முகத்தை விட்டதைப் பார்த்து திருப்பிக் கொள்வார்கள்.கழுத்து மட்டும் 180 டிகிரி திரும்பியே காணப்படும்.

சமையலில் வெறுப்பை காட்டுவது

நமக்கு பிடிக்காத சமையல், உப்பு காரம் சரியாக இருக்காது. எண்ணெயும், கடுகும் சற்றே அதிகமாக தெறிக்கும்.

முக்கியமானவற்றை கூற மறுப்பது

பொதுவாகவே வீட்டில் கேஸ் தீர்ந்துவிட்டது, மளிகை பொருள் வாங்க வேண்டும். மாத தவணை போன்றவற்றை பெண்கள் தான் ஒவ்வொரு மாதமும் நினைவுப்படுத்துவார்கள். ஆனால், இந்த சமயங்களில் அவற்றை கூட கூற மாட்டார்கள்.

ஜாடையில் திட்டுவது

குழந்தையை அல்லது மூன்றாம் நபரை திட்டுவது போல சரமாரியான வசவுகள் கணவனுக்கு விழும். என்றோ ஆதிக் காலத்தில் செய்த தவறுகளை கூட நினைவுக் கூர்ந்து திட்டுவார்கள்.

கால் செய்து புலம்புவது

அம்மா, தோழி போன்றவர்களுக்கு இவர்களாக கால் செய்து, வேண்டாம் வெறுப்பாக பேசுவார்கள். அப்போது தானே அவர்கள் என்ன ஆச்சு என்று கேட்பார்கள். பிறகு இலைமறை காயாக உங்களை பற்றிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.

விருந்தோம்பல்

பெண்கள் அனைவருமே நவரச திலகங்கள் தான். முகபாவனைகள் அவர்களது முகத்தில் பரதம் ஆடும். சிரிப்பில் கூட பல பாவங்கள் காட்டுவார்கள். நண்பர்கள் வீட்டிற்கு வரும் போது முகத்தில் வாய் மட்டும் தான் சிரிக்கும், கண், மூக்கு, ஜாடை எல்லாம் வெறுக்கும். அப்படிப்பட்ட சிரிப்பை பெண்களால் மட்டும் தான் சிரிக்க முடியும்.

சாக்குப்போக்கு

எந்த வேலை பற்றி கேள்விக் கேட்டாலும், எனக்கென்ன நாலு கையி, பத்து காலா இருக்கு என்பது போல ஏதேனும் ஒரு சாக்குப் போக்கு கூறுவார்கள்.