Home இரகசியகேள்வி-பதில் செக்ஸ் ஆர்வமின்மையால் குடும்பத்தில் தோன்றும் பிரச்சனை…!!

செக்ஸ் ஆர்வமின்மையால் குடும்பத்தில் தோன்றும் பிரச்சனை…!!

72

Hot-Desi-girls-on-naziapakistan.blogspot.com-5Tamilsex, TAMIL SEX, SEX Tamil, tamil kamakathaikal, tamil sex tips, tamil sex.com, tamildoctor.com, tamilsex, www.tamilsex.com, About sex in tamil, How to sex in tamil, tamil girls sex.com, tamil girls sex com, tamilsex.com, tamil sex com, tamilsex, tamil sex, www.tamilsex.com, tamil sex videos,xxxvideo,antharangam,tamil paliyal kelvikal,கேள்வி –
உங்கள் இணைய தளம் மிகவும் பயனுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். ஏனென்றால் நிறைய விசயங்களை இந்த இணைய வாயிலாக தெளிவுபடுத்திக் கொண்டிருகிறீர்கள் அதற்கு என் முதற் கண் நன்றிகள்.

எனது பெயர் ………, வயது 27 தற்போது வளைகுடா நாட்டில் பணிபுரிந்து வருகிறேன். நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன் அவள் எனது சொந்த நாட்டில் இருக்கிறாள். அதனால் எங்களது தொடர்பு தொலைபேசி மூலமும் இணைய மூலமும் தொடர்பு கொண்டு வருகிறோம். நாங்கள் இருவரும் நன்றாக வெளிப்படையாக பேசுவோம், பாலியல் சம்பந்தமான நிறைய விசயங்களை பேசிகொள்வோம், இப்படி உணர்ச்சி வசமாக பேசும் வேளையில் எனது ஆண் உறுப்பு மூலம் மதன நீர் வருவதை உணர முடிகிறது, நாங்கள் ஒரு நாளைக்கு 3 தடவை பேசுவோம், பேசும் போது மட்டும் இந்த மதன நீர் வருகிறது, மேலும் கூடுதலாக மதன நீர் வரும் போது லேசாக எனது ஆண் உறுப்பு நோவை உணர்கிறது. எனது சந்தேகம் எதுவென்றால்… இது தொடர்ந்து நீடிக்குமானால் (மதன நீர் வடிகிறது) எதிர் காலத்தில் எனக்கு ஏதும் பாலியல் குறைபாடுகள் வருமா? எனது உடம்புக்கு ஏதும் பாதிப்புகள் வருமா? தயவு செய்து இந்த கே ! ்வ க்கு பதில் தருமாறு பணிவாய் வேண்டுகிறேன், இந்த பதில் எனக்கும் என்னை போன்ற வாலிபர்களுக்கு ஒரு பயனுள்ளதாய் அமையும் என்று நம்புகிறேன்.

நன்றி

பதில் –

நண்பரே உங்கள் கேள்வி எனக்கு புரிகிறது இது ஒரு பொதுவான நிகழ்வு ஆபாசமான செய்தியை செவி மடுக்கும் போது அல்லது பார்க்க நேரிடும் போது மதன நீர் கசிய ஆரம்பிக்கும் இது ஆண்களுக்கு மட்டும் அன்று பெண்களுக்கும் பொருந்தும் இதனால் உடலுங்கு எந்த தீங்கும் ஏற்படாது. இதனால் பாலியல் குறைபாடு ஒன்றும் ஏற்பட வாய்ப்புகள் இல்லை. அதிக நேரம் ஆபாசமா உரையாடுவதனால் உணர்ச்சி பெருக்கு ஏற்பட்டு அதனை தணிக்காமல் விடுவதனால் விதை பகுதியில் சிறிய நோவு போன்ற உணர்வு ஏற்டுகிறது. இதனை தவிர்ப்பதற்கு சுயஇன்பத்தினை பலர் மேற்கொள்ளுகின்றனர். பெண்களுக்கு கூட அடி வயிற்றில் நோவு போன்ற உணர்வு ஏற்படலாம். எல்லோருக்கும் ஏற்படும் என்று சொல்ல முடியாது. மதனநீர் கசிவின் பின் உறுப்பை சுத்தமாக வைத்திருக்கவும். அது தொற்று ஏற்படாமல் தடுக்கும்.
நன்றி.

