உலகில் மனிதனுக்கு காம எண்ணம் தோன்ற வேண்டுமென்றால் அதற்கு முதலில் மூளை காம எண்ணத்தை ஏற்படுத்தி கட்டளை பிறப்பிக்க வேன்டும். அதன் பிறகு உடல் தன்னை தயார் செய்து கொண்டு உறவில் இறங்குகிறது.ஆனால் இந்த காம வேலையில் மட்டும்தான் மூளை தன் சொந்த கருத்துகலோடு, வேரொருவரயும் ஆலொசிக்கிறது.அவர் வெளியாள் அல்ல.
மரபணு எனப்படும் ஜீன் – கள் தான் அவை.
உடலுறவு சக்தியை லிபிடோ சக்தி (Libido Power) எனக் கூறுகிறார்கள். இந்தச் சக்தி ஆண், பெண் இருவருக்கும் வித்தியாசமாக அமைகிறது. பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஒரே விதத்தில் ஒரே நேரத்தில் உடலுறவு ஆசை உண்டாவதில்லை.
ஆண்களுக்கு அதிகாலை நேரத்திலும், பெண்களுக்கு அந்தி மயங்கும் நேரத்திலும் கலவி ஆசை வெளிப்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அபூர்வமாக சில நேரத்தில் மட்டுமே ஆண், பெண் இருவருக்கும் கலவி ஆசை கிளர்ச்சி பெற்று எழுகிறது. கிளிட்டோரிஸ் என்ற உறுப்புத் தான் பெண்களுக்கு செக்ஸ் ஆசையைக் கிளர்ச்சியுறச் செய்கிறது.
உடலுறவு குறித்து ஆர்வம் இல்லாத நேரத்தில் ஆண் தனது இணையாகிய பெண்ணின் கிளிடோரிசைத் தடவி, அவளுக்கு காம இச்சையை ஊட்டுவதும் உண்டு. இந்தக் கிளிட்டோரிஸ் பெண்ணுறுப்பில் அமைந்துள்ளது. இதில் விஷேசம் என்னவென்றால், ஆண்களை விட, பெண்களுக்குத் தான் எல்லாப் பருவத்திலும் காம உணர்வு அதிகம் எனவும் ஆராய்ச்சிகள் தெரிவிப்பது தான்! இது போலவே உடலுறவின் போதும் ஆண்களுக்குத் தான் எளிதாக உடல் தளர்வு ஏற்படுகிறது.
பெண்களின் காம உணர்வை விட அதிகமான காம உணர்ச்சி கொண்ட ஆண், அவனது காமப்பசியை அதிகமாக மறைத்து வைப்பதில்லை. உடலுறவின் போதும், உடலுறவின் முடிவில் வரும் உச்சக்கட்டத்தின் போதும் ஆண்கள் மிகுந்த ஆனந்தம் அடைவதுண்டு என உடலுறவு ஆராய்ச்சி நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஆண் தனது காம உணர்வை வெளிப்படுத்த பல வழிகளையும் கையாள்வதுண்டு. உதாரணமாக ஒரு ஆண் சினிமாவில் ஹீரோவாக ஜொலிக்கும் போது எந்தப் பெண்ணும் அவனை விரும்புகிறாள். அவனாலும் தான் நினைத்த பெண்ணை அனுபவிக்க முடிகிறது.
உடலுறவு குறித்துக் கற்பனை செய்யாத மனிதர்கள் மிகக் குறைவு எனக் கூறலாம். அதிகமான காம உணர்வு உள்ள ஒரு ஆண் பல பெண்களுடனும் ஒரு பெண் பல ஆண்களுடனும் இனச்சேர்க்கை பல முறைகளில் செய்வதாகக் கற்பனை செய்வதும் உண்டு.
காம உணர்வானது மனிதர்களின் கற்பனையில் பல முறைகளில் கையாளப்பட்டு வருகிறது. ஸேடிசம் (sadism) என்பது காமக் கேளிக்கையின் போது தனது துணையை வேதனைப்பட வைத்து அந்த வேதனையை சுகமாகக் கருதி தனது காம உணர்ச்சியைத் தணித்துக் கொள்ளும் ஒரு அரக்கத் தன்மை உடையதாகும்.
