லண்டன்: இங்கிலாந்தில் தம்பதிகளுக்கிடையிலான வாழ்க்கை வர வர சஹாரா பாலைவனம் போல படு வறட்சியாகி வருகிறதாம். தினசரி சொல்லிக் கொள்ளக் கூடிய பார்மாலிட்டி காதல் வார்த்தைகளைக் கூட அவர்கள் சொல்லுவதில்லையாம்… அதப் பத்தி பார்ப்போமா…
சின்னதா ஒரு ‘கிஸ்’ கூட கிடையாதாம்!
80 சதவீத இங்கிலாந்து தம்பதிகள் இரவில் தூங்கப் போவதற்கு முன்பு குட் நைட் கூட சொல்லிக் கொள்வதில்லையாம். அதேபோல கிஸ் கொடுத்துக் கொள்வதும் இல்லையாம்.
தொடாதேப்பா, ப்ளீஸ்!
25 சதவீத பெண்களுக்கு இரவில் தூங்கப் போகும்போது கணவர்கள் அல்லது துணைவர்கள் தங்களைத் தொட்டு டிஸ்டர்ப் செய்வது பிடிக்கவில்லையாம்.
‘ஐ லவ் யூ’வா.. அப்படீன்னா??
90 சதவீத தம்பதிகள் இரவில் தூங்கப் போவதற்கு முன்பு ஐ லவ் யூ கூட சொல்லிக் கொள்வதில்லையாம். லைட்டை அமத்தினோமோ, படுக்கையில் விழுந்தோமா, தூங்கினோமா என்று அயர்ந்து விடுகிறார்களாம்.
முதுகு போதும் மச்சான்!
46 சதவீத பெண்கள் செம கில்லாடிகளாக இருக்கிறார்கள். அதாவது படுக்கையில் படுத்தவுடன், அவர்கள் பார்ட்னர்களுக்கு தங்களது முதுகைத் திருப்பிக் கொண்டு படுத்துத் தூங்கி விடுகிறார்களாம்.
‘நேருக்கு நேர்’ ஒரு பர்சன்ட்தான்!
ஒரே ஒரு சதவீதம் பேர்தான் நேருக்கு நேர் படுக்கிறார்களாம். அதாவது, கணவர் அல்லது துணையின் நெஞ்சுக்கு நேர் தங்களது முகத்தை வைத்துக் கொண்டு பெண்கள் படுத்துக் கொள்கிறார்களாம் – கொஞ்சம் நெருக்கமாகத்தான்..