கேள்வி –
நான், ஒரு அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிகிறேன். பல பட்டங்கள் பெற்று, தற்போது, இலக்கியத்தில் முனைவர் பட்டமும் பெற இருக்கிறேன். என்னுடைய வயது, 45. நான் பார்ப்பதற்கு சுமாராக இருப்பேன். என்னுடைய கணவர் அழகாக இருப்பார். எனக்கு, இரண்டு குழந்தைகள். மகன் முதலாமாண்டு இன்ஜினியரிங் மாணவன். மகள் பிளஸ் 2 மாணவி. என்னுடைய கணவர் நற்குணம் படைத்தவர். எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர். ஆனால், ஒரு கோழை. இவருடைய கோழைத்தனத்தையே பலவீனமாகக் கருதி, இவருடைய தம்பிகள், இவரை அதட்டி பேசுவதை என்னால், சகித்துக் கொள்ள முடியாது. மேலும், பொருளாதாரத்திலும், படிப்பிலும் மிகவும் பின் தங்கியவர்.

என் கணவர், செக்ஸ் விஷயத்தில், சிறிது கூட ஆர்வமில்லாமல் இருப்பவர். ஆனால், என்மீது பிரியமாக இருப்பார். எனவே, எனக்கு இது ஒரு குறைபாடாகத் தெரியவில்லை. மேலும், எனக்கு, திருமணத்திற்கு பின் தான், “செக்ஸ்’ என்றால் என்ன என்பது தெரிய வந்தது. என்னுடைய கணவர், வேலைக்கு செல்வதில் அதிக ஆர்வமில்லாதவர். 10ம் வகுப்பில் தோல்வி யுற்றவர். பல்வேறு பொய்களைச் சொல்லி, என்னை திருமணம் செய்து கொண்டவர். எங்களது திருமணம், பெரியோர்கள் பார்த்து செய்த திருமணம். என் கணவர், எங்களுக்கு தூரத்து உறவினர். திருமணம் முடிந்த, ஓரிரு மாதங்களில், தன் உண்மையான கல்வித் தகுதியை என்னிடம் கூறியபோது, மிகுந்த ஏமாற்றமும், வேதனையும் அடைந்தேன். இதை என், மனதுக்குள்ளே வைத்து, என் பெற்றோர், உடன்பிறப்புகள் யாரிடமும், இதுவரை அவருடைய கல்வித்தகுதியை கூறவில்லை. ஏனெனில், என்னுடைய தம்பிகள் அனைவரும் பொறியாளராகவும், ஆசிரியராகவும், பொருளாதாரத்தில் முன்னணியில் உள்ளனர். அவர்களுக்கு முன்னால், என்னுடைய கணவர் தலை குனிந்து நிற்பதை நான் விரும்பவில்லை.