காமத்தை வெறும் 10 நிமிட உடலுறவால் மட்டு தீர்த்து விடும் நோக்கம் முழுமையான இன்பத்தை கொடுக்காது. வள்ளுவரின் காமத்துப் பாலில் அந்தப் பெருந்தகையின் குறட்பாக்களே பெண்ணுக்கும் ஆணுக்கும் உண்மையான இன்பக் கருத்துகளை வாரி வழங்குகின்றன. தகை அணங்குறுத்தல் குறிப்பறிதல் காதல் ஊடல் என்று காமத்தை கண்ணிலிருந்து தொடங்கி இறுதியில்
ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின் (குறள் 1330)
என்று இறுதியாக உடலுறவில் முடிக்கிறார்.
மருத்துவமும் வள்ளுவமும் கூறும் அறிவுரையின் படி நாமும் நடப்போம்
பொதுவாக ஆண்கள் சிங்கிள் ஓகசம் (பாலியல் உச்சம்) உள்ளவர்கள். பெண்கள் மல்ரிபிள் ஓகசம் ( பாலியல் உச்சம் ) உள்ளவர்கள். ஆக பாலுறவு என்பது சம்பிரதாயமான நிகழ்வோ அல்லது கலியாணக் கடமையோ அல்ல. இரு மனங்களின் ஒத்துசைவின் அவற்றின் அன்புப் பிணைப்பின் ஓரியக்க நிலை என்றே கருத வேண்டும் மனிதர்களைப் பொறுத்தவரை. பாலுறவு 10-15 நிமிடத்தில் முடிகிற நிகழ்வல்ல. மாறாக அது வாழ்வின் முடிவு வரை தொடர்வது. மனித இருப்பின் நிலையை உணர்த்துவது. அதை துஸ்பிரயோகம் செய்ய முடியாது. அதே போல் பெண்களின் உணர்வுகள் பாலியலில் அதிகம் ஆதிக்கம் செய்ய வேண்டியதும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியதும் அவசியம். ஆண்கள் தீர்மானிக்கலாம் 10 – 15 நிமிடம் என்று. ஆனால் அதுவே பெண்களைப் பொறுத்தவரை நீடிக்கலாம் குறுகியதாக இருக்கலாம். அது அவர்களின் தனி உரிமை உணர்வு நிலை சார்ந்தது. அதை ஆண் மட்டும் தீர்மானிக்க முடியாது. அவசியம் என்றால் பாலியல் உடற்தொழிற்பாடு பற்றிய மருத்துவ உயிரியல் ஆய்வுகளை நோக்குங்கள்.
வெறும் பிள்ளை பெற்றுக்க என்றால் பேசாமல் ரியுப் பேபி பெத்துக்குங்க. வெறும் உணர்ச்சி வழி தேடல் என்றால் அதற்கும் பல வழிகள் இருக்கிறது. வயது வந்தோர் சாதனக் கடைகள் பெருகிவிட்ட உலகிது. அதையும் தாண்டி
பாலுறவு என்பது உணர்வு தாண்டி மனநிலையின் ஒருங்கு நிலை சார்ந்ததிருப்பின் மட்டுமே உடலநிலை ஒத்திசைவும் உடல்நலமும் மன நலமுமானது. அதற்காக பாலுறவு என்பதே வாழ்வைத் தீர்மானிக்கும் அம்சம் என்பதும் தவறு. பாலுறவு கொள்ளாவிட்டால் எந்த மனிதனும் உயிரிழக்க மாட்டான் அல்லது மாட்டாள்.
பாலுணர்வுகளை மன தளவில் அடக்கி உடலளவில் அதன் தேவையையும் அடக்கலாம். அது இலகுவானது மனிதனைப் பொறுத்தவரை. கடினமானதல்ல. அதற்கு ஆண்கள் பெண்கள் தங்களைப் பழகப்பட்டுத்திக் கொண்டால் பாலியல் தவறுகள் நோய்கள் பெருகுவதும் கருக்கலைப்புகள் தொடர்வதும் தவிர்க்கப்படும்.