குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்நாக்ஸ் இறால் வடை.
தேவையான பொருட்கள்
இறால் – 1 கப்
தேங்காய் துருவியது – 1 கப்
இஞ்சி – ஒரு துண்டு
பச்சை மிளகாய் – 4
உப்பு – தேவைக்கு
வெங்காயம் – 2
மிளகு தூள் – 1/2 ஸ்பூன்
எண்ணெய் – தேவைக்கு
செய்முறை
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* தேங்காய் துருவல், இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.
* இறால்களை சுத்தம் செய்தபின் அரைத்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் அரைத்த மசாலாவுடன் அரைத்த இறாலை போட்டு உப்பு, மிளகுதூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
* கடாயை அடுப்பில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இறால் மசாலாவை வடைகளாக தட்டி பொரித்தெடுத்தால் இறால் வடை ரெடி….!
* மாலை நேரத்தில் சாப்பிட அருமையாக ஸ்நாக்ஸ் இது.