மிகக் குறைந்த சம்பளத்தில், பல்வேறு கம்பெனிகளில் வேலை பார்ப்பார். நின்று விடுவார். வேறொரு கம்பெனிக்கு உடனடியாகச் செல்ல மாட்டார். அவரிடம், நான் சண்டை போட்ட பின், ஏதாவது ஒரு கம்பெனியில் சேருவார். அவருக்கு சொந்த தொழில் செய்வதில் ஆர்வம் இருந்தது. ஆனால், மிகவும் கோழை. யாரைப் பார்த்தாலும், கூச்சப்படுவார். எனக்கு, சமையல் வேலை, வீட்டு வேலைகளில் உதவி செய்வார். பெண்களின் குணம் அதிகமாக காணப்படும். அன்பு, பணிவு, கனிவு, இரக்கம், பொறுமை, விட்டுக் கொடுத்தல் போன்ற பல குணங்களை உடையவர்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன், ஒரு கான்ட்ராக்ட் வேலை துவக்கி கொடுத்தேன். அதில், போதிய லாபம் இல்லை என்பதை உணர்ந்து, ஏதாவது, ஒரு ஆபீசில் வேலைக்குச் சேரும்படி கூறினேன். அவர், “எனக்கு வயதாகி விட்டது…’ எனக்கூறி மறுத்து வந்தார். அவருக்கு தற்போது வயது 46. இதுபற்றி, எங்கள் இருவருக்கும் சண்டை வந்து கொண்டேயிருக்கும். என்னுடைய மாமியாருக்கு, நான்கு மகன்கள் இருந்தும், எங்களுடனே கடந்த, 20 வருடங்களாக இருந்து வருகிறார். மாதந்தோறும், 500 ரூபாய்க்கு மருந்து மாத்திரைகள், அடிக்கடி மருத்துவ செலவு செய்வதும் வழக்கமாக இருந்தது.

இப்படி பல காரணங்களால், அவர் மீது வெறுப்பு அதிகரித்து வந்தது. நாங்கள் போடும் சண்டையைப் பார்த்து, பிள்ளைகள் நொந்து போயினர். பிள்ளைகள் என் பக்கம் இருக்கும் நியாயத்தை உணர்ந்து, தம் தந்தையிடம் வேலைக்கு போகும்படி கூறினர். ஒரு வழியாக கடந்த, நான்கு மாதங்களாக, ஒரு கம்பெனியில், 6,000 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார். ஒருவிதமாக வாழ்க்கையில் நிம்மதியுடன் அவர்மீது அன்பும், பரிவும் காட்டத் துவக்கினேன்.

பிரச்னை என்னவெனில், அவர் என்னுடன் சேர்ந்து படுப்பதில்லை. நான் அருகில் படுத் தாலும், என்னை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. சட்டை செய்வதில்லை. மறுநாள் காலை எப்பொழுதும் போல, என்னுடன் சகஜமாக பேசுவார், சிரிப்பார். இரவு படுத்தவுடன் மிக அமைதியாக தூங்கி விடுவார். இதைப்பற்றி அவரிடம் கேட்டதற்கு, “வேலைக்கு போகாமல் இருந்த போது, நீ என்னை கேவலமாக பேசியது, மனதுக்கு உறுத்தலாக இருக்கிறது…’ என்று காரணம் கூறுகிறார். நாங்கள், “செக்ஸ்’ வைத்து, ஒரு வருடத்திற்கு மேலாகிறது.

சில நேரங்களில் இவரைப் பார்க்கும்போது, எனக்கு கோபமாக வருகிறது. என்னை, அவர் உதாசினப்படுத்துவது போலவும், பெண்மைக்கே மிக இழிவு போன்றும் தெரிகிறது. இவருக்கு ஆண்மை குறைவு என்பது தெரிகிறது. மேலும், வேண்டுமென்றே என்னை பழிவாங்க வேண்டும் என்றும் செயல்படுவதாகத் தெரிகிறது.

கல்வி, பணம், குடும்பப் பின்னணி, அறிவு சம்பளம் என அனைத்து தகுதிகளிலும் மிக, மிகக்குறைவான ஒருவரிடம் இந்த ஒரு உறவுக்காக, வலிய போகிறோமே என்பதை நினைக்கும் போது, மனம் வேதனையடைகிறது. அப்படி சென்றும், நம்மை உதாசினப்படுத்துகிறாரே என எண்ணும் போது, மனம் மேலும் துடிக்கிறது. எனக்கு, அவரை எப்படியும் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம், என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. என்னுடைய சுகத்திற்காக, அவர் ஏங்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் நாள்தோறும் ஏற்படுகிறது.

