தாம்பத்ய சுகம் என்பது பிறவியிலேயே அனைவருக்கும் தெரிந்த ஒன்றல்ல. கற்றுக் கொள்வதில்தான் அதன் முழு இன்பமும் கை கூடும். செக்ஸ் பற்றியும் அதனை எப்படியெல்லாம் அனுபவிக்கலாம் என்பதும் பற்றிய அடிப்படை அறிவைப் பெற வேண்டியது இரு பாலாருக்கும் அவசியம்.
தாம்பத்ய சுகத்திற்கான உணர்வுகளை எதிர்பார்ப்பது மட்டுமல்ல, அதை நாம் நமது பார்ட்னருக்குத் தருவதிலும் முழுமையாக இருக்க வேண்டும். ஆனால் ஆண்களுக்குக் கிடைப்பது போன்ற எக்ஸ்போசர்கள் பெண்களுக்குக் கிடைப்பதில்லை என்பதும், வெளிப்படையாக இதுகுறித்து யாரிடம் விளக்கம் பெறலாம் என்பதில் பெண்களுக்கு இருக்கும் அடிப்படை சிக்கலும்,பல பெண்களுக்கு செக்ஸ் உறவு குறித்த முழுமையான அறிவு கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது என்கின்றனர் உளவிலாளர்கள்.
மேலும் தாம்பத்ய உறவின் போது கவனம் அதில் மட்டுமே இருந்தால்தான் உறவு சுவைக்கும் என்பார்கள். ஆனால் 62 சதவிகித பெண்கள் உறவின் போது செல்போனில் வரும் மெசேஜை வாசித்துக் கொண்டிருக்கிறார்களாம். செக்ஸ் உறவின்போது என்னவெல்லாம் செய்கிறார்கள் இந்தப் பெண்கள் என்று ஒரு சர்வே நடத்தி அதன் சுவாரஸ்யமான முடிவை வெளியிட்டுள்ளனர். ஒவ்வொரு உறவின்போதும் பெண்கள் எதையெல்லாம் நினைக்கிறார்கள், என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதே இந்த சர்வேயின் சாராம்சம்.
அப்போது 62 சதவீத பெண்கள் செக்ஸ் உறவின்போது அதில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு செல்போனை எடுத்து யாராவது கால் பண்ணாங்களா என்று நோண்டுகிறார்களாம். அதேசமயம், ஆண்களைப் பொறுத்தவரை இப்படி உறவின்போது செல்போனைப் பார்ப்போர் எண்ணிக்கை 48 சதவீதம்தானாம். உறவின்போது செல்போனில் பேசுவது என்பது 34 சதவீதம் பேராக உள்ளது. உறவில் ஈடுபட்டபடியே மெசேஜ் படிப்பது, அனுப்புவது ஆகிய வேலைகளில் 24 சதவீதம் பேர் ஈடுபடுகிறார்களாம். 22 சதவீதம் பேர் செக்ஸ் உறவில் ஈடுபடும் மும்முரத்திலும் கூட இமெயில் அனுப்புவதில் கவனம் செலுத்துகிறார்களாம். 4 சதவீதம் பேர் செக்ஸ் உறவை சில நிமிடங்களுக்கு நிறுத்தி வைத்து விட்டு போனை செக் செய்வதாகவும் கூறியுள்ளனர்.
அது மட்டுமின்றி 34 சதவீத பெண்கள், தாங்கள் இப்படி செல்போனைப் பார்ப்பதிலும், பேசுவதிலும், மெசேஜ் அனுப்புவதிலும், இமெயில் அனுப்புவதிலும் ஈடுபடும்போது தங்களது துணைஅதைக் கண்டு கொள்வதில்லை என்றும் கூறியுள்ளனர். மிகவும் நூதனமான காரியங்களில் கூட பெண்கள் செக்ஸின் போது ஈடுபடுகிறார்கள் என்று கூறுகிறது இந்த சர்வே என்பதும் குறிப்பிடத்தக்கது.