ஆண்மையை தூண்டக்கூடிய மருந்துகள் ஏதேனும் இருந்தால், அதன் பெயரை குறிப்பிடவும். அதனால், வேறு ஆபத்து ஏதேனும் உண்டா என்பதையும் குறிப்பிடவும். இவருக்கு சர்க்கரை நோய் எதுவும் கிடையாது. ஆனால், ரத்த அழுத்தம் சிறிதளவு உண்டு. வாயுதொல்லை உண்டு. இந்த மருந்துகளை கடைகளில் சென்று வாங்குவதற்கு கூச்சமாக உள்ளது. அதற்கும் ஒரு வழி சொன்னால் நன்றாக இருக்கும். இந்த யோசனைகளையெல்லாம் விடுத்து, புதியதாக தாங்கள் ஏதாவது அறிவுரை கூறினாலும், அதன்படி நான் நடக்க தயாராக இருக்கிறேன். நானும் ஒரு சராசரிப்பெண். அனைத்து ஆசாபாசங்களும் என்னுள் பொதிந்து கிடைக்கின்றன. என்னால் அன்றாட அலுவல்களை கூட ஒழுங்காக பார்க்க முடியவில்லை. இந்த ஒரு விஷயம் நீங்கலாக, மற்றபடி என் கணவர் நல்லவர். பொறுப்பாகவும், சிக்கனமாகவும் இருப்பார். என்னுடைய சம்பளத்தை, அப்படியே கொடுத்து விடுவேன். எந்தவொரு செயலையும், என்னை கலக்காமல் செய்ய மாட்டார். நான் சொல்வதை அப்படியே கேட்பார். எந்தப் பெண்ணையும் ஏறெடுத்து பார்க்க மாட்டார். சிகரெட், மது தொடுவதில்லை.

பொருளாதாரத்தில் ஓரளவு தன்னிறைவு பெற்று, சமூக அந்தஸ்துடன் வாழும் எனக்கு, பொருத்தமான நல்ல அறிவுரை கூறுங்கள் அம்மா.

— இப்படிக்கு அன்பு மகள்.

பதில் :

அன்புள்ள மகளுக்கு,

உன் கடிதம் கிடைத்தது. முழுவதும் படித்தேன். உன் கடிதத்தை மேலோட் டமாக படித்தால், உன் கணவரின் மீது குற்றச்சாட்டுகளை நீ அள்ளி வீசியிருப்பதாய் தெரியும். ஆனால், கடிதத்தின் அடிநாதமாய் உன் கணவர் மீதான காதல்தான் தெரிகிறது. என்னதான் அவர் தன் கல்வித்தகுதியை மறைத்து, உன்னை மணம் செய்திருந்தாலும் தாம்பத்யத்திற்காக உன்னை ஏங்கச் செய்தாலும், உன் இதயத்தில் அவருக்கு தனி இடம் ஒதுக்கி வைத்திருக்கிறாய். “கோணலாய் இருந்தாலும் என்னுடையதாக்கும்’ என்கிற மனநிலை கொண்டிருக்கிறாய். கணவனிடம் தாம்பத்யம் கிடைக்கவில்லை என்பதற்காக, வழிதவறி போய் விடாமல், அவரை தாம்பத்யத்திற்கு இழுக்கும் மருந்து கேட்டிருக்கிறாய்.

உன் கணவர், தன் மனைவி தன்னை விட அதிகம் படித்து பெரிய வேலையில் இருக்கிறாள் என்கிற தாழ்வு மனப்பான்மையில் உழல்கிறார். தவிர, தன்னை வேலைக்கு போகச் சொல்லி தன் மனைவி, குழந்தைகள் முன் அனுதினம் நிந்திக்கிறாளே என்கிற பழி வெறியும் அவரிடம் இருக்கிறது. அவரிடம் ஆண்மைக் குறைவு எதுமில்லை என நம்புகிறேன்.

நான்கு மகன்கள் வீட்டில், உன் கணவர் வீட்டை தேர்ந்தெடுத்து உன் மாமியார் இருப்பது உனக்கு அனுகூலமான விஷயமே. அவருக்கு செய்யும் மருந்து செலவுகளை நினைத்து பெரிதாய் வருத்தப் படாதே. உன் கணவரின் மீதிருக்கும் அதிருப்தியை மாமியாரிடம் காட்டாதே.

உனக்கும், உன் கணவனுக்கும் இருக்கும் முட்டல் மோதல்களை, மகன், மகளிடம் அப்பட்டமாக்கி, தந்தையின் மீது பிள்ளைகளுக்கு மனக்கசப்பு ஏற்பட அடிகோலி விட்டாய். இதையெல்லாம் நீ தவிர்த்திருக்கலாம். குடிக்காத, புகைக்காத, வீட்டு வேலைகள் செய்யும் கணவர்மார்கள் மிக அபூர்வம்.

கல்வி, பணம், குடும்பப் பின்னணி, அறிவு, சம்பளம் என, அனைத்து தகுதிகளிலும் மிக மிகக் குறைவான கணவரிடம் தாம்பத்யம் என்கிற ஒன்றுக்காக வலியப் போகிறோமே என்கிற உன் எண்ணம் தேவையற்றது. தாம்பத்யத்திற்குள் பிரவேசிக்கும் போது, எல்லா புற இணைப்பு களையும் கத்தரித்து விட்டு, காதல் மிகு மனைவியாக கணவனை அணுகுதல் நலம். கணவனும் பழிவாங்கும் எண்ணத்தை தவிர்த்து, காதல் மிகு கணவனாக மனைவியை அணுகுதல் உசிதம்.

உங்களிருவருக்கும் இடையே, ஈகோ புகுந்து விளையாடுகிறது. அதை, “ஓடு’ என விரட்டி விட்டால், உங்களுக்குள் எல்லாம் சுமுகமாகி விடும் மகளே! நீ உன் கணவனுடன் தனித்து மனம் விட்டு பேசு. அவருடைய சமூக மரியாதைக்காகத்தான் அவரை பணிக்கு செல்ல நச்சரித்ததாக சொல்.

கடந்த இருபது ஆண்டுகளில், உங்களுக்குள் நிகழ்ந்த அழகிய காதல் பொழுதுகளை இருவரும் அசை போடுங்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம், உணவை சேர்ந்து உண்ணுங்கள். ராசியான பட்டுப்புடவை வைத்திருப்பாய். அதை கட்டிக்கொண்டு கணவனுடன் வெளியே போய் வா.

உயர் ரத்த அழுத்தத்திற்கு தொடர்ந்து மாத்திரைகள் எடுத்து வந்தாலும், தற்காலிக ஆண்மைக்குறைவு ஏற்படும். குடும்ப மருத்துவரிடம் உன் கணவனை அழைத்துச் சென்று மாத்திரைகளை மாற்றலாம். நீண்ட நேர தாம்பத்யத்திற்கான மாத்திரைகளை நாமே மருந்தகத்தில் வாங்கி உட்கொள்வது ஆபத்தானது. அதை மருத்துவரிடம் கேட்டு பெறலாம். அலோபதியிலும், ஹோமி யோபதியிலும் ஆண்மையை நீட்டிக்கும் சிறப்பான மாத்திரைகள் பல உள்ளன.

சில ஆண்களுக்கு தொழில் தோல்வி, தொடர் குடும்ப சண்டைகள் காரணமாக, “மேல் மெனோ பாஸ்’ எனப்படும் தற்காலிக ஆண்மைக்குறைவு ஏற்படும். இதம்பதமாய் மனைவிமார் அணுகி அக்குறையை போக்கலாம். ஒரு மனைவிக்கு, கணவனிடம் கட்டாயமான தாம்பத்ய உரிமை உண்டு. அந்த உரிமையை சாம தான பேத தண்ட முறைகளில், ஒரு புத்திசாலி மனைவி வென்றெடுக்கலாம். கணவனை தொட்டு தடவி அங்க அசைவுகளால் பேசி உசுப்பேத்தலாம்.

பொருளாதாரத்தில் ஓரளவு தன்னிறைவு பெற்ற சமூக அந்தஸ்துடன் வாழும் நீயும், தாம்பத்யத்திலும் தன்னிறைவு அடைவாய் மகளே! வாழ்த்துக்கள்!